எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வெள்ளத்தால் அடுத்த 10 ஆண்டுகளில் 16 ஆயிரம் பேர் உயிரிழக்கும் ஆபத்து

புதுடில்லி, ஆக. 21 -இந்தியாவில் மழை- வெள்ளத்தால் அடுத்த 10 ஆண்டுகளில் 16 ஆயிரம் பேர் உயிரிழக்கும் ஆபத்து உள்ளதாகவும், சுமார் 47 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான இழப்புக்கள் ஏற்படும் என்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மிகவும் மேம்படுத்தப் பட்ட, முன்னேறிய செயற்கைக் கோள் வசதிகளை கொண்டு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தாலும், மாநில நிர்வாகங்களின் கட்டமைப்பு வசதிகள் பேரிடர் ஆபத்தை உண்டுபண்ணும் வகையிலே உள்ளன என்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் கூறியுள்ளது.

இமாச்சலப்பிரதேசத்தை தவிர மற்ற எந்த ஒரு மாநிலமும் தனக்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை; அதிலும் குஜராத் மாநிலம் மிகவும் மோசம் என்று கூறியுள்ள பேரிடர் மேலாண்மை ஆணையம், நாட்டின் 640 மாவட்டங்கள் கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்படும் ஆபத்தில் உள்ளன; கடுமையான பேரிடர் சமயங்களில் ஏற்படும் ஆபத்துகளை தடுத்தல் மற்றும் குறைத்தல், பேரழிவிற்கான நிவாரணம், மறுவாழ்வு போன்றவற்றில் இந்த மாவட்டங்கள் பின்தங்கியே உள்ளன என்றும் தெரிவித் துள்ளது.

பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய நிவாரணப் பணிகள் குறித்தும், நீர்நிலைகள் மற்றும் அதன் வழித்தடங்களில் அமைந்துள்ள ஆக்கிரமிப்புகளை அகற் றுவது குறித்தும் மாநில நிர்வாகங்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டிருந்தது. ஆனால், இதை எந்த மாநிலமும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை என்பதையும் பேரிடர் மேலாண்மைஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner