எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அய்தராபாத் மாணவர்கள் மோடிக்கு திறந்த மடல்

அய்தராபாத், ஆக.21 நாடு முழுவதும் மருத்துவக் கல்வி பயில நீட் என்கிற பெயரால் நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப்பட் டுள்ளது. நீட் தேர்வில் மதிப்பெண்கள் பெற் றாலும், பணமில்லை என்பதால் மருத்துவக் கல்வி பயில முடிய வில்லை என்று பிரதமர் மோடிக்கு அய்தராபாத் மாணவர்கள் திறந்த மடல் எழுதியுள்ளதாக டெக்கான் கிரானிக் கிள் ஆங்கில நாளிதழ் (16.8.2018) தகவல் வெளியிட் டுள்ளது.--

நீட் தேர்வில் 720க்கு 400 முதல் 480 மதிப்பெண்கள்வரை பெற்ற மாணவர்கள், நீட் தேர்வால் தங் களின் மருத்துவ கனவு நிறைவே றாமல் போய்விட்டது என்று குறிப் பிட்டு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி யுள்ளனர். நீட் தேர்வு கட்டாயமாக்கப் பட்டதன் முக்கிய நோக்கமாக, மருத்துவக்கல்வி பயில விரும்பும்  மாணவர்களுக்கு மனச்சுமை மற்றும் பொருளாதார சுமைகளிலிருந்து விடுவிப்பதாகக் கூறப்பட்டது. மருத்துவக் கல்லூரிகளில் அதிக பணம் செலவழித்து மருத்துவர்கள் ஆவதைத் தடுப்பதாகக்கூறி, மாண வரின் தகுதிநிலை மட்டுமே கவனத்தில் கொள்ளப்படும் என்று கூறப்பட்டது. ஆனால், இவை யாவுமே பின் பற்றப்படவில்லை.

2018ஆம் ஆண்டு நீட் தேர்வில் 720 மதிப்பெண்களில் 400 முதல் 480 மதிப்பெண்கள் பெற்றிருந்தபோதி லும், அரசு மருத்துவக் கல்லூரிகளில்  சேர்க்கை வாய்ப்புக் கிட்ட வில்லை. ஒரு மதிப்பெண்ணில்கூட வாய்ப் பில்லாமல் போகிறது. இது அதிக மதிப்பெண்கள் எடுக்கும், தகுதி யுள்ள மாணவர்களின் நிலையாக உள்ளது. ஆனால், நீட் நுழைவுத் தேர்வில் 720 மதிப்பெண்களில் 150 மதிப்பெண்கள் மட்டுமே பெற்ற வர்கள் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேரமுடிகிறது.

தகுதியுடைய மாணவர்களால் பணம் இல்லாத காரணத்தால் மருத்துவக்கல்வியைப் பெற முடிய வில்லை.  ஆனால், பணத்தைக் கொடுத்து படிப்பவர்கள், எதிர் காலத்தில் எந்த மாதிரியான மருத் துவர்களாக வருவார்கள்? அவர் களால் பணம் செலுத்த முடியா விட்டால், அவர்களின் குழந்தை களும் வீட்டிலேயே முடங்கிப் போவார்களா? எங்களைப்போன்ற அதிக மதிப் பெண்கள் பெற்ற எண்ணிலடங்கா மாணவர்கள் உள் ளனர். மருத்துவ கனவு காண்பவர்கள் ரூபாய் 13 லட்சத்திலிருந்து 14 லட்சம் என பணம் இருந்தால்தான் மருத்துவக் கல்வியில் இடம் கிடைக்குமா?

இவ்வாறு மாணவர்கள் மோடிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்கள்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner