எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கையும் களவுமாக...

கடந்த மே மாதத்தில் கருநாடக மாநிலத்தில் பெரும்பான்மையில்லா விட்டாலும், தனிப் பெரும் பான்மை என்று கூறி, பா.ஜ.க. தகிடுதத்தம் செய்து ஆட்சிக்கு வந்துவிட்டது. எனினும், சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க அவருக்கு 15 நாள்கள் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

இவர் பதவியேற்கக் கூடாது என்று உச்சநீதிமன் றத்தில் வழக்குத் தொடர்ந்தும் பதவியேற்புக்குத் தடை விதிக்க நீதிமன்றம் மறுத்து விட்டது. இதையடுத்து அன்று காலை முதல்வராக எடியூரப்பா மட்டும் பதவி யேற்றுக்கொண்டார். ஏனைய அமைச்சர்கள் யாரும் பங் கேற்கவில்லை.

பச்சைத்துண்டுஅணிந்து கொண்டு விவசாயிகள் மற் றும் கடவுள்மீது ஆணை யிட்டு உறுதிமொழி ஏற்றார். இந்நிலையில் காங்கிரசு ஜே.டி.எஸ். எம்.எல்.ஏ.,க்கள் தர்ணா போராட்டத்தில் ஈடு பட்டனர்.

எடியூரப்பா பதவியேற்ற 6 மணிநேரங்களில் 4 அய்.பி.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து உத்தர விட்டார். இதுகுறித்து முதல் வர் அலுவலக செய்திக் குறிப்பில் கூறுகையில், ரயில்வே கூடுதல் டி.ஜி.பி.யாக இருந்தஅமர்குமார்பாண்டே புலனாய்வுத் துறை ஏ.டி.ஜி.பி. யாக மாற்றப்பட்டார்.

அதுபோல், கருநாடக மாநில ரிசர்வ் போலீஸ் துணைஅய்.ஜி.யாகஇருந்த சந்தீப் பாட்டீலை புலனாய் வுத் துறை துணை அய்.ஜி. யாக மாற்றம் செய்து உத்தர விட்டுள்ளார். அதுபோல், பிதார் மாவட்ட எஸ்.பி.,யாக இருந்த எஸ்.தேவராஜா பெங்களூரு நகரத்தின் துணை ஆணையராகவும், பெங்களூரு ஊழல் தடுப்புப் பிரிவு எஸ்.பி.,யாக இருந்த கிரிஷ் பெங்களூரு நகர வடகிழக்குப் பகுதியின் துணை ஆணையராகவும் இடமாற்றப்பட்டு உள்ளனர்.

இதன் பின்னணி என்ன தெரியுமா?

பகுத்தறிவாளர்களான கல்புர்கி, கவுரி லங்கேஷ் படுகொலைகாரர்களான  சனாதன் சன்ஸ்தா என்னும் அமைப்பின் இந்து வெறி யர்களை காவல்துறை நெருங் கிவிட்டது. கைகளில் காப்புப் போடத் தயாராகி விட்டது என்றநிலையில்தான்,அதற் குக் காரணமான  காவல் துறைஅதிகாரிகள்அவசர அவசரமாகப் பந்தாடப்பட் டனர்.

அந்தோபரிதாபம்-அல் பாயுசாக எடியூரப்பா அமைச்சரவை அஸ்தமனம் ஆகிவிட்டது. அவர்கள் நம்பும் கடவுளின் சக்தியோ சக்தி!'

காங்கிரசு, அய்க்கிய ஜனதா தளம் கூட்டணி அரசு குமாரசாமி தலைமையில் அமைந்த நிலையில், கொலைகாரர்கள் கையும் களவுமாகப் பிடிபட்டனர் என்பதைக் கவனத்தில் கொள்க!

- மயிலாடன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner