எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அதிக மழை பொழியும்போதோ - மேட்டூர் அணை நிரம்பி தண்ணீர் திறந்துவிடப்படும்போதோ - தண்ணீரைத் தேக்கி வைக்கத் தமிழ்நாட்டில் அணைகள், தடுப்பணைகள் இல்லாமையால், வீணாகத் தண்ணீர் கடலில் கலக்கிறது.

கொள்ளிடத்தில் பாயும் அதிக நீரைத் தேக்கி வைக்க அங்கு தடுப்பணை கட்டப்படும் - ரூ.410 கோடி செலவில் என்று அன்றைய முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா சட்டப்பேரவையில் 2014 இல் அறிவித்தாரே நினைவு இருக் கிறதா அ.தி.மு.க. அரசுக்கு?

சந்தேகம் இருந்தால் அம்மா ஆவியுடன்' பேசி முடிவு செய்துகொள்ளலாம்.

ஒதுக்கப்பட்டது யாருக்கோ!

கால்வாய்கள், குளங்கள் தூர்வாரப்பட ரூ.4000 கோடி ஒதுக்கப்பட்டதாக அ.இ.அ.தி.மு.க. அரசு கூறியதே - ஆனால், அந்தப் பணி நடைபெற்றதாகத் தெரியவில்லையே!

ஆமாம், ஒதுக்கப்பட்டது யாருக்கோ!

எச்சரிக்கை!

கரூர் அருகில் மோகனூர் காவிரி ஆற்றுப் பாலத்தில் கைப்பிடி சுவரில் வைத்து செல்பி எடுத்தபோது நான்கு வயது மகன் தன்வந்த் தந்தையின் கண்முன்னே ஆற்றில் விழுந்து பரிதாப மரணமடைந்தான்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner