எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வாஜ்பேயி மருமகள் கருணா சுக்லா குற்றச்சாட்டு

புதுடில்லி, ஆக.24 முன்னாள் பிரதமர் வாஜ்பேயின் மரணத்தை பிரதமர் மோடி யும், பாஜக தேசிய தலைவர் அமித் ஷா ஆகியோர் அரசியல் லாபத்திற்காக பயன்படுத்துவதாக முன்னாள் பிரதமர் மறைந்த வாஜ்பேயியின் மருமகள் கருணா சுக்லா குற்றம் சாட்டியுள்ளார்

டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் பிரத மரும், பாரதீய ஜனதா மூத்த தலை வருமான வாஜ்பாய் கடந்த 16 -ஆம் தேதி மறைந்தார். அவரது மறைவுக்கு குடி யரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணைக் குடியரசுத் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, காங்கிரசு தலைவர் ராகுல் காந்தி மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித் தனர்.  அவரின் இறுதி ஊர்வலத்தின்போது அமித் ஷா மற்றும் மோடி 5 கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்றனர்.

இதனைத் தொடர்ந்து அவரது சாம் பலை நாடு முழுவதும் உள்ள ஆறுகளில் கரைப்பதற்கு முடிவு செய்யப்பட்டது.  இதற்காகப் பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர்கள் அனைவரிடமும் சாம்பல் அடங்கிய கலசம்' வழங்கப் படுகிறது.

அரசியல் லாபத்திற்காக....

இந்தநிலையில், முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் மரணத்தை பிரதமர் நரேந் திர மோடியும்,  பாஜக தேசிய தலைவர் அமித்ஷா உள்ளிட்டோர் அரசியல் லாபத்திற்காக பயன்படுத்துவதாக அவ ரின் மருமகள் கருணா சுக்லா குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:

நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் பதிலளிப்பார்கள்

முன்னாள் பிரதமர் வாஜ்பேயின் மரணத்தை பிரதமர் மோடியும், பாஜக தேசிய தலைவர் அமித் ஷா ஆகியோர் அரசியல் லாபத்திற்காக பயன்படுத்து கின்றனர். 2019- ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை நினை வில் வைத்துக்கொண்டே அமித்ஷா மற்றும் பிரதமர் மோடி இறுதி ஊர் வலத்தில் நடந்து சென்றனர். அவருக்காக 5 கி.மீ நடந்து சென்றவர்கள் அவரின் கொள்கைகளுக்காக 2 அடிகள்கூட எடுத்து வைத்தால் நன்றாக இருக்கும். அனைவரது உண்மை முகத்தை அறிந்து கொண்டுள்ள மக்கள் நடக்க இருக்கும் தேர்தலில் பதில் அளிப்பார்கள்.

வாஜ்பேயின் பெயரை தவறாக பன்படுத்துவது எனக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது. சட்டீஸ்கர் முதலமைச்சர் ராமன் சிங் வாஜ்பாய் இறந்த பிறகு அவரின் பெயரில் பல திட்டங்களை அறிவித்து இருக்கிறார். அவர் மறைவிற்கு முன்பே ஏன் அதனை செய்யவில்லை'' என கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner