எழுத்துரு அளவு Larger Font Smaller Font

"அற்புதங்கள்!''

மகான்களிடமும், தெய்வ அனுக்கிரகம் உள்ளவர்களி டமும் தர்க்க சாஸ்திரத்தை நம்பக்கூடாது; விளைவு விபரீத மாகும் என்று கூறும் தினமலர்' வார மலர் ஒரு கதையைச் சொல்லுகிறது.

ஒரு தீபாவளி நாள் திரு நெல்வேலி சம்பா நதி மண்டபம். ஆங்கே கோடகநல்லூர் சுந்தர சுவாமிகள் என்ற மகான் ஒருவர் - அவரிடம் பக்தர்கள் ஆசி வாங்கிக் கொண்டிருந்தனர்.

குஜராத்திலிருந்தும், ராமச் சந்திர மேத்தா என்பவர் சில அடியார்களுடன் அவரைத் தரிசிக்க வந்துள்ளார். அந்த மேத்தா விலை உயர்ந்த பட் டாடை அணிந்திருந்தார்.

அந்த மகானோ உபதேசித் துக்கொண்டிருந்தார்!சாப்பிடும் போது அன்னம், வலது உள்ளங் கையில் படாமல் உண்பது உத் தமம்; ஏனென்றால், வலது கை உள்ளங்கையில் நெருப்பு இருக்கிறது'' என்றார்.

அந்தநேரத்தில்சம்பா நதி மண்டபத்தில் எழுந்தருளியி ருக்கும் காமாட்சியம்மன் கோவில் அர்ச்சகர் சுப்பிர மணிய பட்டர் அங்கு வந்தார். தள்ளாத வயதில் பூஜைப் பொருட்களையும், ஒரு பாத் திரத்தில்நெருப்பையும்எடுத்து வந்தார். வழியில் மழை பெய்த தன் காரணமாக அவரிடம் இருந்த அக்னி அணைந்துவிட்டது.

அதை அறிந்த மகான் தன்னருகில் இருந்த சீடரை அழைத்து, பட்டர் பூஜை செய்யவேண்டும்; பக்கத்தில் உள்ள வீரய்யன் கோவில் தெரு வுக்குப் போய் யார் வீட்டிலாவது நெருப்புக் கொண்டு வந்து பட்டரிடம் கொடுங்கள் என்றார்.

அவ்வாறு செய்ய சீடரும் எழுந்தார்.

அந்த நேரத்தில் குஜராத்திலிருந்து மகானைத் தரிசிக்க வந்த அந்த மேத்தா, சுவாமி, சிறிது நேரத்திற்குமுன், வலது உள்ளங்கையில் நெருப்பு இருப் பதாக சொன்னீர்கள். அப்படியிருக்க அக்னி கொண்டு வரும் படி இன்னொருவரை ஏன் ஏவ வேண்டும்? தாங்களே தங்கள் உள்ளங்கையில் உள்ள நெருப்பை வெளிப்படுத்தி பட் டருக்கு உதவக்கூடாதா'' என்று கேட்டார்.

உடனே மேத்தாவின் மேலாடையைக்கேட்டுவாங்கி, பட்டாடையின் ஒரு சிறு பகு தியை உள்ளங்கையில் வைத் துத் தேய்த்தார். மின்னல் மின் னியதைப்போலவே தீப்பிடித்து எரியத் தொடங்கியது'' என்று எழுதிவிட்டு, தினமலர்' முத் தாய்ப்பாக என்ன எழுதுகிறது?

மகான்களிடம் தர்க்கம் பேசி ஆராய்ச்சி செய்து பய னில்லையாம்!''

மெல்லிய துணியை தொடர்ந்து தேய்த்தால் (அந்தக் காலத்தில் சக்கி முக்கிக் கல்லைக் கொண்டு தீயை உண் டாக்கவில்லையா?) தீ வருவது புரிந்துகொள்ளக் கூடியதே!

ஆனால்,ஒன்று,உள்ளங் கையில் தீ இருப்பது உண்மை யானால், அவருக்குப் பட்டுத் துணி ஏன் தேவைப்பட்டது? என்பது முக்கியமான கேள்வி.

பொதுவாகஅவர்கள்சொல் லுவது பிராமணாளின் வலது கையில் அக்னி உள்ளது; அத னால்தான் வலது கையால் அவர் கள் ஆசீர்வதிப்பதில்லை' என்று.

என்ன தகிடுதத்தம், பித்த லாட்டம்!

- மயிலாடன்

குறிப்பு: இந்த அற்புதங்களை சங்கராச்சாரியார்கள் ஏற்றுக் கொள்வதில்லை என்பது குறிப் பிடத்தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner