எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மும்பை, ஆக. 26 -மும்பைச் சிறையில், வாராக் கடன் புள்ளி மல்லையாவுக்காக, 3 மின் விசிறிகள், பளீச்சென்ற வெஸ்டர்ன் டாய் லெட், 40 இன்ச் எல்சிடி தொலைக்காட்சி ஆகியவற்றுடன் சொகுசான அறையை சிபிஅய் ஒதுக்கியுள்ளது. மேலும், நூலகம் மற்றும் மருத்துவ வசதிகளும் ஏற்படுத்தப் படும் என்று தெரிவித்துள்ளது.

லண்டன் நீதிமன்றத்தில்

சாராய ஆலை முதலாளியான விஜய் மல்லையா, இந்திய வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாயைக் கடனாக வாங்கி விட்டு, அதனைத் திருப்பிச் செலுத்தாமல் இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகருக்கு தப்பினார். தற்போது அவரை இந்தியாவுக்கு கொண்டுவர, சிபிஅய்யும், அமலாக்கத் துறையும் முயற்சி மேற்கொண்டு வருகின் றன. இதற்காக லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்தை நாடியுள்ளன. ஆனால், தன்னை இந்தியாவுக்கு அனுப்பக்கூடாது என்றும், இந்தியச் சிறைகளில் தான் சித்திரவதை செய்யப்படலாம்; தனக்குப் பாதுகாப்பு இருக்காது என்றும் மல்லையா லண்டன் நீதிமன்றத்தில் கூறிவருகிறார். குறிப்பாக, இந்திய சிறைகளில் சூரிய வெளிச்சம்கூட இருக்காது, சுத்தமான அறை கள் இருக்காது என்றும் அவர் புகார் கூறி வருகிறார். லண்டன் நீதிமன்றமும் இதனை ஏற்றுக் கொண்டு, மல்லையாவை இந்தி யாவுக்கு நாடுகடத்தும் பட்சத்தில், அங்கு அவர் பாதுகாப்பாக நடத்தப்படுவாரா? என்ற கேள்வியை அண்மையில் எழுப்பி யது. மல்லையா அடைக்கப்படும் சிறையில் உள்ள வசதிகளையும் கேட்டது. இதை யடுத்து மும்பை ஆர்தர் சாலை சிறையில் 12-ஆம் எண் அறையில்தான் மல்லையா அடைக்கப்படுவார் என்றும், இந்த சிறை அறை எப்படி இருக்கும், என்னென்ன வசதி கள் உள்ளன என்பது குறித்துமான வீடியோ ஒன்றை சிபிஅய் அதிகாரிகள் லண்டன் நீதி மன்றத்தில் தற்போது தாக்கல் செய்துள்ளனர்.

ஆர்தர் சாலை சிறையின் 12-ஆம் எண் அறையில், நவீனமான வெஸ்டர்ன் டாய் லெட், 6 மின்விளக்குகள், 3 மின்விசிறிகள், சுவற்றில் வெள்ளை நிற பெயிண்ட், 40 இஞ்ச் எல்சிடி தொலைக்காட்சி ஆகிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன; மருத்துவ வசதிகளும் இருக்கின்றன; மேலும், மல் லையா தங்க வைக்கப்பட்டுள்ள சிறை கிழக்கு பார்த்ததாகும்; எனவே அங்கு சூரிய வெளிச்சத்துக்கு பஞ்சமே இல்லை; மல்லையா விரும்பினால் அவருக்கு அறை யில் நூலகமும் அமைத்து கொடுக்கப்படும் என்று வசதிகளை சிபிஅய் அடுக்கியுள்ளது. இதனை லண்டன் நீதிமன்றம் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க உள்ளது.மக்களுக்கான போராட்டங்களில் கைதாகி சிறை செல் வோரெல்லாம் சித்திரவதை செய்யப்படும் நிலையில், மோடியின் கார்ப்பரேட் ஆட்சி யில் மக்கள் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற நபருக்கு,  சொகுசு வசதிகள் செய்து தரப்படுவது பெரும் வெட்கக்கேடாக அமைந்துள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner