எழுத்துரு அளவு Larger Font Smaller Font

65 மாவட்டச் செயலாளர்கள் முன்மொழிந்தனர்

சென்னை, ஆக.26 திமுக தலைவர் மற்றும் பொருளாளர் பதவிக்கான தேர்தல் நாளை மறுநாள் நடை பெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று (26.8.2018) காலை 10 மணி முதல் மாலை 4 மணிவரை நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலினும், பொருளாளர் பதவிக்கு துரைமுருகனும் போட்டி யிடுகின்றனர்.

இன்று வேட்புமனு தாக்கல் செய்வதை ஒட்டி காலை மெரி னாவில் உள்ள கலைஞர் நினைவிடத்திற்கு வந்த மு.க. ஸ்டாலின், மரியாதை செலுத்தினார். அதேபோல, துரைமுருகனும் மரியாதை செலுத்தினார். இதனை அடுத்து, அவர்கள் அண்ணா அறிவாலயம் வந்த அவர்கள் வேட்புமனுவை அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதியிடம் தாக்கல் செய்தனர். மு.க.ஸ்டாலினை 65 மாவட்டச் செயலாளர்கள் முன் மொழிந்துள்ளனர்.

எதிர்த்து வேறு யாரும் போட்டியிட வாய்ப்பு இல்லை என்ப தால், இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner