எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தமிழர் தலைவர் பேட்டி

சென்னை ஆக.26     இரங்கல் கூட்டத்தில் அரசி யல் பார்க்கவேண்டாம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

நேற்று (25.8.2018) சென்னை புரசை வாக்கத்தில் நடைபெற்ற கலைஞர் படத்திறப்பு நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பங்கேற்று திரும்பியபொழுது, செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:

அரசியல் நாகரிகம்

செய்தியாளர்: கலைஞர் நினைவேந்தலுக்கு ஆதரவும், எதிர்ப்பும் வந்திருக்கிறதே, அதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

தமிழர் தலைவர்: பொதுவாக, ஒரு இரங்கல் நிகழ்ச்சிக்குப் பலரையும் அழைப்பது என்பதும், அழைக்காமலேயே கலந்துகொள்வது என் பதும் சிறந்த அரசியல் நாகரிகம்.

அந்த அரசியல் நாகரிகத்தை யார் எந்த அளவிற்குக் கடைபிடிக்கிறார்கள் என்ப தைப் பொறுத்துத்தான் இனிமேல் அவர் களைப்பற்றிய முடிவிற்கு சமூகம் வரும்.

வீர வணக்க நிகழ்ச்சி

செய்தியாளர்:சட்டப்பேரவைவைரவிழாக் கூட்டத்திற்கு பா.ஜ.க.வை அழைக்க வேண்டாம் என்று தி.மு.க. தலைமை அன்றைக்குச் சொல்லியது. ஏனென்றால், திராவிட இனத் தையே அழிக்க நினைக்கிறார்கள். நாம் ஏன் அவர்களை அழைக்கவேண்டும் என்று வேண்டாம் என முடிவெடுத்தார்கள். இன்றைக்கும் திராவிடம் இல்லா தமிழகம் என்றுதான் பா.ஜ.க.வுடைய கொள்கையாக இருக்கிறது. இப்பொழுது  மட்டும் அவர்களை அழைக்கலாமா?

தமிழர் தலைவர்: இந்தப் பிரச்சினையில் கொள்கை ஒரு பிரச்சினையல்ல. இது இரங்கல் நிகழ்ச்சி - வீர வணக்க நிகழ்ச்சி. ஒரு தலைவருக்கு வீர வணக்க நிகழ்ச்சி.  இராஜாஜி அரங்கத்தில் கலைஞர் அவர்களுடைய உடல் வைக்கப்பட்டிருந்தபொழுது, எல்லாக் கட்சித் தலைவர்களும் மரியாதை செலுத்தினார்கள். அதுபோன்றதுதான் இதுவும்.

இவ்வாறு செய்தியாளர்களிடம் திராவி டர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி குறிப்பிட்டார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner