எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஆக. 27 தமிழகத்தில் பின் பற்றப்பட்டு வரும் 69% இடஒதுக்கீடு செல்லாது என்று அறிவிக்கக் கோரி, சென்னையைச் சேர்ந்த அன்னபூரணி மற்றும் அகிலா என்ற மாணவர்கள் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மாணவர்கள் தொடர்ந்த வழக்கில், தமிழகத்தில் பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகளில் 69% இட ஒதுக்கீட்டால் பொதுப் பிரிவு மாணவர்களுக்கு சிக்கலாக இருப்பதாக கூறி அந்த இட ஒதுக்கீட்டை செல்லாது என்று அறிவிக்கக் கோரியிருந்தனர்.

இந்த வழக்கு குறித்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில், இடஒதுக்கீடு குறித்து சட்ட மன்றத்தில் சிறப்பு மசோதா தாக்கல் செய்யப்பட்டப் பிறகே இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டதாக தனது மனுவில் குறிப்பிட்டிருந்தது.

இதனை ஏற்ற நீதிபதிகள், தமிழ கத்தில் 69% இடஒதுக்கீட்டிற்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளனர். மேலும் இது தொடர்பான கூடுதல் மனுக்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் தடை விதித்துள்ளனர்.

மேலும், இடஒதுக்கீடு 50% மேல் இருக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் கடந்த 1992இல் தீர்ப்பு அளித்திருந்தது. அந்த தீர்ப்பிற்கு எதிராக இந்த 69% இடஒதுக்கீட்டை கொண்டுவந்ததா என்பதை குறித்து விசாரணையை வரும் நவம்பர் மாதத்திற்கு நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner