எழுத்துரு அளவு Larger Font Smaller Font

'அக்னி பகவான்!'

லண்டன் மற்றும் இங்கிலாந் தின் பல இடங்களில் வாழும் தமிழர்களின்வீடுகளில்தீ விபத்துகள் அடிக்கடி ஏற்படு வதாக லண்டன் தீயணைப்புப் பிரிவு எச்சரித்துள்ளது.

வடக்கு லண்டன் வெம்பிளி நீஸ்ட்ஸ் பகுதியில் அமைந்துள்ள தமிழர்களின் வீட்டில் வெள்ளிக் கிழமை அன்று தீ விபத்து ஏற்பட்டது.

சாமிக்கு பற்ற வைத்த விளக்கு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டமையினால், வீடு முழுமையாக சேதமடைந் துள்ளது.நடுத்தரமக்கள்வாழும் தொடர் தொகுதி வீடுகள் என்ப தால் அருகிலிருந்த வீடுகளுக்கும் தீ பரவி கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தீவிபத்து ஏற் பட்ட வீட்டில் வசித்த தமிழர் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் வெள்ளிக்கிழமையன்று  மேல் மாடியில் உள்ள பூஜை அறையில் இருந்த விளக்கினை பற்ற வைத்துள்ளார். அவ்வாறு பற்ற வைத்தவர் அதை அணைக் காமல் அங்கிருந்து சென்றுள்ளார்.

குளிரான காலநிலைக்கு ஏற்ற வகையில் அய்ரோப்பிய நாடுகளில் உள்ள வீடுகள் நூற்றுக்கு 80 விழுக்காடு பல கையினாலேயே கட்டப்படுகிறது.. இவை தீப்பற்றும் போது இலகு வாக பாதிக்கக் கூடிய ஒன்றாகும். இங்கிலாந்தில் குடியேறியுள்ள தமிழர்களின் வீடுகள் தொடர்ந்து இவ்வாறு தீப்பற்றுவதாகவும், அவ்வாறான தீ விபத்துக்களுக்கு முக்கிய காரணம் கடவுள் சிலை களுக்கு முன்பு ஏற்றப்படும் விளக்கு மற்றும் பத்திகளாகும் என லண்டன் தீயணைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்புத்துறையோடு ராணு வமும் இணைந்து செயலாற்ற வேண்டிய அளவிற்கு கடுமையாக இருந்தது, இத் தீ விபத்தில் தொடர் வீடுகளில் பல சேதமடைந்து விடுவதாகவும், இனிமேல் இவ்வாறு தொடர்வீடுகளில் குடியேறுபவர்கள் கடவுளுக்கு விளக்கேற்றுவதை முடிந்தவரை தவிர்க்குமாறு கூறியுள்ளனர். அல்லதுபற்றவைத்தால் அரு கிலிருந்து அணையும் வரை உடனிருக்க வேண்டும் என்றும் தீயணைப்புப் பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

எப்படியிருப்பினும் அருகில் உள்ள இரண்டு வீடு களுக்கும் தீப்பரவி பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை கடவுள் தடுக்க மாட்டார் என் பதை நினைவில் வைத்துக் கொண்டுசெயற்படுமாறும்இத் தீவிபத்து இவ்வாறான தவறு களைசெய்பவர்களுக்குஓர் எச்சரிக்கைப்பாடமாகஇருக்கும் என்றும்லண்டன்நகரதீய ணைப்புத்துறையினர் எச்சரித் துள்ளனர்.

இந்து மதக்காரர்கள் எங்கு சென்றாலும் தங்களின் மதப் புத்தியை மாற்றிக் கொள்ள மாட்டார்கள். தீ என்றால் சாதா ரணமானதல்லவாம் - அக்னி பகவானாம்; அக்னி பகவான், மக்களுக்கு ஆக்க ரீதியான காத்தல் பணியைச் செய்யாமல் அழித்தல் பணியைச் செய்வது ஏன்? ஏன்?

கற்பழிப்பது, சண்டை போடுவது; நாச வேலைகளில் ஈடுபடுவது எல்லாம் இந்(து)தக் கடவுள்களுக்குச் சர்வ சாதா ரணம் ஏன்? ஆசாபாச முள்ள இந்த மனிதன்தானே இந்த கடவுள்களைக் கற்பித்தவன்!

- மயிலாடன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner