எழுத்துரு அளவு Larger Font Smaller Font

குஜராத் தலித் அமைப்புத் தலைவர் கண்டனம்

அகமதாபாத், செப்.1  எழுத்தாளர், பகுத்தறிவாளர், சட்ட வல்லுநர், பேராசிரியர், சமூகசெயல்பாட் டாளர்களை கைது செய்து அவர் களை நகர்ப்புற படித்த நக்சல் பாரிகள் என்று முத்திரை குத் தும் அரசின் நடவடிக்கையை கடுமையாக கண்டித்தார் குஜ ராத் சட்டப்பேரவை உறுப்பின ரும், தலித் அமைப்பின் தலை வருமான ஜிக்னேஷ் மேவானி. பிரதமர் மோடியை கொல்ல சதி செய்ததாக எழுந்த புகாரை ஒட்டி மகாராட்டிராவில் இடது சாரி ஆர்வலர்கள் அய்ந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  பல இடங்களில் காவல்துறை கடும் சோதனை மேற்கொண்டது.   இது தொடர்பாக தொலைக் காட்சி விவாதம் மற்றும் பேட் டிகளின்போது  பாஜக தலை வர்களும், அவர்களது ஆதர வாளர்களும் அப்படி கைது செய்யப்பட்டவர்களை நகர்ப் புற நக்சல்பாரிகள், நகரில் வசிக் கும் மவோயிஸ்டுகள் என்று ஒரு அடையாளத்தை வேண்டு மென்றே அவர்கள்மீது சுமத்தி வருகின்றனர்.

இது குறித்து குஜராத் மாநில சட்டப்பேரவை உறுப்பினரும், தலித் தலைவருமான ஜிக்னேஷ் மேவானி தி பிரிண்ட் செய்தி தளத்தில், நகர்ப்புற நக்சல்வாதி கள் என்பது பாஜகவின் பழி வாங்கும் திட்டமாகும்.  இந்தத் தகவலை பாஜகவினர் பரப்பி வருகின்றனர். குஜராத்தில் பாஜக இது போல நடந்து கொள்வதை நான் ஏற்கெனவே பல முறை கண்டுள்ளேன். அந்த திட்டம் இப்போது அகில இந்திய அளவில் செயல் படுத் தப்படுகிறது.

இன்று மாவோயிஸ்டுகள் எனக் கூறப்படுபவர்கள் மோடி யைக் கொல்ல சதி செய்தவதாக பாஜகவினர் தகவல் வெளியிட் டுள்ளனர். எந்த ஒரு மாவோ யிஸ்ட் தலைவரோ அல்லது தீவிரவாதியோ இத்தகைய கொலை திட்டத்தை தனது மடிக்கணினியில் பதிந்து வைப் பாரா? இதே போல ஒரு செய்தி முன்பு மோடி குஜராத் முதல் வராக இருந்தபோதும் பரப்பப் பட்டு அதன் மூலம் மோடிக்கு எதிரானவர்கள் என்கவுன்ட் டரில் கொல்லப்பட்டனர். அந்த வழக்குகள் இன்னும் நீதிமன் றத்தில் நடந்து வருகின்றன.

எல்கர் பரிஷத் என்னும் இந்த தலித் அமைப்பின் மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக் கைகள் அனைத்தும் அரசின் பயத்தை காட்டுகின்றன. இந்த அமைப்பில் நீதிபதிகள் கோல்சே பாடில் மற்றும் பி.பி.சாவந்த், ராதிகா வெமுலா மற்றும் பிரகாஷ் அம்பேத்கர் ஆகியோர் உள்ளனர். தலித்து களான நாங்கள் குஜராத் மாநிலத் தில் 7 விழுக்காடு இருக்கிறோம். ஆனால் தேசிய அளவில் 17 விழுக்காடு இருக்கிறோம்''  அனைவரும் இணைந்து இதற்கு எதிராக குரல் கொடுப் போம்'' என தனது சுட்டுரையில் கூறியுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner