எழுத்துரு அளவு Larger Font Smaller Font

துபாயில் பிரபல உணவு விடுதி ஒன்றில் பணியாற்றும் இந்துத்துவாவாதி அதுல் கோச்சார் மாட்டிறைச்சியும், இசுலாமியர்களும் எனக்குப் பிடிக்காது என்று ஒரு விவாதத்தில் அரட்டை அடித்தார் - வேலை நீக்கம் செய்யப்பட்டு இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

சிங்கப்பூர், செப்.3  வெளிநாடுகளுக்குச் சென்று பணியாற்றும் இந்தியர் சிலர் காவிகளால் மூளைச்சாயம் ஏற்றப்பட்ட நிலையில், அவர்களின் இந்துத்துவா செயல்பாட்டால் வேலை பறிக்கப்பட்டு, வெளிநாடுகளி லிருந்து விரட்டப்பட்டனர். அதற்கான சில எடுத்துக்காட்டுகள் இதோ:

இந்திய தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தும் விதமாக, சிங்கப்பூர் தேசியக் கொடியை அவமதித்ததால், கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக வங்கியில் பணி புரிந்து வந்த இந்தியர் ஒருவர் வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்

இந்தியாவைச் சேர்ந்த அவிஜித் தாஸ் பட்நாயக் என்பவர் கடந்த 10 ஆண்டுகளுக் கும் மேலாக சிங்கப்பூரில் உள்ள டிபிஎஸ் வங்கியில் பணிபுரிந்து வருகிறார்.  இவர் கடந்த 14 ஆம் தேதி, சிங்கப்பூரில் பணி புரியும் இந்தியர்களுக்கான ஃபேஸ்புக் குழுவில், ஒரு படத்தை பகிர்ந்துள்ளார்

அதில், சிங்கப்பூரின் தேசியக் கொடி அச்சிடப்பட்ட ஒரு டி -சர்ட்டில், அந்தக் கொடி கிழிக்கப்பட்டு, அதனுள் இந்திய தேசியக் கொடி தெரிவது போன்ற படமும், இன்னும் எனது இதயம் இந்தியனாகவே உள்ளது'' என்ற வாசகமும் இருந்தது. சிங்கப்பூர் தேசியக் கொடி கிழிக்கப்பட்ட நிலையில் இருந்ததால், அந்தப் படத்துக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. 11 ஆயிரம் பேர் கொண்ட அந்த ஃபேஸ்புக் குழுவில், பலரும் அவிஜித் செய்த இந்தச் செயலை எதிர்த்ததால், அப்போதே அந்த படத்தை அவர் நீக்கிவிட்டார்.

இருப்பினும், இந்த சம்பவம் குறித்து டிபிஎஸ் வங்கிக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. அவருக்கு ஆதரவாக அந்த வங்கி,  மன தளவில் நான் இந்தியனாகவே இருக்கிறேன் என்று வெளிப்படுத்த விரும்பியுள்ளார்'' என்று கூறியது. அதன்பிறகு அந்த வங்கி வெளியிட்ட செய்திக் குறிப்பில், அந்த நபர் பணியில் இருந்து நீக்கப்பட்டு விட்டதாக வும், அந்த வங்கி இதுபோன்ற செயலில் ஈடுபடுபவர்களை ஊக்குவிக்க விரும்பாத தாகவும் தெரிவித்தது. அந்நாட்டு சட்டப்படி, சிங்கப்பூர் குடி மகனாக இருந்து தேசியக் கொடியை அவ மானம் செய்யும் நபருக்கு அதிகபட்சமாக ஆயிரம் சிங்கப்பூர் டாலர்கள் அபராதமாக விதிக்கப்படும். அதேவேளையில் அவர் அயல்நாட்டிலிருந்து பணிநிமித்தம் அங்கு சிங்கப்பூருக்கு வந்த நபராக இருக்கும் பட்சத்தில், அவரது விசா ரத்து செய்யப்பட்டு அவர் மீண்டும் சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவார். மேலும் அவர் மீண்டும் அந்த நாட்டில் நுழையமுடியாது.  காவிகளின் மூளைச் சலவைதான் காரணம் சில நாட்களுக்குமுன்பு இதே போன்று மஸ்கட் நகரில் ஓட்டல் ஒன்றில் பணிபுரிந்து வந்த மலையாளி ஒருவர் மத ரீதியாக சில சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பேசினார். உடனே அவரை பணியிலிருந்து நீக்கி அவரை இந்தியாவிற்கு அனுப்பிவிட்டார் கள். இங்கே வந்த அவர், கொச்சி விமான நிலையம் மூடப்பட்டதால் பெங்களூரு சென்று அங்கிருந்து மிகுந்த சிரமத்தோடு சொந்த ஊர் சென்று சேர்ந்தார். அவரது சொந்த ஊர் கேரளாவில் ஏற்பட்ட மழை, வெள்ளத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது.

சிங்கப்பூரில் வங்கி ஒன்றில் பணியாற்றிய இந்தியாவைச் சேர்ந்த இந்துத்துவாவாதியான தாஸ்பட் நாயக் அவிஜித் தாஸ்பட்நாயக், சிங்கப்பூர் தேசியக் கொடி பதிவு செய்யப்பட்டுள்ள பனியனைக் கிழித்து, அதன்மீது இந்திய தேசியக் கொடியை ஒட்டியதால், பணியிலிருந்து கல்தா கொடுக்கப்பட்டு, நாட்டை விட்டே விரட்டப்பட்டார்.

துபாய் உணவகப் பணியில் இருந்து விரட்டப்பட்ட அதுல் கோச்சார்

அதேபோல் துபாயில் உலகப்புகழ் பெற்ற விடுதியில் தலைமை சமையற்காராக பணியாற்றிய அதுல் கோச்சார் என்பவர், காவி அமைப்பினர் நடத்தும் ஒரு குழுவில் உறுப்பினராக உள்ளார். அவர் மாட்டிறைச்சி தொடர்பான விவாதம் ஒன்றுக்கு பதிலளித்த போது, இசுலாமியர்கள் மாட்டிறைச்சி சாப்பிடுபவர்கள், அவர்களைக் கண்டாலே எனக்கு அருவறுப்பாக இருக்கும்'' என்று பதிலளித்து இருந்தார். - இந்தப் பதிவை அந்தக் குழுவில் உள்ள நபர் ஒருவர் அவர் பணிபுரியும் விடுதி நிர்வாகத்தின் கவனத்திற்கு எடுத்துச் சென்றார்.

இதனை அடுத்து அவர் உடனடியாக பணிநீக்கம் செய்யப் பட்டார். இதனை அடுத்து அவர் விடுதி நிர்வாகத்திற்கு, நான் தவறு செய்துவிட்டேன், என்னை மன்னித்துவிடுங்கள், மதுபோதையில் நான் என்ன எழுதினேன் என்று எனக்கு தெரியவில்லை, அந்தப் பதிவே எனது வாழ்க்கையில் நான் செய்த மோசமான ஒரு பதிவாக இருக்கும். இனி அப்படி செய்யமாட்டேன்'' என்று விளக்கம் கொடுத்திருந்தார்.  மேலும் அந்த விடுதியில் தலைமை மேலாளராக உள்ள இசுலாமிய நபரிடம் தன்னை மீண்டும் பணியில் சேர்க்கச்சொல்லி எனக்காகப் பேசுங்கள் இல்லையென்றால் எனது எதிர்காலமே இருண்டு போய்விடும் என்று மன்றாடினார். அதுமட்டுமல்லாமல் விடுதிக்கு உணவு சாப்பிட வந்து அவருக்கு அறிமுகமான துபாயில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடமும் கெஞ்சியுள்ளார். இருப்பினும் துபாய் விடுதி நிர்வாகம் அவரை வேலையில் இருந்து நீக்கி இந்தியாவிற்கு திருப்பி அனுப்பியது.

மேலே குறிப்பிட்ட அனைவருமே இளைஞர்கள். தங்களுடைய திறமையால் அயல்நாடு சென்று பிழைப்பை நடத்துபவர்கள். இவர்களின் மனதை இந்துத்துவா அமைப்பினர் குழப்பி மூளைச்சலவை செய்தனர். இதன் காரணமாக இவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து நாடு திரும்பியுள்ளனர்.

இளைஞர்களே, இந்துத்துவாவின் வலையில் வீழாதீர்!

இந்துத்துவாவை நம்பும் பார்ப்பனர் அல்லாதார் சிந்திக்கட்டும்!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner