எழுத்துரு அளவு Larger Font Smaller Font

போபால், செப். 6  20 ஆண்டுகள் தலை மறைவு குற்றவாளியான பாஜக எம்எல்ஏ காவல்துறையினரால் கைது செய்யப் பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்டார். ஆனால், அவருக்கு 40 நிமி டத்தில் பிணை கிடைத்துள்ளது. மத்தியப் பிரதேசத்தில் பாரதீய ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. பாஜக வைச் சேர்ந்த சங்கர்லால் திவாரி என்பவர் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்து வருகிறார்.  இவர்மீது 1997 ஆம் ஆண்டு சத்னா பகுதியில் கலவரத்தில் ஈடுபட்டு காவல்துறை அதிகாரி உள்ளிட்ட பலரை கடுமையாகக் காயப்படுத்திய வழக்கு உள்ளது.

மேலும் இவர்மீது கடத்தல் வழக்கும் உள்ளது. இவர்மீது வழக்குப் பதிந்த மத்தியப் பிரதேச காவல்துறையினர் இவரை தலைமறைவான குற்றவாளி என்று அறிவித்தனர். இந்த நிலையில் 2013-ஆம் ஆண்டு மத்தியப்பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு சத்னா தொகுதி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். வேட்பாளர் விண்ணப்பத்தில் தன்மீது வழக்கு உள்ளதுபற்றி தெரிவிக்கவில்லை. இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் காங் கிரசு முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த நிலையில் திடீரென்று 1997- ஆம் ஆண்டு நடந்த வன்முறை தொடர்பான வழக்கு போபால் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நான்தான் அந்த  குற்றவாளி என்று கூறி நீதிமன்றத்தில் ஆஜரானார். நீதிபதியும் அவர் ஆஜரான மறுநிமிடமே விடுதலை செய்துவிட்டார். இவை அனைத்தும் சில நிமிடங்களில் நடந்து முடிந்தது.

தமிழகத்தில் சோபியா என்ற மாணவி அரசமைப்புச் சட்டம் தந்த உரிமையின் படி பாசிச பாஜக ஆட்சி ஒழிக'' என்று முழக்கமிட்டதற்கு அவரை கடுமையான பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர். அதன் பிறகு மறுநாள் அவருக்கு பிணை கிடைத்தது. ஆனால் மத்திய அரசின் வழக்குரைஞர் மாணவி சோபியா மீதான பிணையை ரத்து செய்ய வழக்கு தொடரப்போவதாகக் குறிப்பிட்டுள்ளார். ஆனால், இதே பாஜகவின் சட்டமன்ற உறுப்பினர் கொலை உள்ளிட்ட பல குற்றங்களைச் செய்தவரை எந்த ஒரு விசாரணையுமின்றி சில நிமிடங்களில் வெளியில் விட்டு விட்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner