எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வேலைவாய்ப்பின்மை - பொருளாதார சீர்கேட்டுக்கு மோடியின் திறனற்ற நிர்வாகமே காரணம்

புதுடில்லி, செப். 8 இளைஞர்களுக்கு ஆண்டுதோறும் 2 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தருவேன் என்று தேர்தலின் போது கொடுத்த மோடி வாக்குறுதியை நிறைவேற்றவில்லை; அதே நேரத்தில் விலைவாசியை கட் டுக்குள் கொண்டுவருவேன் என்று மக்களிடம் கொடுத்த வாக்குறுதியையும் காப்பாற்றவில்லை, என்று மேனாள் பிரதமர் மன்மோகன் சிங்  குற்றம் சாட்டி யுள்ளார்.

டில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய மன் மோகன் சிங், ‘‘மோடி கடந்த மக்க ளவை தேர்தல் பிரச்சாரத்தின்போது இளைஞர்களுக்கு ஆண்டுதோறும் 2 கோடி வேலை வாய்ப்புகளை உரு வாக்கித் தருவேன் என்று வாக்குறுதி கொடுத்திருந்தார். ஆனால், இன்னும் வேலையில்லாமல் இளைஞர்கள் ஏன்அல்லல்படுகிறார்கள்?கடந்த4 ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரம் சரிந்து காணப்படுகிறது. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கி விட்டதாக அரசு வெளியிட்ட புள்ளி விவரங்களின்மீது மக்களுக்குத் திருப்தி இல்லை.

பண மதிப்பு நீக்க நடவடிக்கையால், பல  சிறு, குறு நிறுவனங்கள் அழிந்து விட்டன. ஜிஎஸ்டி வரியையும் சரி யாக அமல்படுத்தாததால் வர்த்தக நிறுவனங்கள் மோசமாக பாதிக்கப் பட்டுள்ளன'' என்று தெரிவித்தார்.

பொருளாதார சீர்கேடு; மோடியின் திறனின்மைக்கு எடுத்துக்காட்டு

‘‘பண மதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி., அவசரமாகநடைமுறைப்படுத்தப்பட்ட தால், நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற் பட்டுள்ளது. ‘மேக் இன் இந்தியா' போன்ற திட்டங்கள் தொழில் துறை யில் அர்த்தமுள்ள தாக்கத்தை ஏற்படுத்த வில்லை. எளிமையான முறையில் தொழில் செய்யும் திட்டங்களிலிருந்து இன்னும் சிறு மற்றும் குறுந் தொழில் நிறுவனங்கள் கணிசமான நன்மை களைப் பெறவில்லை

விவசாயிகளின் பிரச்சினை, பொருளாதாரம் மற்றும் அண்டை நாடுகளுடன்நட்புறவில்பிரதமர்மோடி தலைமையிலான அரசு தோல்விய டைந்துள்ளது. கடந்த நான்கு ஆண் டுகளில் மோடியின் தலைமையி லான ஆட்சி குறித்து கபில்சிபிலின் புத்தகம் விளக்குகிறது. 2014 நாடாளு மன்றத் தேர்தலில் பா.ஜ.க அளித்த வாக்குறுதிகளை மத்திய அரசு நிறை வேற்றத் தவறிவிட்டது'' என்றார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner