எழுத்துரு அளவு Larger Font Smaller Font

உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடந்தது.

சென்னை, செப். 12- பிடிஎஸ் என்னும் பல் மருத்துவப் படிப்புக் கான கலந்தாய்வு நேற்று முன் தினம் முடிந்தது. இதையடுத்து 505 இடங்கள் காலி ஏற்பட்டு உள்ளதாக மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவ படிப்புக்கான கலந் தாய்வில் பிடிஎஸ் என்னும் பல் மருத்துவப் படிப்புக்கான கலந் தாய்வு நேற்றுடன் முடிந்தது. நீட் என்னும் நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப்பட்ட பிறகு தமிழகத்தில்  மருத்துவ படிப்பு களுக்கான மவுசு குறையத் தொடங்கியுள்ளது. பிடிஎஸ் என் னும் பல் மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு மாணவர்கள் இடையே அதிக ஆர்வம் இல்லாத நிலை யில் பிடிஎஸ் இரண்டாம் கட்ட கலந்தாய்வு கடந்த வாரம் தொடங்கியது.

இந்நிலையில், அரசு ஒதுக் கீட்டு இடங்கள் 318  காலியாக இருந்தன. அதற்கான கலந்தாய் வில் நேற்று 237 பேர் இட ஒதுக்கீடு பெற்றனர். 35 இடங் கள் காலி ஏற்பட்டுள்ளன. மேலும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் இருந்த இடங்களில் சேர்க்கவும் நடந்த கலந்தாய்வில்  நேற்று 65 பேர் கலந்து கொண்டனர். அவர்களில் 64 பேர் இட ஒதுக் கீடு பெற்றனர். நேற்றுடன் கலந் தாய்வு முடிந்த நிலையில் பிடிஎஸ் படிப்புக்கான மொத்த இடங்களில் 505 இடங்கள் காலி யாக உள்ளன. இதற்கு மாணவர் களிடம்  ஆர்வம் இல்லாததே முக் கிய காரணம் என்று கூறப்படுகிறது.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner