பிரதமரின் முத்ரா வங்கி கடன் திட்டத்திலும் முறைகேடு

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

முத்ரா வங்கி கடன் திட்டத்தில் வங்கி அதிகாரிகள் மிகப்பெரிய அளவில் முறை கேட்டில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இளைஞர்களை வேலை தேடுவோராக இல்லாமல், வேலை கொடுப்பவராக மாற்ற, சிறு, குறு தொழில்களுக்கு கடன் உதவி வழங்க முத்ரா வங்கி திட்டத்தை மத்திய அரசு 2015ஆம் ஆண்டு அறிவித்தது.

பிரதமர் நரேந்திர மோடியின் கனவுத் திட்டம் என்று சொல்லப்படும் முத்ரா கடன் உதவி திட்டத்தில் 50 ஆயிரம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை எந்தவித பிணையமும், உத்தரவாத மும் இல்லாமல் கடன் வழங்கப்படுகிறது.

பண்ணை சாரா தொழில்கள், உற்பத்தி, சேவை துறையை சேர்ந்த சிறு, குறு தொழில் முனைவோர், வர்த்தகர்களுக்கு இந்த கடன் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் இதுவரை நாடு முழுவதும் 6 லட்சம் கோடி ரூபாய் கடனாக வழங்கப்பட்டுள்ளது.

இளைஞர்களை தொழில் முனைவோ ராக்கவும், வேலை வாய்ப்புகளை அதிகரிக் கவும் மத்திய அரசு கொண்டுவந்த இந்த திட்டத்தில் வங்கி அதிகாரிகள் பலர் மோச டியில் ஈடுபட்டு வருவது அம்பலமாகி யுள்ளது. இதுகுறித்து சமீபத்தில் வெளியான செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது:

முத்ரா திட்டத்தில் கடன் பெற, கடன் பெறுபவர் எந்த விதமான பிணையம், உத் தரவாதத்தையும் வழங்கத் தேவையில்லை என்பதால், வங்கி அதிகாரிகள் அவர்க ளுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு முத்ரா திட்டத்தில் கடன் வழங்குவார்கள்.

கடன் தொகையில் 40 சதவீதத்தை கடன் வாங்கியவருக்கு கொடுத்துவிட்டு, 60 சத வீதத்தை வங்கி அதிகாரிகள் வைத்துக் கொள்வார்கள். அதில், வாங்கிய கடனுக்கு ஒரு ஆண்டுக்கான தவணைத் தொகையை முறையாக திருப்பி செலுத்துவார்கள்.

ஒரு ஆண்டு முடிந்ததும் கடனை திருப் பிச் செலுத்துவதை நிறுத்திவிடுவார்கள். கடன் தொகையில் 60 சதவீதத்தில் ஒரு ஆண்டுக்கான தவணைத் தொகை போக மீதியை அந்த வங்கி அதிகாரி அவருக்கான பங்காக எடுத்துக் கொள்வார்.

ஒரு ஆண்டுக்கு பிறகு கடன் வாங்கி யவர் நடத்திய தொழில் நட்டமடைந்து விட்டதாகக் கூறி அவர் செலுத்த வேண் டிய கடன் வராக்கடனாக சேர்க்கப்படும். ஓர் ஆண்டு வரை கடனை ஒழுங்காக திருப்பிச் செலுத்தியதால், நாணயமான வாடிக்கையாளர் என்ற பெயர் அந்த கடன் பெற்றவருக்கு வரும்.

அதன் பிறகு தொழில் நட்டத்தால் கடனை வசூலிக்க முடியவில்லை என் றால், கடன் கொடுக்கும்போது, கடனாளி சமர்ப்பித்த தொழில் திட்டங்களை ஆய்வு செய்த வங்கி அதிகாரி உட்பட யாருக்கும் எந்த சிக்கலும் வராது.

இப்படி பல பொதுத்துறை வங்கிகளில் முத்ரா கடன் திட்டத்தில், அதிகாரிகள் துணையுடன்முறைகேடாக பெறப்பட்ட பல ஆயிரம் கோடி ரூபாய் கடன்கள் திரும்ப வராத வராக் கடன்களாகி விட்டன. இதனால், வங்கிகளின் நிதிநிலை பாதிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் வெளியான பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த கடன் மோசடியை போன்ற மிகப்பெரிய மோசடி முத்ரா திட்டத்தில் மறைந்துகிடக்கிறது. அது வெளியாகும்போது, பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டம் தோல்வியடைந்துவிட்டது என்ற தோற்றத்தை ஏற்படுத்தும்.

இவ்வாறு அந்த செய்தியில் குறிப்பி டப்பட்டுள்ளது.

- தினமலர் (வேலூர் பதிப்பு): 30.8.2018

- தகவல்: கு.பஞ்சாட்சரம்

திராவிடர் கழகம், திருவண்ணாமலை

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner