கடனோ கடன்

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

விடுதலை இந்தியாவின் 70 ஆண்டுகால வரலாற்றில் 2015, 2016, 2017 ஆகிய ஆண்டுகளில்தான் உலக வங்கியிடமிருந்து இந்தியா கடன் வாங்கவில்லை என்றொரு பொய்யை, சங்-பரிவாரங்கள் ஊடகங்களில் செய்தி போல உலவ விட்டது அம்பல மாகியுள்ளது.

மோடியின் திறமையான ஆட்சியை பாருங்கள் என்று வியந்தோதும் விதமாக, கடந்த ஜூன் 1-ஆம் தேதி சக்ரிகா4இந்தியா என்ற பெயரில் உள்ள ட்விட்டர் ஹேண்டில் மூலம் கடன் வாங்கப்படவில்லை என்ற செய்தி(!) பரப்பப்பட்டது. ஆனால் இந்த செய்தி உண்மையல்ல; வதந்தி என்று ‘ஆல்ட் நியூஸ்’ என்ற செய்திகளின் உண்மை நிலவரம் அறியும் வலைத்தளம் ஆராய்ந்து அறிவித் துள்ளது.

ஏற்கெனவே, கருநாடக தேர்தல் சம யத்தில் மொத்தம் 13 முதல் 14 போலிச் செய்திகள் வலம் வந்ததை ‘ஆல்ட் நியூஸ்’ வலைத்தளம் அம்பலப்படுத்தியது. அந்த வகையிலேயே, உலக வங்கியிடமிருந்து 2015 முதல் 2017 வரை இந்தியா கடனே வாங்க வில்லை என்ற செய்தியையும் வதந்தி என்று உறுதிப்படுத்தியுள்ளது. சக்ரிகா4இந்தியா என்ற ட்விட்டர் ஹேண்டிலின் பின் தொடர்வோர் பட்டியலில் மத்திய தொடர்வண்டித் துறை அமைச்சர் பியூஷ் கோயல் அலுவலகமும் உள்ளது. இந்த ட்வீட்டுக்கான லைக்குகள் 1200-க்கும் மேல் இருந்துள்ளன. அவை 450 முறை மறு ட்வீட் செய்யப்பட்டுள்ளன.

இதே ட்விட்டர் பக்க பதிவு, ராஜ்நீத் என்பவரது முகநூல் பக்கத்தில் பகிரப்பட்ட நிலையில், அதற்கு 12 ஆயிரம் லைக்குகள் விழுந்துள்ளன. மேலும் 25 ஆயிரம் பேர் இதனை பகிர்ந்துள்ளனர். வலதுசாரி முகநூல் வாசிகள் இதனை தொடர்ந்து பகிர்ந்தபடியே இருந்துள்ளனர். பின்னர், இதே தகவலை சுதீந்தர் சப்ரா என்ற இன்னொரு முகநூல்வாசி மோடிஃபிர்சே என்ற வலையொட்டு (ஹேஷ் டேக்)டன் தன் டைம்லைனில் நிலைத் தகவல் செய்ய, அதற்கு ஆயிரத்துக்கும் மேலான லைக்குகள் விழுந்ததுடன், 76 ஆயிரம் பகிர்வுகளும் கிடைத்துள்ளன.

அதாவது, 2015 முதல் 2017 வரை உலக வங்கியில் மோடியின் ஆட்சியில் கடன் வாங்கவில்லை என்பதுபோல ஒரு உண்மை யற்ற செய்தியை உண்மை போல பரப்பி மக்களை நம்பவைக்க முயற்சித்துள்ளனர். அப்படியானால், இந்த மூன்றாண்டுகளில் உலக வங்கியிடமிருந்து இந்தியா கடன் வாங்கியிருக்கிறதா, என்றால்? ஆம் உண்மைதான். இந்தியா கடன் வாங்கியி ருக்கிறது. அதையும் ‘ஆல்ட் நியூஸ்’ ஆராய்ந்து கூறியுள்ளது.உலகவங்கியின் தரவுகளைப் பெற்று ஆய்வுசெய்தபோது, சங்-பரிவாரங்கள் குறிப்பிட்ட 3 ஆண்டுகளில் மட்டும் 50 திட்டங்களுக்கு 96 ஆயிரத்து 560 அமெரிக்க டாலர்களை கடனாக உலக வங்கி அளித்துள்ளது. அதிலும் முக்கியமாக பிரதமர் மோடியின் கனவுத்திட்டமான ஸ்வச் பாரத் திட்டத்துக்கு 2015-இல் மட்டும் உலக வங்கி 1.5 பில்லியன் டாலர்களை கடனாக அனுமதித்துள்ளது. ஆனால் இது இன்னும் கைக்கு வரவில்லை - காரணம் ஸ்வச் பாரத் மேலாய்வு முடிவுகளை அளிக்க வேண்டிய இறுதிக்கெடுவை இந்தியா பூர்த்தி செய்யத் தவறிவிட்டதால், அந்த பணம் இன்னும் வரவில்லை. ஆனாலும் இன்னும் பயன்படுத்தாத இந்தக் கடனுக்காக இந்தியா 0.5 சதவிகிதம் ‘பொறுப்புக் கட்டணம்’ (சிஷீனீனீவீtனீமீஸீt யீமீமீ) செலுத்தி வருகிறது. இதன் மதிப்பு மட்டும் ரூ. 12 கோடியே 75 லட்சமாகும். மேலும் உலகவங்கி அமைப்புகளான அய்பி ஆர்டி, பன்னாட்டு வளர்ச்சிக் கூட்டமைப்பு என்ற அய்டிஏ ஆகியவற்றிடமிருந்தும் இந்தியா 2015 முதல் 2017 வரை நிறைய கடன்களை பல்வேறு வளர்ச்சித்திட்டங் களுக்காக வாங்கியுள்ளது. 2016ஆம் ஆண்டு உலகவங்கி வெளியிட்ட அறிக்கையின்படி சுதந்திரத்துக்குப் பிறகு உலக வங்கியிட மிருந்து பல்வேறு திட்டங்களுக்காக அதிக கடன் பெற்ற நாடே இந்தியாதான் என்றும் கூறப்பட்டுள்ளது.வளரும் நாடான இந்தியா, உள்கட்டமைப்புக்காக கடன் வாங்க வேண்டியது அவசியம்தான். அது குற்றமல்ல. ஆனால், 2015 முதல் 2017 வரை உலக வங்கியிடமிருந்து கடனே வாங்கவில்லை என்று சங்-பரிவாரங்கள் தேவையில்லாமல் ஒரு வதந்தியை அவிழ்த்துவிட்டு, தற்போது அசிங்கப்பட்டு இருக்கின்றனர்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner