மோசடியோ மோசடி

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

இந்தியாவின் பொதுத் துறை வங்கிகள் சென்ற 2017-2018 நிதியாண்டில் (மோசடிகள் மூலமாக ரூ. 25,775 கோடியை இழந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித் துள்ளது.

மோசடிகளால் இந்திய பொதுத் துறை வங்கிகள் இழந்த தொகை குறித்த விவரங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ளன. அதில் இந்தியாவின் 21 பொதுத் துறை வங்கிகள் 2017-18 நிதியாண்டில் மொத்தம் ரூ.25,776 கோடியை இழந்துள்ளன. இதில் நான்கில் ஒரு பங்கு இழப்பை பஞ்சாப் நேசனல் வங்கி கொண்டுள்ளது. அவ்வங்கியில் மும்பையைச்சேர்ந்த வைர வியாபாரியான நீரவ் மோடி ரூ. 13,700 கோடிக்கும் மேல் மோசடி செய்தது சமீபத்தில் கண்டறியப்பட்டது. இவ்வங்கி சென்ற நிதியாண்டில் பல்வேறு மோச டிகள் வாயிலாக மொத்தம் ரூ.6,461.1 கோடியை இழந்துள்ளது, இந்தியாவின். மிகப் பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ரூ. 2,224.9 கோடியை இழந்துள்ளது.

வங்கி மோசடிகளில் ஆந்திரா, பேங்க், யூ.சி.ஒ. பேங்க், யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, அய்டிபிஅய் பேங்க், சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா, இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் உள்ளிட்ட வங்கிகள் ரூ. 1,000 கோடிக்கு மேலான இழப்புகளைப் பெற்றுள்ளன, பேங்க் ஆஃப் இந்தியா ரூ.2,224.9 கோடியையும், பேங்க் ஆஃப் பரோடா ரூ.1,928.2 கோடி யையும், அலகாபாத் பேங்க் ரூ. 1,520.4 கோடியையும் இழந்துள்ளன.

முன்னதாக ரிசர்வ் வங்கியிடம் இது போல், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விடுக்கப்பட்டிருந்த கோரிக்கையில், இந்திய வங்கிகள் கடந்த அய்ந்து ஆண்டு களில் 23,000க்கும் மேலான மோசடி வழக்கு களைக் கண்டிருந்ததாகவும், அதன் வாயி லாக ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் இழந்தி ருந்ததாகவும் கூறியிருந்தது. 2017 ஏப்ரல் 1 முதல் 2018 மார்ச் 1 வரையில் மொத்தம் 5,152 மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந் தது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner