மூடநம்பிக்கை காரணமாக 5 வயது சிறுமியை தெருவில் வசிக்க சொன்ன பஞ்சாயத்து

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

 

வீட்டில் அடைகாத்துவந்த ஒரு பறவைக் கூண்டில் உள்ள பறவை முட்டையை தவறுதலாக உடைத்த காரணத்தினால் 5 வயது சிறுமியை ஒருவாரம் வீட்டில் வசிக்க கூடாது என்று பஞ்சாயத்தில் தீர்ப்பு கூறியதை அடுத்து சிறுமியை தெருவில் கட்டில் போட்டு வசிக்க வைத்துள்ள கொடுமை ராஜஸ்தானில் நடந்துள்ளது.

வட மாநிலங்களில் மதம் மற்றும் ஜாதி மூடநம்பிக்கை போன்றவை அளவிற்கு அதிகமாக உள்ளது, 21-ஆம் நூற்றாண்டில் நுழைந்த போதும் வட இந்தியாவில் சில நகரங்களைத் தவிர்த்து ஒட்டுமொத்த பெரும்பான்மை பகுதிகளுமே அதிக அளவில் பரவியுள்ளது.

ராஜஸ்தான் கோட்டா என்ற பகுதியில் பண்டி என்ற ஊரில் குடிசை வீட்டில் ஒரு குடும்பம் வசித்து வந்தது. காய்ந்த பருத்திச் செடி மற்றும் நாணல் தண்டுகளால் ஆன சிறிய கூரைதான் அவர்களின் வீடு. இந்த வீட்டின் மேற்கூரையின் பகுதியில் பல பறவைகள் கூடுகட்டி குஞ்சு பொறித்து வாழ்ந்து வருகிறது,  ஜூலை 2-ஆம் தேதி 5 வயது சிறுமி அவ்வூரில் உள்ள பால்வாடியில் பயின்று வந்தார். பால்வாடியில் இருந்து சில நாட்களுக்கு முன்பு வீட்டிற்கு வந்த போது அப்போது எதிர்பாராத விதமாக வீட்டில் முன் சாளரத்தில் இருந்த குருவிக் கூடு ஒன்றில் இருந்த முட்டை கீழே விழுந்துவிட்டது. இதில் முட்டை தரையில் விழுந்து நொறுங்கி விட்டது.

இச்சிறுமியின் கைதவறி உடைந்த பறவையின் முட்டை சந்திர என்ற சாம்பல் நிறக்குருவியின் முட்டை ஆகும் இக் குருவியை வர்ண பகவானின் வாகனம் என்று நம்பி வருகின்றனர். சிறுமியின் கைபட்டு முட்டை உடைந்த விவகாரம் ஊராருக்கு தெரிந்துவிட ஊரில் உள்ள பெரியவர்கள் எல்லோரும் ஒன்று கூடி. நடந்ததை குருவி முட்டை உடைந்த விவகாரம் குறித்து பஞ்சாயத்தை கூட்டினர். அப்போது சிறுமி, சந்திர பறவை முட்டை உடைத்த காரணத் தினால் அந்த 5 வயது சிறுமியை 5 நாட்களுக்கு வீட்டினுள் செல்ல தடை விதித்தனர். பள்ளி முடிந்தவுடன் வீட்டின் முன் உள்ள சாலையின் ஓரத்தில் அமர்ந்து தனது பணிகளை செய்யுமாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டது. உணவு மற்றும் தண்ணீர் அந்த அந்த வேளைக்கு வந்து சேரும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டது .

இதனை அடுத்து சிறுமியின் தந்தை அப்பகுதியில் சாலை மறியலில் ஈடு பட்டார். தவறு செய்த குழந்தைக்கு ஆதரவாக இருந்த அச்சிறுமியின்  அப் பாவிற்கு எதிராக மீண்டும் ஊர்ப் பஞ்சாயத்து கூடி , குழந்தைக்கும் அவரது தந்தைக்கும் மேலும் 6 நாட்கள் தண்டனை கொடுத்து 11 நாட்கள் தந்தையும் மகளும் ரோட்டிலேயே இருக்கவேண்டும் என்று தண்டனை கொடுத்தனர்.

சிறுமிக்கு தண்டனை கொடுத்த விவகாரம் அறிந்த அந்த குழந்தைகள் நல அதிகாரி மற்றும்- மாவட்ட ஆட்சியாளர் பிரதிநிதிகள் கிராமத்திற்கு விரைந்தனர்.

அப்போது சிறுமி சாலையின் ஓரத்தில் போடப்பட்டிருந்த கயிற்றுக் கட்டிலில் அமர்ந்தவாறு புத்தகங்களை படித்துக் கொண்டு இருந்தார். அதை விசாரித்த குழந்தைகள் நல அதிகாரிகள் ஊர்மக்கள் மற்றும் பஞ்சாயத்து பிரமுகர்களையும் கடுமையாக கண்டித்தனர். ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஊர் மக்கள் இது எங்களின் நம்பிக்கை வெளியூரார் எங்கள் நம்பிக்கையில் தலையிடவேண்டாம் என்று கூறினர். இவர்களின் இந்தப்பேச்சைக் கேட்ட மாவட்ட ஆட்சியாளர் சார்பில் வந்த அதிகாரிகள்  இது ஒரு சட்டவிரோத செயல். ஒரு மைனர் குழந்தையின் மீது இவ்வித தண்டனைகளை வழங்கினால், பஞ்சாயத்தார் அனைவரும் சிறைக்குச் செல்லநேரிடும் என்று கடுமையாக எச்சரித்தனர்.

மேலும் குழந்தையை வீட்டிற்குள் சென்று படிக்குமாறும், இனிமேல் இது தொடர்பாக எந்த ஒரு உத்தரவு வந்தாலும் எங்களிடம் முறையிடவேண்டும் என்று கூறினர்.

சிறுமிக்கு தண்டனை கொடுத்தது தொடர்பாக ஊர் பஞ்சாயத்தார் மீது விரைவில் வழக்குப் பதிவு செய்ய உள்ளதாகவும், இது குறித்து மாவட்ட ஆட்சியாளரிடம் விரிவான அறிக்கை கொடுக்கப் போவதாகவும் மாவட்ட ஆட்சியாளர் சார்பில் வந்த அதிகாரிகள் கூறினார்கள். இருப்பினும் ஊரார் எங்களது பழக்க வழக்கங்களில் வெளியூர்க்காரர்கள் தலையிடுவது சரியில்லை, இந்த சிறுமிக்கு தண்டனை கொடுக்காமல் போனால் ஊருக்கு கேடு வரும், அப்படி ஒன்று வந்தால் குழந்தைக்காக பரிந்து பேசிய அதிகாரிகள் தான் முழுமையான பொறுப்பு ஏற்கவேண்டும் என்று கூறினார்கள்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner