மோடியை பின்னுக்கு தள்ளிய பிரியங்கா சோப்ரா

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இந்தியாவில் பிரதமர் மோடியை பின்னுக்கு தள்ளி நடிகை பிரியங்கா சோப்ரா முதலிடம் பிடித்து உள்ளார்.

சினிமா துறையின் பிரபலங்களுக்கு தான் இந்தியாவில் ரசிகர்கள் மத்தியில் அதிகம் மதிப்பு. சமூக வலைத்தளங்களில் பெரும் பாலான ட்ரெண்டிங் விவாதங்கள் சினிமாவை பற்றித்தான் இருக்கும்.

தற்போது இன்ஸ்டாகிராமில் டாப்பில் இருக்கும் இந்திய பிரபலம் யார் தெரியுமா? பிரியங்கா சோப்ரா தான், நரேந்திர மோடியை விட இவர் அதிகம் பாலோவர் வைத்துள்ளார் என்பது தான் கூடுதல் தகவல். இதற்காக தனது இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து உள்ளார்.

அதிகம் பாலோவர் வைத்துள்ள பிரபலங்கள் வருமாறு:- பிரியங்கா சோப்ரா - 2.5 கோடி - தீபிகா படுகோன் - 2.49 கோடி, விராட் கோலி - 2.27 கோடி, சல்மான் கான் - 1.73 கோடி, நரேந்திர மோடி - 1.35 கோடி, ஷாருக்கான் - 1.33 கோடி, அமிதாபச்சன் - 95 லட்சம்.

(ஆதாரம்:  ‘தினச்சுடர்’ -6.7.2018)

தகவல்: பஞ்சாட்சரம் (திராவிடர் கழகம்)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner