சொல்லுவது சின்மயானந்தா

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

வியாபார ஸ்தலங்களாகிவிட்ட கோவில்களுக்கு செல்வதால் என்ன பயன்?

புண்ணிய ஸ்தலங்களாகக் கருதப்படும் பலவும் இன்று வியாபார ஸ்தலமாகவும், அரசியல் கேந்திரங்களாகவும் மாறி விட்டன. அங்கே இருப்பவர்கள் பணத் துக்கு ஆசைப்படுபவர்களாக இருக் கிறார்கள். பக்தியும் ஞானமும் அங்கே இல்லை. அப்படிப்பட்ட இடங்களுக்குச் செல்வதால் என்ன நற்பலன் கிடைக்க முடியும்?

இன்று நாட்டில் எவ்வளவோ துறைகளில் முக்கியமான நோக்கங்கள் மறக்கடிக்கப்பட்டு விட்டன. மருத்துவ மனையில் டாக்டர் சரியாக வைத்தியம் செய்வதில்லை. காவல் நிலையத்தில் குற்றவாளிகள் சரிவரக் கண்டுபிடிக்கப்படு வதில்லை. கல்லூரிகளில் சரியாகப் பாடம் நடப்பதில்லை. அரசாங்க அலுவலகங் களில் பணிகள் சரியாகச் செய்யப்படு வதில்லை.

இந்த இடங்களில் எல்லாம் பணத்தை எவ்வளவு பறிக்க முடியுமோ, அவ்வளவு தூரம் பறிக்க முயல்வதும் சகஜமாக இருக்கிறது.

ஆக, நல்ல நோக்கங்கள் பறி போவதும், அந்த சாக்கில் தகாத முறையில் பணம் சம்பாதிக்கப் படுவதும் இயல்பாகிவிட்டது. இது, நாடு சுதந்திரம் பெற்ற பிறகு நம்மிடையே தோன்றியுள்ள ஒழுக்கக் குறைவினால் ஏற்பட்டுள்ள பலவீனம். இந்த நச்சுக்காற்று, ஆலயங்களையும், புனித ஸ்தலங்களையுங் கூட விடவில்லை. அங்கேயும் இதனால் புனிதமும், உயர் நோக்கங்களும் ஓரளவு குறைந்துள்ளன. கடவுளின் பெயராலும்கூடக் கெட்ட செயல்கள் நிகழ்கின்றன.

(நன்றி: ‘மல்லிகை மகள்’ (மாதாந்திர  வெளியீடு) ஜூலை 2018)

தகவல்: பஞ்சாட்சரம் (திராவிடர் கழகம்)

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner