பசுப் பாதுகாப்புக் கயவர்களின் பகிரங்கமான படுகொலைகள்

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ராஜஸ்தான் மாநில அல்வாரில், மாடு கடத்தல்காரர் என்று சந்தேகப்பட்டு, ஒருவர் இந்துத்துவவெறியர்களால்  அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.

அல்வாரில் இருக்கும் ராம்கர் கிராமத் தில் அரியானா மாநிலத்தில் உள்ள தனது பால்பண்ணைக்கு ரக்பர்கான் மற்றும் அவரது நண்பர் மாடுகளை ஓட்டிச் சென் றுள்ளார்.. அவர்கள் இருவரும் இசுலாமி யர்கள் ஆகையால் உடனடியாக பசுப்பாது காவலர்கள் என்று கூறப்படும் மதவெறியர் கள் அவர்களைத் தாக்கினர். இந்தத் தாக் குதலில் ரக்பர்கான் என்ற ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

மோடி நாடாளுமன்றத்தில் தனக்கு எதிராக ராகுல்காந்தி கூறிய குற்றச்சாட் டிற்கு நேரடியாக பதில் கூறமுடியாமல் “நான் ஏழைத்தாயின் மகன்” என்ற பசப்பு வார்த்தையைக் கூறிக்கொண்டு இருக்கும் போது இந்தக்கொலை இந்துத்துவ வெறியர் களால் நடந்துகொண்டிருந்தது.

மாட்டிற்காக மனிதர்கள் கொல்லப்படு வதை கண்டித்த உச்சநீதிமன்றம் 20.7.18 அன்று சமூகவிரோதிகள் மதத்தின் பெயரில் சட்டத்தைக்  கையில் எடுப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இனியும் அதைப் போன்ற சம்பவங்கள் நடக்கக் கூடாது. அரசு இது குறித்து கடுமையாக நடந்து கொள்ள வேண்டும். இரும்புக் கரம் கொண்டு தாக் குதல் நடத்துபவர்களை ஒடுக்கிட வேண் டும்' என்று கூறியிருந்தது. ஆனால் இது போன்ற நிகழ்வுகள் தொடர்கதையாகி விட்டது.

மாட்டுக்கு காவல் நின்ற காவலர்கள்

ஆங்கில நாளேடான ‘டெக்கான் குரோனிக்’களுக்கு நேரடி சாட்சியாக இருந்த ரமேஷ் ஜாதவ் என்பவர் கூறும் போது, “பசுப்பாதுகாவலர்கள் என்ற பெயரில் ஒரு கும்பல் இசுலாமியர்கள் இருவரை தாக்கிக்கொண்டு இருந்தது. இது குறித்து காவல்துறையிடம் புகார் அளித்தோம். இரவு 10 மணிக்கு நாங்கள் புகார் அளித்தோம். ஆனால் காவல்துறையினரோ 2 மணிக்குத் தான் நிகழ்விடத்திற்கு வந்தார்கள். அப்போது ரக்பர்கான் பலத்த காயங்களுடன் சாலை யில் விழுந்துகிடந்தார். ஆனால் அங்கு அந்த காவலர்கள் அவர்கள் கொண்டுவந்த பசுக்களை பாதுகாப்பாக ஒரு வண்டியில் ஏற்றும் வரை காத்திருந்தனர். அதன் பிறகு தங்களுடன் இருந்த ரக்பர்கானை மருத் துவமனைக்கு கொண்டு செல்லாமல் காவல் நிலையத்திற்கு கொண்டுசென்றுள்ளனர். பிறகு அங்கிருந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் தேநீர் குடித்துள்ளனர். பிறகு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அதற் குள் ரக்பர்கான் இறந்துவிட்டார்” என்று கூறிய தாக எழுதியிருந்தனர்.

இது தொடர்பாக ராகுல்காந்தி கருத்து தெரிவித்த போது, “அல்வாரில் இருக்கும் காவல்துறையினர், இறக்கும் நிலையில் இருந்த ரக்பர் கானை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல 3 மணி நேரம் ஆக்கியுள்ளனர். ஆனால், மருத்துமனை 6 கிலோ மீட்டர் தொலைவிலேயே இருந்து உள்ளது. ஏன்? போகும் வழியில் அவர்கள் தேநீர் குடிக்க நேரம் செலவழித்துள்ளனர். இது தான் ஈவு இரக்கமற்ற மோடியின் ‘புதிய இந்தியா’. இதில் மனிதாபிமனம் வெறுப்பாக மாறியுள்ளது” என்று கடுகடுத்துள்ளார்.

ராஜஸ்தானில் தொடர்ச்சியாக நடந்து வரும் இந்த கும்பல் வன்முறைகளுக்கு முதல்வர் பொறுப்பேற்க வேண்டும் என்று கோரி சமூக செயற்பாட்டாளர் தேசீன் பூனா வாலா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு ஆகஸ்ட் 20 ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.

கொலையாளிகளை ஊக்குவித்த பாஜக அமைச்சர்கள்

உத்திரப்பிரதேசத்தில் முகமது அக்லாக் என்பவரை 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இதே போல் பசுப்பாது காவலர்கள் என்று கூறிக்கொண்டு ஒரு கும்பல் அடித்து க்கொலை செய்தது. அந்தக்கொலைக்காரக் கும்பலுக்கு மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா, போன்றோர் தாங்கள் துணை நிற்போம் என்று வெளிப்படையாக கூறினார்கள். மேலும் உத்திரப்பிரதேச மின்சாரவாரியத் தில் அந்தக்கொலையில் ஈடுபட்டு சிறையில் உள்ளவர்களின் குடும்பத்தி னருக்கு பணி நியமனம் வழங்கினர்,

அதன் பிறகு உத்தரப்பிரதேசம், மத் தியப்பிரதேசம், அரியானா, ராஜஸ்தான், குஜராத் மாநிலத்தில் தொடர்ந்து பசுவின் பெயரால் கொலைகள் நடைபெற்றது. இதில் குஜராத் மாநிலம் உனாவில் நக ராட்சி ஒப்பந்தப்பணியில் இருந்தவர்கள் நகராட்சியின் ஒப்புதல் பெற்று இறந்த மாட்டுத்தோலை உரித்த காரணத்திற்காக அவர்களை ஒரு வாகனத்தின் பின்னால் வைத்து அரை நிர்வாணமாக கட்டி வைத்து அடித்துக்கொண்டு ஊர்வலம் போனதை நாடே பார்த்து கொதித்தது. இதற்கும் மோடி எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை. இச்சம்பவத்தை அடுத்து நாடுமுழுவதும் தாழ்த்தப்பட்ட வர்கள் போராட்டம் நடத்திவந்தனர். இந்த நிலையில் உத்தரப்பிரதேச தேர்தல் நெருங்கும் போது அய்தராபாத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் பசுப்பாது காவ லர்கள் சமூகவிரோதிகளே என்றும் அடிக்கவேண்டுமென்றால் என்னை அடியுங்கள் தாழ்த்தப்பட்டவர்களை அடிக்கவேண்டாம் என்று பேசினார்.

அவர் பேசிய மறுநாளே அய்தராபாத் திற்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் பசுப்பாதுகாவலர்களால் தாழ்த்தப்பட்ட ஒருவர் அடித்துக்கொலைசெய்யப்பட்டார்.

கடந்த ஆண்டு பஹலுகான் என்பவரும் ராஜஸ்தான் மாநிலம் அல்வார் பகுதியில் வைத்து பசுப்பாதுகாவலர்களால் படுகொலை செய்யப்பட்டார். அப்படி கொலை செய்த வர்களை மாநில பாஜக பிரமுகரும் பெண் துறவியுமான கோமல் என்பவர் பிணையில் வெளிவந்த அவர்களை தேசத்தைக் காத்த மாவீரர்கள் என்ற பட்டமளித்து கவுர வித்தார்.

ஜூன் மாதம் ஜார்கண்ட் மாநிலத்தில் வயலில் மாடுமேய்த்துக்கொண்டு இருந்த இசுலாமியர் ஒருவரை பசுப்பாதுகாவலர்கள் அடித்து கொலைசெய்து சாலையில் அவரது உடலை இழுத்துவந்தனர். இது  ஊடகங் களில் படமாக வெளியானது. படுகொலை செய்த கொலையாளிகள் பிணையில் வெளிவந்த போது அவர்களை மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்கா மாலைபோட்டு வாழ்த்து தெரிவித்தார். இப்பிரச்சினை தொடர்பாக எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்த பிறகு வருத்தம் தெரிவித்தார்.

இந்த நிலையில் மீண்டும் ஒரு படுகொலை நடந்துள்ளது.  தற்போது மத்திய அரசு பசுப்பாதுகாவலர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இச்சம்பவத்தை தடுத்து நிறுத்த என்னசெய்யலாம் என்று ஆய்வு நடந்த அமைச்சர்கள் அடங்கிய குழுவை நியமித் துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த நிலையில் அல்வரில் ரக்பர்கானை அடித்துக்கொலை செய்த கொலையாளிகள் காவல்துறையினரிடம் பேசும் போது எங்களை பாஜக சட்டமன்ற உறுப்பினர் காப் பாற்றுவார், எங்களுக்கு அரசு பாதுகாப்பாக இருக்கிறது. ஆகையால் நாங்கள் எதற்கும் பயப்படப்போவதில்லை என்று கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

- சரவணா ராஜேந்திரன்

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner