மாசுபாட்டால் மக்கள் பலி

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

காற்று மாசுபாடு காரணமாக, நுரையீரல், சுவாகக்கோளாறு, புற்றுநோய் உள்ளிட்ட நோய்களால் சென்னையில் கடந்த 2016ஆம் ஆண்டில் மட்டும் 4 ஆயிரத்து 800 பேர் பலியாகியுள்ளனர் என ஆய்வில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

அதேசமயம், டில்லியில் கடந்த 2016ஆம் ஆண்டில் 15 ஆயிரம் பேர் சுவாசக் கோளாறு உள்ளிட்ட நுரையீரல் தொடர் பான நோய் களால் உயிரிழந்துள்ளனர்.

காற்று மாசுபாட்டால், அதிகமான உயிரிழப்பு களைச் சந்திக்கும் நகரங்களில் உலக அளவில் 3ஆவது இடத்தில் டில்லி இருந்துவருகிறது.

மனித உயிர்களுக்கு ஆபத்து விளைக்கும் வகையில், காற்றில் மாசு பிஎம் 2.5 அளவு அதிகரிக்கும் போது, நுரையீரல், சுவாசக் கோளாறு உள்ளவர்கள் அதிகமான அளவில் உயிரிழக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

காற்றில் மாசின் அளவு பிஎம் 2.5 அதி கரிக்கும் போது, மனிதர்களுக்கு இதயநோய், சுவாச நோய்கள், புற்றுநோய், குறைந்த வய தில் திடீரென இறப்பைத் தழுவுதல் போன்றவை ஏற்படும்.

இதுகுறித்து மத்திய அரசின் அறிவியல் மற்றும் சூழல் துறை இயக்குநர் அனுமிதா ராய்சவுத்ரி கூறுகையில்,

“டில்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் காற்று மாசு முக்கிய அச்சுறுத்தலாக நாள்தோறும் இருந்து வருகிறது.

இதை வெற்றிகரமாகக் கடந்து வரக் கடுமையான விதிகளும், தரக்கட்டுப்பாடு களும் அவசியம். அவை சரியாக கடைப் பிடிக்கப்படுகிறதா என்று மேலாண்மை செய்வதும் அவசியம்'' எனத் தெரிவித்தார்.

அதிலும் பனிக்காலத்தில் காற்றில் மாசு அதிகரிக்கும் போது, நுரையீரல், இதயநோய், சுவாசநோய் உள்ளவர்கள் கடுமையாக பாதிப்புக்கு உள்ளா

வார்கள்.

கடந்த 2016ஆம் ஆண்டில் மட்டும் சீனா, இந்தியா, வங்க தேசம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் 13 முக்கிய நகரங்கள் காற்று மாசுபாட்டின் ஆபத்தில் சிக்கி இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அதில் குறிப்பாக கடந்த 2016ஆம் ஆண்டில் மட்டும் டில்லியில் காற்று மாசு காரணமாக, ஏற்படும் சுவாச நோய், நுரையீரல் நோய்,

புற்று நோய் போன்றவற்றால், 14 ஆயிரத்து 800 பேர் இறந்துள்ளனர்.

மும்பையில் 10 ஆயிரத்து 500 பேரும், கொல்கத்தாவில் 7 ஆயிரத்து 300 பேரும், சென்னையில் 4 ஆயிரத்து 800 பேரும் உயிரிழந்துள்ளனர். .

இதில் சீனா மட்டுமே காற்றில் மாசின் அளவைக் கட்டுப்படுத்த அடுத்தடுத்த நட வடிக்கைகளும், கொள்கை முடிவுகளும் எடுத்துச் செயல்படுத்தி வருகிறது.

ஆனால் இந்தியாவில் அதுபோன்ற உறுதியான கொள்கைகள் இல்லை.

இனி வரும் காலங்களில் காற்று மாசைக் குறைக்கும்வகையில், சிறந்த கொள்கை களும் செயல்படுத்தும் முறைகளும் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் அவசியமாகும்-என ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner