இந்தியாவில் இதயநோய் பாதிப்பு 34 சதவிகிதம் வரை உயர்வு!

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இந்தியாவில் இதயநோயால் இறப்ப வர்களின் எண்ணிக்கை கடந்த 15 ஆண் டுகளில் மட்டும் 34 சதவிகிதம் அளவிற்கு அதிகரித்துள்ளதாக அமெரிக்கன் காலேஜ் ஆப் கார்டியாலஜி என்ற ஆய்வு நிறு வனம் தெரிவித்துள்ளது. இதே காலகட் டத்தில், அமெரிக்காவில் இதயநோய் பாதிப்பால் ஏற்படும் மரணம் 41 சதவிகிதம் குறைந்திருப்பதாகவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது. 1990ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டுவரை, இதயத்தைப் பாதிக்கும் கார்டியோ வாஸ்குலார் நோய்த் தாக்குதல் மூலமான இறப்பு விகிதம் அமெரிக்காவில் 41 சதவிகிதம் குறைந்து உள்ளது. ஆனால், இந்தியாவில் 34 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இந்தியாவில் ஒரு லட்சம் பேரில், 115 முதல் 209 பேர் வரை இதயம் சம்பந்தப்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு மரணம் அடைகின்றனர். 2016ஆம் ஆண்டில் இந்தியாவில் 65 லட் சத்து 50 ஆயிரம் பேரும், அமெரிக்காவில் 12 லட்சத்து 70 ஆயிரம் பேரும் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இறந்துள்ளனர். குறிப்பாக, 30 முதல் 69 வயது வரையிலா னவர்கள் குறிப்பிட முடியாத நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்; அவற்றில் முக்கிய மானதாக இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் இருக்கின்றன. இந்தியாவில் இதயநோய் களால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும் மாநிலம் பஞ்சாப். குறைந்த அளவில் பாதிக் கப்பட்ட மாநிலமாக மிசோரம் உள்ளது. இவ்வாறு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner