காலைக்கூட கங்கையில் நனைக்க முடியாத சுகாதாரக்கேடு எச்சரிக்கைப் பலகை வைக்கப்படுமோ?

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கங்கை நீர் குடிக்கவும், குளிக்கவும் உகந்தது அல்ல என்று ஆற்றின் கரைகளில் அறிவிப்புப் பலகை வைக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

வற்றாத ஜீவநதி, புனித நதி என்று போற்றப்படும் கங்கை ஆறு குப்பை கூளங் களுடன் மாசு நிறைந்ததாக மாறிவிட்டது. இதை தூய்மை படுத்தும் வகையில் பல ஆயிரம் கோடி மதிப்பிலான கங்கை தூய்மை திட்டத்தை மத்திய அரசு தொடங் கியது. ஆனால், இது முழுவீச்சில் செயல் படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தள்ளது. கங்கை மாசுபடுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், பசுமை பாது காவலர்களும் வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பான வழக்கை தேசிய பசுமை தீர்ப்பாயம் விசாரித்து வருகிறது.

இந்த வழக்கு விசாரணையின் போது தீர்ப்பாய தலைவர் ஏ.கே.கோயல் தலைமை யிலான அமர்வு கூறுகையில், “ஹரித்வார் முதல் உன்னாவ் வரை ஓடும் கங்கை நீர் குடிப்பதற்கோ, குளிப்பதற்கோ தகுதியற்ற நிலையில் இருப்பது வேதனை அளிக்கிறது. கங்கையில் குளிப்பதால் எதிர்காலத்தில் பக்க விளைவுகளை ஏற்படும் என்பதை அறியாமலேயே அசுத்தமான நீரை பக்தர் கள் குடிக்கின்றனர். குளிக்கவும் செய்கின்ற னர். சிகரெட் உடல் நலத்துக்கு தீங்கானது என்று அதன் பாக்கெட்டுகளில் எச்சரிக்கப் பட்டுள்ளது. அதேபோல் மாசுபட்டுள்ள கங்கை நீருக்கும் இதுபோன்ற ஒரு எச்சரிக் கையை ஏன் வெளியிடக் கூடாது?. இந்த பகுதி வழியாக ஓடும் கங்கை நீர் குடிக்கவும், குளிக்கவும் உகந்தது தானா?, என்று கங்கை தூய்மை திட்டத்தை செயல் படுத்தும் தேசிய அமைப்பு, 100 அடி தூரத்துக்கு ஒரு அறிவிப்புப் பலகை அமைக்க வேண்டும்.

எந்தப் பகுதியில் உள்ள கங்கை நீர் குளிக்கவும், குடிக்கவும் தகுதியானது? என்பதையும் தூய்மை கங்கை தேசிய அமைப்பும், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும் 2 வாரங்களுக்குள் இணைய தளங்களில் வெளியிட வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளது.

சமீபத்தில் கோமுகி பகுதியில் (கங்கை தோன்றும் இடம்) அதிக அளவு புனித யாத் திரை என்ற பெயரில் மக்கள் செல்வதால் அங்கு சுற்றுப்புறச்சூழல் மாசு ஏற்பட்டு அந்த மாசின் காரணமாக கங்கையை உருவாக்கும் பனிப்பாறைகளில் வெளிர்மஞ்சள் நிற நுண்ணுயிர்கள் அதிகமாகிவருகிறது, இது கங்கை நீரில் கலந்துவிடுவதால் கங்கை தோன்றும் இடத்திலிருந்தே மாசுடன் தான் உருவாகிறது என்று ஆய்வாளர்கள் கூறி யுள்ளனர். இந்த நிலையில் பசுமைத் தீர்ப் பாயமும் குளிக்கவும் குடிக்கவும் உகந்தது அல்ல என்று 100 அடிக்கு ஒருமுறை அறி விப்புப் பலகை வைக்க உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பீகாரில் கங்கை கரையில் பல பகுதிகளில் இதுபோன்று பெயர்ப்பலகை வைக்கப்பட்டுள்ளது, இந்த நிலையில் புனித மான பகுதி என்று கூறப்படும் அலகாபாத், வாரணாசி, அரித்துவார் உள்ளிட்ட பகுதி களிலும் அறிவிப்புப் பலகை வைக்க உத்தர விட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner