அரசு பயிற்சிப்பள்ளியில் பார்ப்பனர்களுக்கு மட்டுமே அர்ச்சகர் பயிற்சியா?

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

தமிழகத்தில் முதல் முதலாக பார்ப்பன ரல்லாத ஒருவர் அர்ச்சகர் பயிற்சி பெற்று கோவிலில் அர்ச்சகராக பணிபுரிய ஆரம்பித் துள்ளார். இந்தப் பணி நியமனத்தில் அரசு மிகவும் அமைதியாக உள்ளது.  இந்த நிலையில் அரசால் நடத்தப்பட்டு வரும் வேதபாடசாலைகளில் 3 ஆண்டு வேத ஆகம சான்றிதழ் வகுப்புகள் நடந்து வருகின்றன. இந்த வகுப்புகளில் இதுவரை பார்ப்பனர்கள் மட்டுமே சேர்க்கப்பட்டு  பயிற்சி பெற்று  வருகின்றனர்.

இரண்டு வைஷ்ணவ வேத ஆகமம் சென்னை பார்த்தசாரதி கோவில் மற்றும் சிறீரங்கம் அரங்கநாதர் கோவிலிலும், சைவ வேத ஆகம பாட சாலை கபாலீஸ்வரர் கோவிலிலும் நடைபெற்று  வருகிறது, இங்கு பார்ப்பனர்கள் மட்டுமே பயில்கின்றனர். இங்கு பயிலும் பார்ப்பனர்கள் தற்போது பெரும்பாலும் அனைத்துக் கோவில்களிலும் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டு வருகின் றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

2007ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சி யின் போது, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்று கூறி அரசு ஆணையின் படி 6 அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் துவங்கப்பட்டன. அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் விவகாரம் நீதிமன்றம் சென்றதும் அந்த அர்ச்சகர்பள்ளிகள் மூடப்பட்டன. இந்த நிலையில் ஒரு சில ஆகமபாடசாலைகள் 2016ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகு திறக்கப்பட்டன.

கபாலீஸ்வரர் கோவில் சைவ பாட சாலையில் 13 பேர் 3 ஆண்டு பயிற்சி பெற்று வருகின்றனர். இவர்கள் அனைவருமே பார்ப்பனர் அர்ச்சகர்களின் பிள்ளைகள் ஆவர் . இவர்கள் இல்லங்களும் கோவிலுக்கு அருகிலேயே உள்ளன. அதே போல் 17 பார்ப்பன மாணவர்கள் வைஷ்ணவ பாட சாலையான சிறீரங்கத்தில் பயின்று வருகின் றனர். இவர்களும் கோவில் சார்ந்த பார்ப் பனர்களில் பிள்ளைகளே. மேலும் பார்த்த சாரதி கோவிலில் 30 பார்ப்பனர்கள் பயின்று வருகின்றனர். இவர்கள் அனைவருமே 40 வயதிற்குட்பட்டவர்கள் ஆவார்கள்.

ஜூலை 2016 ஆம் ஆண்டு சைவ வேதபாடசாலை அர்ச்சகர் பயிற்சிக்கான விளம்பரம் செய்திருந்தது, அதில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 13 முதல் 20 வயதுடை யவர்கள் அர்ச்சகர் பயிற்சிப்பள்ளியில் சேர விண்ணப்பிக்கலாம் என்று கூறியிருந்தது.

இது குறித்து சிறீரங்கம் கோவில் சார்பில் ஆங்கில நாளேடான ‘டிஎன்ஏ’விற்கு அளித்த பேட்டி ஒன்றில் நாங்கள் விளம்பரம் கொடுத்திருந்தோம், அந்த விளம்பரத்தைப் பார்த்து மொத்தம் 206 விண்ணப்பங்கள் வந்திருந்தன. அதில் பல பார்ப்பனர் அல் லாதவர்களும் அர்ச்சகர் பயிற்சி பெற விருப்பம் தெரிவித்திருந்தனர். (பார்ப்பனர் அல்லாதவர்களின் விண்ணப்பங்கள் ஏன் நிகராகரிக்கப்பட்டன என்று கோவில் நிர்வாகம் விளக்கம் தரவில்லை)

இக்கேள்வி தொடர்பாக பார்த்தசாரதி கோவில்(சென்னை) இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் ஜோதி லட்சுமியிடம் ‘டிஎன்ஏ’ நாளிதழ் சார்பில் பார்ப்பனர்கள் அல்லாதவர்கள் ஏன் நிராகரிக்கப்பட் டார்கள்? என்று கேட்ட போது “இது அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தில் கீழ் சொல்லித் தரப்படும் பயிற்சி அல்ல, அனைத்து ஜாதி அர்ச்சகர் பயிற்சிப் பாடங்கள் வேறு; பார்ப்பனர்கள் மட்டுமே பயிலுமாறு உள்ள இந்த பாடத்திட்டம் வேறு” என்று கூறினார். மேலும் பார்ப்பனர்களுக்கு சொல்லித்தரும் வேதம், ஆகமம், ஜோதிடம் மற்றும் பிரபந் தங்கள் உள்ளன. இது வைஷ்ணவ பார்ப் பனர்களுக்கு மட்டுமே கற்றுத்தரவேண்டிய பாடங்களாகும் என்று கூறினார்.

இது தொடர்பாக அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி ஊழியரான பாலாஜி என்பவர் கூறும் போது, வைஷ்ணவர்கள் என்றால் விஷ் ணுவைக் வணங்குபார்கள் என்பதுல்ல, வைஷணவ பார்ப்பனர்கள் மட்டுமே என்று பொருளாகும்.  அதே போல் சைவ வேத பாடசாலை உள்ள கபாலீஸ்வரர்கோவில் சார்பில் கூறும்போதும் இந்தப் பயிற்சிகள் பார்ப்பனர்களில் பிள்ளைகளுக்கு மட்டுமே கற்றுத்தரவேண்டிய ஒன்றாகும், தேவாரம் போன்றவைகளை சொல்லுவதற்கு பார்ப் பனர்களுக்கு மட்டுமே சிறப்புத்தகுதி உண்டு என்று கூறினார்கள்.

1970ஆம் ஆண்டு திமுக அரசு கொண்டுவந்த சட்டத்தின் படி தகுந்த ஆகமங்களைக் கற்ற அனைத்து ஜாதியி னரும்  அர்ச்சகர் ஆகலாம் என்ற நிலை இருக்கும் போது பார்ப்பனர்களின் பிள் ளைகள் மட்டுமே தொடர்ந்து அர்ச்சகர் பயிற்சிப்பள்ளியில் பயின்று வருவது சட்டத்தை மீறும் செயலாகும்.

பார்ப்பனர்களுக்கு என்று பல சலு கைகள் கொடுக்கப்பட்டுள்ளன, அவர்கள் பயிற்சிப்பள்ளிகளிலேயே தங்கிப் பயில வேண்டும் என்ற விதிமுறை நீக்கப் பட்டுள்ளது.

மேலும் அவர்கள் எப்போது வேண்டு மானாலும் பயிற்சி வகுப்புகளுக்கு வரலாம் என்றும், அதே போல் அவர்களுக்கு மாதம் ரூ1000 ஊக்கத்தொகையாக தரப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இது குறித்து பார்த்தசாரதி கோவில் நிர்வாகம் கூறும் போது சமீப கால மாக பயிற்சிபெறும் மாணவர்களுக் கான ரூ.1000 வழங்குவதை அரசு நிறுத்தி யுள்ளது என்று கூறியுள்ளது.

இது குறித்து அர்ச்சகர் பயிற்சிப்பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் சார்பில் வி.ரங்கனாதன் கூறும் போது, அரசு விதிமுறைகள் அப்பாட்டமாக மீறப்பட்டுள்ளன. அர்ச் சகர்கள் பயிற்சிப் பள்ளிகளிலேயே தங்கி, பயிலவேண்டும் என்பது விதிமுறையாகும்.   ஆனால் பார்ப்பனர்கள் அவர்களின் வீடு களுக்குச்சென்று பயின்று வருவது விதிமுறை மீறல்களாகும். நாங்கள் ஒராண்டு பயிற்சிப் பள்ளியை பள்ளிகளிலேயே தங்கி முடித் தோம், மாதம் ஒருமுறை மட்டுமே வீடு களுக்குச் செல்ல அனுமதி உண்டு. என்று கூறினார்.

மேலும் அவர் கூறியதாவது: அரசு உடனடியாக இந்த 4 வேதபாடசாலைகளை மூடவேண்டும், இதற்கான சலுகைகளை முழுமையாக ரத்துசெய்யவேண்டும், மீண்டும் பழைய முறைப்படி அனைத்து ஜாதியின ரையும் அர்ச்சகராக சேர்க்கும் பள்ளிகள் துவக்கவேண்டும் என்று கூறினார்.  மேலும் தற்போது அர்ச்சகர் பயிற்சி பெற்று வேலையின்றி உள்ள 205 பேருக்கும் பணி யாணை வழங்கவேண்டுமென்று கூறினார்.

 

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner