குற்றமற்றவரா அமித்ஷா?

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பணமதிப்பிழப்பு சமயத்தில் அமித்ஷா இயக்குநராக இருந்த அகமதாபாத் கூட்டுறவு வங்கியில் அதிகளவு டெபாசிட் செய்யப்பட்டது மாநிலங்களவையிலும் சான்றுகளுடன் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி பணமதிப்பிழப்பு அறிவிப்பு வெளியான 5 நாட்களில் குஜராத் மாநிலம் அகமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியில் நாட்டி லேயே அதிகளவிலான ரூ.500, ரூ1,000 ரூபாய் நோட்டுக்கள் டெபாசிட் செய்யப் பட்ட விவகாரம் சமீபத்தில் வெளிச்சத்துக்கு வந்தது. இந்த வங்கியின் இயக்குநராக பாஜக தேசிய தலைவர் அமித்ஷா இருந்தார்.

இது குறித்து மும்பையை சேர்ந்த தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் மனோரஞ்சன் ராய் இது தொடர்பான கேள்விகளை கேட்டு மத்திய நிதிய மைச்சகத்திடம் தாக்கல் செய்தார். இதற்கு அளிக்கப்பட்ட பதிலில் அந்தக் கூட்டுறவு வங்கியில் ரூ.7,455 கோடி டெபாசிட் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படுகிறதா? என்று முன்னாள் பிரதமர் சந்திரசேகர் மகனும், சமாஜ்வாடி எம்.பி.யுமான நீரஜ் சேகர் மாநிலங்களவையில் கேள்வி எழுப்பினார். இதற்கு மனோரஞ்சன் ராய்க்கு அளிக்கப் பட்ட பதிலும் அவையில் தெரிவிக்கப் பட்டது.

அந்த பதிலில் பணமதிப்பிழப்பு சமயத்தில் அகமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியில் அதிகளவு பணம் டெபாசிட் செய்யப்பட்டது உண்மை என்று ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது.

பொதுவாக அவையில் கேட்கப்படும் கேள்விகளும், அதற்கு அளிக்கப்பட்ட பதில்களும் நாடாளுமன்ற இணைய தளத்தில் அன்று மாலையே பதிவேற்றப் படும். ஆனால், இந்த கேள்வி, பதில் பதிவேற்றப்படவில்லை. அதோடும் கேள்வி யும் நீக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஆங்கில பத்திரிக்கை ஒன்றில் செய்தியாக வெளியானது. இதை சுட்டிக்காட்டி நீரஜ் சேகர் ராஜ்யசபாவில் கேள்வி எழுப்பினார்.

இருப்பினும் பதிவேற்றுவது தனியார் கையில் இருப்பதால் அவர்கள் சரிபார்த்து பதிவு செய்வார்கள்.

மேலும் அவை நிகழ்வுகளை சிறிது தாமதமாக பதிவேற்றுவது வழக்கமான ஒன்றுதான் என்று பதிலில் குறிப்பிடப் பட்டுள்ளது.

 

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner