கணவரின் சம்பள விவரங்களை அறிய மனைவிக்கு முழு உரிமை உண்டு உயர் நீதிமன்றம் உத்தரவு

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கணவரின் சம்பள விவரங்களை அறிந்து கொள்வதற்கு மனைவிக்கு முழு உரிமை இருப்பதாக மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர் சுனிதா. இவரும், இவரது கணவர் பவன் குமார் ஜெயினும் பிரிந்து வாழ்கின்றனர். கணவர் தரும் வாழ்வூதியத் தொகையை உயர்த்தி வழங்கக் கோரி, கீழமை நீதிமன்றத் தில் சுனிதா மனு தாக்கல் செய்திருந்தார். அதில், தனது கணவர் பிஎஸ்என்எல் நிறு வனத்தில் அதிக ஊதியம் பெறும் அதிகாரி. ஆனால் பராமரிப்புத்தொகையாக ரூ.7 ஆயிரம் மட்டுமே தருகிறார். எனவே, வாழ் வூதியத் தொகையை அதிகரித்து வழங்க உத்தரவிட வேண்டும் என்று சுனிதா கோரி யிருந்தார். இந்த வழக்கில், பவன்குமார் தமது சம்பள ரசீதை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதனைப் பரிசீலித்த நீதிமன்றம், சுனிதாவின் மனுவைத் தள்ளுபடி செய்தது.

இதையடுத்து, கணவரின் உண்மையான சம்பள விவரங்களை தெரிவிக்க வேண்டும் என தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் சுனிதா கோரினார். இதன்பேரில், பவன்குமாரின் சம் பள விவரங்களை வழங்க பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு தகவல் உரிமை ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து, பவன்குமார் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவைவிசாரித்த உயர் நீதிமன்றம், தகவல் உரிமை ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்தது.

இதன் தொடர்ச்சியாக, ம.பி. உயர் நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வில் சுனிதா மேல்முறையீடு செய்தார். இந்த மனுவானது, நீதிபதிகள் எஸ்.கே. சேத் மற்றும் நந்திதா துபே ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:

கணவரின் சம்பள விவரங்களை அறிந்து கொள்வதற்கு மனைவிக்கு முழு உரிமை உள்ளது. இந்த விவகாரத்தில் மனைவியை மூன்றாம் நபராக கருதுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, இந்த வழக்கில் சுனிதா வின் கணவரின் சம்பள விவரங்களை உடன டியாக அவருக்குதெரிவிக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

- நன்றி: ‘சட்டக்கதிர்’, ஜூலை 2018, பக்கம் 64

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner