சுயமாகச் சிந்தித்தவர்

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

(தொகையறா)

சாதி சமயமெனும்

சாக்கடையைக் கிளறிவிட்டு

ஆதியிலே இல்லாத

கட்டுக்கதை பலகூறி

வேதமோதிப் பிழைத்துவரும்

வீணர்களின் கூட்டத்தை

நாதியின்றி அலறவைத்த

நல்லதொரு தலைவர் யார்?

பெரியாரே! தந்தை பெரியாரே!

(எடுப்பு)

தலைவர் தந்தை பெரியாரே! - திராவிடத்

தலைவர் தந்தை பெரியாரே!    

(தலைவர்)

(தொடுப்பு)

அறிஞர் கலைஞர் பலபேரை

அகிலம் புகழ வளர்த்துவிட்ட

(தலைவர்)

(முடிப்பு)

கற்பூரம் காட்டிக்காட்டிக்

காசுபணம் பறிப்போரைச்

சொற்கல்லால் அடித்துவந்தார்

சொந்தபுத்தி வேண்டுமென்றார்!

(தலைவர்)

இல்லாத ஒன்றுக்கே

இறையென்று பேர்வைத்தப்

பொல்லாத ஆரியரைப்

பரிதவிக்க வைத்த எங்கள்

(தலைவர்)

தன்மான இனவுணர்வைத்

தமிழருக்கு ஊட்டிவிட்டார்!

சொன்னபடி ஆடாதே

சுயமாகச் சிந்தி என்றார்!

(தலைவர்)

விதியென்று சொல்வதெல்லாம்

வீணர்களின் பேச்சென்றார்!

மதியில்லார் தெளிவுபெற

உழைப்பதே தம் மூச்சென்றார்!

(தலைவர்)

- புதுமைக்கவிஞர் புலமைதாசன்

திருவல்லிக்கேணி, சென்னை

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner