அசாம் மாநிலத்தில் விஷ்ணுவின் அவதாரமாம் ‘முத்த’ சாமியார் கைது

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

மக்களிடையே ஏற்படுகின்ற  திருமண பிரச்சினைகள் உள்ளிட்ட அனைத்துவித பிரச்சினைகளையும் தீர்க்கின்ற சக்தி தனக்கு இருப்பதாகக் கூறிக்கொண்டு, ராம்பிரகாஷ் சவுகான் என்ற சாமியார், மூடநம்பிக்கை களால் தன்னை நாடி வருகின்ற பக்தர்களில் பெண் பக்தைகளுக்கு முத்தம் கொடுப்பாராம். அதன்பின்னர் ஏமாறுகின்ற பெண்களை வஞ்சித்து வந்துள்ளார்.

போரால்டப் கிராமத்தில் கடந்த மூன்று மாதங்களுக்குள்ளாக அவர் கோயில் கட்டியுள்ளதாகவும், ‘முத்த சாமியார்’ என்ற பெயருடன், தன்னை நாடிவரும் பக்தர்களை ஏமாற்றி வந்துள்ளதாகவும் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் ராம்பிரகாஷ் சவுகான் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினர் கூறியுள்ளனர்.

பக்தர்களில் பெண்களை கட்டிப்பிடித்துக் கொண்டு இருப்பாராம். முத்தங்கள் கொடுப் பாராம். அப்படியே மெய்மறந்த நிலையில் சாமியாராக அந்த பக்தர்களின் குறைகளை கேட்டு, தீர்ப்பதாகக் கூறுவாராம்.

மத்திய அசாம் மோரிகான் மாவட்டத்தில் போரல்டப் கிராமத்தில் தன்னை சக்தியுள்ள சாமியார் என்று பரப்பிவிட்டு, உடல் மற்றும் உளவியல் பிரச்சினைகளைத் தீர்ப்பதாகக் கூறிக் கொண்டு, குறிப்பாக திருமணப் பிரச் சினைகள், பெண்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதாகக் கூறிக்கொண்டு பக்தர்களிட மிருந்து ஏராளமான அளவில் பொருளை அபகரித்துள்ளார்.

மோரிகான் காவல்துறை தலைமை அலுவலர் ஜே.போரா கூறியதாவது:

“சாமியார் ராம்பிரகாஷ் சவுகான் பெண் களை கட்டிப்பிடித்து, முத்தமிட்டு அது ஒரு சிகிச்சை முறை என்று கூறிக்கொண்டு, பக்தர்களை சுரண்டி வந்துள்ளார். குறிப்பாக பெண்களை ஏமாற்றியுள்ளார். ஏராளமான புகார்கள் வந்ததையடுத்து, சாமியார் ராம்பிரகாஷ் சவுகானைக் கைது செய்துள்ளோம்’’ என்றார்.

ராம்பிரகாஷ் சவுகான் விஷ்ணுவிட மிருந்து சக்தியைப் பெற்றான் என்றும், பெண்களை முத்தமிட்டால் அவர்கள் குண மடைகிறார்கள் என்றும் தன் மகன்குறித்து கூறிவந்த அவன் தாயையும் காவல்துறை யினர் கைது செய்துள்ளனர்.

அசாம் மாநிலத்தில் உள்ள 32 மாவட்டங்களில் மிகக்குறைந்த அளவுக்கு கல்வி பெற்ற மாவட்டமாக மோரேகான் உள்ளது.

கவுகாத்தி நகரிலிருந்து சுமார் 40 கி.மீ. தொலைவிலுள்ள மாயாங் எனும் கிராமமே மூடநம்பிக்கையால் மக்களை ஏமாற்றி வருகின்ற சாமியார்களை, மந்திரவாதிகளைக் கொண்டுள்ள கிராமமாக உள்ளது. ஓஜா அல்லது பெஜ் என்று குணப்படுத்தல் என்கிற பெயரால் போலியான சிகிச்சை சாமியார்களால் அளிக்கப்பட்டுவருகிறது. அவர்கள் தங்களை விஷ்ணுவின் அவதாரம் என்றே கூறிக்கொள் கின்றனர்.

அசாமில் விஷ்ணுவின் அவதாரம் என்று கூறிக்கொண்ட ராம்பிரகாஷ் சவுகான் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டான்.

சாமியார்கள் கைது செய்யப்படும் தருணம் இது. ஜெகத்குரு என்று பார்ப்பனர் போற்றிய சங்கராச்சாரியாரே கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட வில்லையா?

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner