அம்பேத்கர் காட்டிய பாதையும் மனுதர்மம் காட்டிய பாதையும்

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

1. ரிசர்வ் வங்கியானது பாபாசாகிப் அம்பேத்கரின் “The Problem of the Rupee, its Origin and Solution”  என்ற நூலின் மூலக்கருத்தின் அடிப்படையில் இயங்குகிறது. இன்றைய பொதுத்துறைவங்கியின் சேவைகள் அனைத்தும் அந்த நூலில் அடிப்படையில் நடைபெறுகிறது. எளிய கடன் சேவை உள்ளிட்ட  மக்களுக்கு தேவையான சேவைகள் இந்திய வங்கித்துறையைத் தவிர்த்து வேறு எங்குமில்லை. அவை அனைத்தும் அம்பேத்கரின் நூலின் கொள்கைகளை அடிப்படையாக கொண்டு வகுக்கப்பட்டவைகள் ஆகும்.

2. பணிநேரங்கள் 8 மணி நேரம், பகுதி நேர ஊதியம் போன்றவையும் அம்பேத்கரின் தொலைநோக்குப் பார்வையில் நடைமுறைப் படுத்தப்பட்டதாகும். ஊதியத்தில் டிஏ, இஎஸ்அய், ஓய்வூதியம் போன்றவையும் அம்பேத்கரின் தொழிலாளர் நலச்சட்டப் பிரிவின் கீழ் வரையறை செய்யப்பட்டதுதான்.

3. பெண்களுக்கான சொத்துரிமை குறித்த சட்டமும் அம்பேத்கரால் கடுமையான எதிர்ப்புக்கிடையே கொண்டுவரப்பட்டது, அந்தச்சட்டப்பிரிவின் மூலமாக தமிழகம் முதல்முதலாகப் பெண்களுக்கான சொத்து ரிமைச் சட்டத்தை நிறைவேற்றியது திமுக அரசு. அதன் பிறகு மத்திய அரசும் அதை நடைமுறைக்கு கொண்டுவந்தது.

4. குழந்தைத் திருமணம், பலதாரத் திருமணம் போன்றவற்றையும் அம்பேத்கர் கொண்டுவந்த சட்டம் தடுத்துநிறுத்தியது.

5. நகராட்சி, கிராமப் பஞ்சாயத்து அமைப்பின் கீழ் குடிநீர் மற்றும் இதர பொது விநியோக உரிமைகளைக் கொண்டுவந்ததும் அம்பேத்கர் கொண்டுவந்த சட்டத்தின் மூலம் தான். பெரும்பாலான நாடுகளில் பொது விநியோகம் அதன் உயர்மட்ட அதிகார மய்யத்திடமே இன்றளவும் உள்ளது.

6. தனியார் துறையையும் இந்திய சட்டத்தின் கீழ் கொண்டுவந்து இந்திய சட்டத்திட்டத்தின் அடிப்படையில் அனைத்து உரிமைகளையும் பெறவைத்ததும் அம்பேத் கரின் சட்ட உரிமைதான்.

7. பொதுத்தளத்தில் கருத்துகளைப் பரிமாறுவது, கருத்துப்பரிமாற்ற சுதந்திரம், ஊடக சுதந்திரம் போன்றவைகளும் அம்பேத்கர் கொடுத்த சட்ட உரிமைதான். இதனடிப் படையில் தான் இன்று முகநூல், டுவிட்டர், உள்ளிட்ட சமூகவலைதளங்களில் சுதந்திரமாக கருத்துக்களை பதிவிடமுடிகிறது.

8. தேர்தலில் 18 வயதுவந்தவர்கள் அனை வரும் பங்கேற்கும் மக்களாட்சி உரிமையை வழங்கியதும் அம்பேத்கர் கொண்டுவந்த அரசமைப்புச் சட்டத்தின் கீழ் கிடைத்த உரிமைதான், இன்றளவும் பல மத்திய ஆசிய நாடுகள், அரபு நாடுகள், தென் அமெரிக் காவின் சில நாடுகளில் குடிமக்கள் அனைவருக்கும் வாக்குரிமை கிடையாது.

9. விவசாயிகளுக்கான நிலம் மற்றும் விவசாய புரட்சி (விஷீஸ்மீனீமீஸீt யீஷீக்ஷீ லிணீஸீபீ ணீஸீபீ கிரீக்ஷீவீநீuறீtuக்ஷீணீறீ ஸிமீயீஷீக்ஷீனீs) அம்பேத்கரால் முன்னேடுக்கப்பட்டதாகும்.

10. பெண்களுக்கான சமத்துவ சம உரிமை அம்பேத்கரின் உரிமைமுழக்கங்களின் ஒன்றாகும், அதை அரசியல் சட்டத்திலும் கொண்டுவந்து பெண்களுக்கான சம உரிமையை நிலைநாட்டினார். அதில் பேறுகால விடுமுறை உள்ளிட்ட பல சலுகைகள் எதிர் காலத்தில் கொண்டுவர வழிவகை செய் துள்ளார்.

மேலே அம்பேத்கர் கொண்டுவந்த முக்கியமான உரிமைகளுக்கு முற்றிலும் எதிரானது மனுதர்மமும், மகாபாரதமும்,  ஆங்கிலேயர் வருவதற்குமுன்பு இந்திய தீபகற்பத்தில் நூற்றுக்கணக்கான மன்னர் ஆட்சியின் கீழ் இருந்த நிலப்பரப்புகளில் மனுதர்மமே அரசமைப்புச் சட்டமாக இருந்தது.

எடுத்துக்காட்டாக (புந்தேல்கண்ட்) இன் றைய மத்திய மற்றும் தெற்கு உத்தரப்பிர தேசத்தை உள்ளடக்கிய பகுதியை ஆண்ட யசோவர்மன் அல்லது இலட்சுமணவர்மன் (925 - 950) மற்றும் அவரது புதல்வர்கள் (கஜுர வோவில் இலக்குவன் கோயில் மற்றும் சதுர்புஜர் கோயில்களை கட்டியவர்கள்) முழுக்க முழுக்க மனுதர்மத்தின் படிதான் ஆட்சி நடத்தினர். சுமார் 100 ஆண்டுகள் சூத்திரர்கள் சொந்தமாக மாடுகூட வைத் திருக்க இயலாதநிலையை உருவாக்கினார்கள்.

இதே மனுதர்மம் மற்றும் மகாபாரதத்தை  பாஜக, ஆர்.எஸ்.எஸ், இந்துமகாசபை போன்ற அமைப்புகள் இந்திய அரசியல் அமைப்பாக கொண்டுவர தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.

- சரவணா ராஜேந்திரன்

 

 

 

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner