இம் என்றால் சிறைவாசம்; உம் என்றால் வனவாசமா?

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

உத்தர்காண்ட் மாநிலத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு (Janata Darbar)  நிகழ்ச்சியில் அம்மாநில பாஜக முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் பங்கேற்றார்.

அந்நிகழ்ச்சியில், பணியிட மாற்றம் கோரி விண்ணப்பித்திருந்த பெண் தலைமை ஆசிரியர்  உத்தரா பகுகுணா என்பவர் நான்கு மாதங்களுக்கு முன்பாக முதல்வரிடம் அளிக்கப்பட்ட தன்னுடைய பணியிட மாற்ற கோரிக்கைகுறித்து கேள்வி எழுப்பினார். பெண் தலைமை ஆசிரியர்  உத்தரா பகுகுணா (வயது 57) கணவரை இழந்து, அவரது குடும்பம், குழந்தைகள் டேராடூனில்  உள்ள நிலையில், கடந்த 25ஆண்டுகளாக கிராமப்புறப்பகுதியில்  ஆள்அரவமில்லாத இடத்திலேயே இருக்கவேண்டிய கட்டா யத்தில் இருந்து வருகிறார்.

கடந்த காலங்களிலும் மேனாள் முதல்வர் ரமேஷ் போக்கிரியாலிடம் பணியிட மாற்றம் கோரி விண்ணப்பித்தி ருந்தார். தொடர்ச்சியாக ஆட்சியாளர்கள் மாறியபோதிலும், அவர் கோரிக்கைக்கு எவரும் செவிசாய்க்கவில்லை.

கடந்த 4 மாதங்களுக்கு முன்பாக முதல்வர் திரிவேந்திர சிங் ராவத்தை நேரி சந்தித்து பணியிட மாற்றம் கோரி விண் ணப்பித்திருந்தார். அவருடைய விண் ணப்பம் தொடர்பாக மக்கள் சந்திப்பின் போது முதல்வரிடம் நேரில் கேட்டார். அப்போது தற்காலிக பணிநீக்கம், கைது என அச்சுறுத்தலை மாநிலத்தின் முதல்வரே விடுத்துள்ளார்.

பெண்கள் பாதுகாப்புபற்றி பேசுகி றீர்களே என்றும் சத்தம் போட்டு பேசினார்.

பெண் காவலர் மற்றும் ஆண் காவல் துறை அலுவலர்கள் அவரிடமிருந்த ஒலி வாங்கியைப் பிடுங்கிக்கொண்டு, பேச விடாமல் செய்தார்கள். அப்போதும் அவர் சத்தமாக பேசியதால், அவரை முதல்வர் திவேந்திர சிங் ராவத் பணியிலிருந்து தற்காலிகமாக நீக்குவதாக அறிவித்தார். ஆவேசத்துடன் அப்பெண் தன்னுடைய கோரிக்கையில் நியாயத்தை சத்தமாக கூறியபடி இருந்தபோது, அரங்கிலிருந்து காவல்துறையினர் வலுக்கட்டாயமாக வெளியேற்ற முனைந்தனர். மீண்டும் முதல்வர் அவரை கைது செய்யுங்கள் என்று உத்தரவிட்டார்.

இந்நிகழ்வு அனைத்தும் அரங்கில் இருந்த பார்வையாளர்கள் முன்னிலை யிலேயே நடந்தன. செய்தியாளர்கள், தொலைக்காட்சி ஊடகவியலாளர்கள் அவரை சூழ்ந்து படம்பிடித்தபடி இருந் தார்கள்.

இந்நிகழ்வின் காட்சிப்பதிவு சமூக ஊடகங்களிலும், இணையத்திலும் பலரா லும் பகிரப்பட்டு பரவி வருகிறது.

கடந்த 25ஆண்டுகளாக மலைப்பகுதி களைக் கொண்டுள்ள கிராமப்புறப்பகுதி களில் மட்டுமே பணியாற்றி வருவதாகவும் கூறிய உத்தர பகுகுணா மேலும் கூறுகையில், நாங்கள் அனைவருமே இங்கே தனிமையில் இருந்துவருகிறோம். ஒரு பறவைகூட நாங்கள் வசிக்கின்ற பகுதியில் இல்லை. எப்படி இதுபோல்  தனித்து வாழ்வதை எப்படி விரும்பு வார்கள்? அரசு ஊழல் மிகுந்ததாக இருக்கிறது. தூணுக்கு தூண் செல்லும்படி அலைக்கழிக்கப்பட்டபோதிலும், எந்த நடவடிக்கையும் எடுத்த பாடில்லை. நான்கு மாதங்களுக்கு முன்பாக முதல் வரை நான் சந்தித்து மனு கொடுத்தேன். அடுத்த நாளில் எனக்கு தொலைபேசி மூலமாக என்னுடைய கோரிக்கை மனு கல்வித்துறை செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், இதுநாள்வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த அரசாலேயே என் கணவர் இறந்துவிட்டார். இவை அனைத் தாலும் நான் பாதிக்கப் பட்டுள்ளேன். எனக்கும், என் கணவருக்கும் நீதி அளிக்கப்பட வேண்டும் என்றார்.

மேனாள் முதல்வர் ஹரீஷ் ராவத் கூறியதாவது: கடந்த 25 ஆண்டுகளாக ஒரு பெண் கணவனை இழந்த நிலையில், கிராமப்புற தொலைதூரப்பகுதியிலேயே பணி செய்வது என்பதை எவருமே கவனிக்கவில்லை. அப்பெண்ணின் பணி யிடை நீக்க உத்தரவை விலக்கிக்கொண்டு, காவல்துறையும் அவரை விடுதலை செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்பதை முதல்வருக்கு நான்கூறும் அறிவுறுத்து கிறேன் என்றார்.

உத்தரா பகுகுணா செய்தியாளர்களிடம் நேற்று கூறுகையில், நான்பயப்பட மாட்டேன். நான் தவறேதும் செய்யவில்லை. என்னுடைய உரிமைகளைத்தான் நான் கேட்கிறேன் என்றார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner