பார்ப்பனப் பெண்ணைத் திருமணம் செய்தால் ராகுல் பிரதமராக வாய்ப்பு உண்டாம்

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ராகுல் காந்தி பார்ப்பனப் பெண்ணை திருமணம் செய்தால் பிரதமராகும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக தெலுங்கு தேச நாடாளுமன்ற உறுப்பினர் ஜெ.சி.திவாகர் தெரிவித்துள்ளார்.

48 வயதாகும் காங்கிரசு தலைவர் ராகுல் காந்தி இன்னும் திருமணம் செய்யவில்லை. அடிக்கடி ராகுல் திருமணம் செய்ய உள்ள பெண் என்று யாராவது ஒருவருடைய படம் சமூக வலைதளங்களில் வெளியாகும். பிறகு அந்தப் பெண், ராகுல் எனக்கு அண்ணன் உறவு கொண்டவர் என்று விளக்கமளிப்பார். கடந்த சில வாரங்களுக்கு முன் கூட உத்தரப் பிரதேச காங்கிரசு பெண் சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவர், ராகுலுடன் இருப்பது போன்ற ஒரு படம்  சமூக வலைதளங்களில் வெளியானது.

அந்த பெண்ணைத் தான் ராகுல் திருமணம் செய்ய உள்ளார் என்ற தகவலும் இணையதளங்களில் பரபரப்பட்டது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த அந்த பெண்  ராகுல் எனக்கு அண்ணன் போன்றவர் என்றும், தவறான தகவலை பரப்புவது தனக்கு வருத்தம் அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், தெலுங்கு தேசம் எம்.பி திவாகர், ராகுல் திருமணம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். ராகுல் ஒரு பார்ப்பனப் பிராமணப் பெண்ணை திருமணம் செய்தால் விரைவில் அவர் இந்தியாவின் பிரதமர் ஆகலாம் என்று தெரிவித்துள்ளார். உபி-யில் அதிக அளவில் பார்ப்பனப் பெண்கள் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதன் பொருள் என்ன? எதற்கும் ஒரு பார்ப்பனப் பின்னணி இருக்க வேண்டும் என்பதுதானே?

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner