அன்று முதல் இன்று வரை

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அண்மையில் முடிவுற்ற அய்.பி.எல். கிரிக்கெட் போட்டியில், சென்னை அணி வெற்றி பெற்றுள்ளது. எம்.எஸ். தோனி தலைமையில் சிறப்பாக ஆடி, கோப் பையை வென்றுள்ளார்கள்.

ஆனால், இந்த விளையாட்டிற்கு சம்பந்தம் இல்லாத, இரண்டு அடி கூட ஓட முடியாத சரீரம் வைத்துள்ள பார்ப்ப னர்கள், அய்.பி.எல். கோப்பையை கையில் வைத்துக் கொண்டு, திருப்பதி பாலாஜியின் ஆசீர்வாதம் வாங்கச் செல்வதாக, டெக்கான்கிரானிகலில் படத் துடன் செய்தி வெளியிட்டுள்ளது.

இதைப் படித்தவுடன், அறிஞர் அண்ணா எழுதிய சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம் நாடகத்தின் ஒரு வசனம்தான் நினைவுக்கு வருகிறது.

சிவாஜி கண்ட இந்து ராம்ராஜ்யம் பார்ப்பனர்களின் பகற்கொள்ளை சாம்ராஜ்யம். யாகங்கள் என்ற பெயரால் சோம் பேறிப் பார்ப்பனர்கள் கூட்டம் பொன் னையும், பொருளையும் அள்ளிச் சென்று அக்கிரகாரத்தில் ஆட்டம் போட்டு, செல்வச்செழிப்பில் புரண்ட காலம் தான் இந்து சாம்ராஜ்ய வர்ணதர்மக் கொடி பறந்த கொடுமையான காலம்! இந்த வரலாறு, நாடக வடிவில், அறிஞர் அண்ணாவின் கை வண்ணத்தில், சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம் என்ற நாடகமாக தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டு, மக்களி டையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

அந்த நாடகத்தில் மிக அருமையாக எளிய முறையில் அண்ணா காகபட்டராக நடித்துக்காட்டுவார்! கங்குபட்டர் என்ற ஒரு அப்பாவி சீடன் கேள்வி கேட்பான். அவனை வைத்து அருமையான பாடங் களை கூறுவார்.

காகப்பட்டர்: டேய் கங்கு, நான் எதன்மீது அமர்ந்துள்ளேன் பார்த்தாயா?

சீடன்: ஹம் தெரியாதா - ஆசனத்தில்....

காகப்பட்டர்: டே - மண்டு அதல்லடா - ஆசனத்தில் எதன்மீது?

சீடன்: புலித்தோல்மீது...!

காகப்பட்டர்: பார்த்தாயா அந்த புலியை உயிருக்குத் துணிந்து வேட்டையாடியவன் எவனோ? நான்  புலித்தோல் மீது சுகமாய் அமர்ந்துள்ளேன். இதுதாண்டா நம்மவாளின் சாமர்த்தியம் புரிந்ததோ என்பார்.

அன்று முதல் இன்று அய்.பி.எல். வரை, இது தான் தொடர்கிறது.

- குடந்தை கருணா

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner