எப்படியிருக்கிறது பி.ஜே.பி. அரசு! சீருடையில் பிச்சை எடுக்கப் போவதாக மகாராஷ்ட்டிர முதல்வருக்கு காவலர் கடிதம்

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சீருடையில் சென்று பிச்சை யெடுக்க அனுமதிக்குமாறு மும்பையை சேர்ந்த காவல்துறையைச் சேர்ந்த ஒருவர், மகாராஷ்ட்டிர மாநில முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார். மும்பையில் காவலராக இருப்பவர், தியானேஸ்வர் அஹிரோ.இவர், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரே இல்லத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு உள்ளார்.

இந்நிலையில், இரண்டு மாதமாக தனக்குச் சம்பளம் வழங்கப்படாததால், தன்னை சீருடையில் பிச்சை யெடுக்க அனுமதிக்குமாறு அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், ஆளுநர் வித்யாசாகர் ராவ் மற்றும் காவல்துறை ஆணையர் தத்தா பட்சல்கிகார் ஆகி யோருக்குக் கடிதம் எழுதி அதிர்ச்சி அளித்துள்ளார்.

கடந்த மார்ச் முதல் எனது மனை விக்கு காலில் அடிபட்டதால், 20 முதல் 22ஆம் தேதி வரை அவசர விடுப்பு எடுத் தேன்; எனது விடுப்பைநான் தொலை பேசியில் அதிகாரி களுக்குத் தெரிவித் தேன்; இரண்டு நாள்களுக்குப் பிறகு வேலையில் சேர்ந்துவிட்டேன்; அது முதல் கடந்த இரண்டு மாதங்களாக எனக்கு சம்பளம் வழங்கப்படவில்லை; நான் வயது முதிர்ந்த பெற்றோர், மனைவி மற்றும் குழந்தைகளை கவனித்துக் கொள்ளவேண்டும். வங்கியில் கடன் வாங்கியதால், அதையும் மாதா மாதம் செலுத்தி வருகிறேன்; தற்போது இரண்டு மாதங்களாகியும் சம்பளம் வராத தால், குடும்பத்தை நடத்துவது மிகவும்சிரமமாக உள்ளது; எனவே, என்னை சீருடையுடன் பிச்சையெடுக்க அனுமதிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன் என்று தியானேஸ்வர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

- நன்றி: ‘தீக்கதிர்’, 11.5.2018

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner