தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் வடவர்

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் வடவர்ஆதிக்கம் குறித்து ‘தி டைம்ஸ் ஆப் இந்தியா’ ஏட்டின் மும்பை பதிப்பு புள்ளிவிவரத்தகவல்களை வெளியிட்டுள்ளது.

தென்னிந்தியாவில் இந்தி, வங்காளி, ஒடியா மொழி பேசுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதேநேரத்தில், வட இந்தியா அல்லது மராட்டியத்தில் தமிழர்கள், மலையாளிகளின் எண்ணிக்கை குறைந்தே காணப்படுகிறது.

2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, தென்னிந்தியாவில் தமிழ், மலையாள மொழி யைத் தாய்மொழியாகக் கொண்டவர்களின் எண்ணிக்கை வட இந்தியாவில் ஏற்கெனவே பல தலைமுறைகளாக இருந்த இடம்பெயர் வோரின் எண்ணிக்கையைவிட தற்பொழுது மிகவும் குறைந்துள்ளது. அதேநேரத்தில், தமிழ்நாடு மற்றும் கேரளாவில் இந்தி, வங் காளி, அசாமி, ஒடியா மொழி பேசுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கருநாடக மாநிலத்திலும் அதிக அளவில் ஊடுருவி யுள்ளனர்.

ஒரு காலத்தில் தென்னிந்தியர்களுக்கு விருப்பமான இடமாக மராட்டிய மாநிலம் திகழ்ந்தது. தற்பொழுது கன்னடம், தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் பேசுவோருக்கு மறுக்கப்படும் நிகழ்வுகள் நடந்துவருகின்றன. தமிழ்நாடு, கேரளாவில் மிக அதிக எண்ணிக்கையில் இந்தி பேசு வோர் ஊடுருவி யுள்ளனர்.

கணக்கெடுப்பின்படி, 2001ஆம் ஆண்டி லிருந்து 2011ஆம் ஆண்டுவரை டில்லியில் தமிழ் மற்றும் மலையாள மொழி பேசுவோ ரின் எண்ணிக்கை சரிவடைந்துள்ளதைக் காண முடிகிறது. வடஇந்தியாவில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் நொய்டா பகுதியில் மலையாளிகளின் எண்ணிக்கையும், அரியானா குர்கானில் (குரு கிராமம்) தமிழர்களின் எண்ணிக்கையும் 24 விழுக் காட்டளவில் அதிகரித்துள்ளது.

மற்ற பிற மாநிலங்களைவிட தமிழ் நாடு மற்றும் கேரளாவில் இந்தி பேசுவோ ரின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதி கரித்த வண்ணம் இருக்கிறது. கருநாடகா, ஆந் திரப்பிரதேசத்தில் இந்தி பேசுவோ ரின் எண்ணிக்கையைப்போல், தமிழ்நாடு, கேரளாவிலும் படிப்படியாக அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அசாமியர்களும், வங்காளிகளும் அதிக எண்ணிக்கையில் கேரளாவில் காணப்படுகிறார்கள்.

2001ஆம் ஆண்டில் தென்னிந்தியா வுக்கு வெளியே வட இந்தியப்பகுதிகளில் இடம் பெயர்ந்த தமிழர்களின் எண்ணிக்கை 8.2 லட்சத்திலிருந்து 2011ஆம் ஆண்டில் 7.8 லட்சமானது. வடபுலத்துக்கு இடம்பெயரும் தமிழர்களின் எண்ணிக்கையில்  4.9 விழுக் காட்டளவில் குறைந்துள்ளது.

2001ஆம் ஆண்டில் தென்னிந்தியா வுக்கு வெளியே வட இந்தியப்பகுதிகளில் இடம் பெயர்ந்த மலையாளிகளின் எண் ணிக்கை 8 லட்சத்திலிருந்து 2011ஆம் ஆண் டில் 7.2 லட்சமானது. வடபுலத்துக்கு இடம் பெயரும் மலையாளிகளின் எண்ணிக்கை யில் 10.1  விழுக்காட்டளவில் குறைந்துள்ளது.

2001ஆம் ஆண்டில் தென்னிந்தியாவை நோக்கி இடம்பெயர்ந்த வட இந்தியர்களின் எண்ணிக்கை 58.2 லட்சத்திலிருந்து 2011 ஆம் ஆண்டில் 77.5 லட்சமாக அதிகரித் தது. தென்னிந்தியாவில் இடம்பெயரும் வடவர்களின் எண்ணிக்கையில் 33.2 விழுக்காட்டளவில் உயர்ந்துள்ளது.

- ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’, 29.6.2018

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner