அறிவியலே மனிதகுல வளர்ச்சிக்குக் காரணம்

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அறிவியலே மனிதகுல வளர்ச்சிக்குக் காரணம் என்று  திருப்பூரில் விஞ்ஞானி மயல்சாமி அண்ணாதுரை பேசினார். திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டம் அருள்புரம் ஜெயந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 4.9.2018 அன்று மதியம் 1.30 மணிக்கு மாணவர்களுக்கான அறிவியல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் திருப்பூர் மாவட்டத்தி லுள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகள்,அரசு உதவிபெறும்பள்ளிகள், மெட்ரிக் மேல் நிலைப் பள்ளிகள், சி.பி.எஸ்.இ என 200க் கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து ஒரு பள்ளிக்கு 4 மாணவர்கள் 1 பொறுப்பாசிரி யர்கள் வீதம் 1000 க்கும் மேற்பட்டோர் பங்கு பெற்றனர்.

இந்நிகழ்ச்சியில் சிறப்போடு பங்கேற்று  “நாமும் நிலாவிற்குப் போகலாமா?” என்ற தலைப்பில் இந்திய விண்வெளி (செயற் கைக் கோள்) ஆராய்ச்சி மய்யத்தின் முன்னாள் இயக்குநர் உயர்திரு.மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் மாணவர்களி டையே பேசியதாவது;

அண்டசராசரத்தில் எவ்வளவோ கோள்கள் இருக்கிறது.பூமியை எடுத்துக் கொண்டால் அதன் விட்டம் 12,500 கிலோ மீட்டராகும்.இது சூரியமண்டலத்தில் இருக்கிறது.பூமி ஒவ்வொரு வினாடிக்கும் 25 கிலோ மீட்டர் வேகத்தில் சூரிய மண்டலத் தைச் சுற்றுகிறது. சூரிய மண்டலத்தில் இருக்கக்கூடிய பால்வெளி வீதி கிட்டத்தட்ட ஒரு லட்சம் ஒளி ஆண்டைக் கொண்ட தாகும். ஒரு ஒளி ஆண்டு என்பது 1 வினாடிக்கு 3 லட்சம் கி.மீ போகக்கூடியது. ஒளி வேகத்தில் சென்றால் 1.3 விநாடிகளில் நிலவுக்குப் போய்விடலாம்! அந்த ஒளி லட்சம் ஆண்டுகளுக்கு எவ்வளவு தூரம் செல்லுமோ அவ்வளவு தூரம் கொண்டது தான் பால்வெளி மண்டலம்! இதைப்போல் பல வானவில்களைக் கொண்டதுதான் பேரண்டமாகும்! இது 91 பில்லியன் ஒளி ஆண்டு தூரம் கொண்ட பெரிய இடமாகும், அதில் 1 அடி 2 அடி விட்டமுள்ள சின்னஞ் சிறிய துகள்களாக நாம் இருக்கின்றோம். இதுவரைக்கும் பேரண்டத்தில் மனிதனைப் போல் அறிவுள்ள உயிர்கள் இருப்பதாக கண்டுபிடிக்கப்படவில்லை, அப்படிப்பட்ட ஒரு வாய்ப்பான ஒரு உயிர்ப்புள்ள உயிர் தான் மனிதன்!

அந்தக்காலத்தில் இருந்த காக்கை, மயில், குயில், மரங்கள் போன்ற உயிர்கள் அனைத்தும் இன்றும் அப்படியே இருக்கிறது. ஆனால் அந்தக் காலங்களில் குகைகளில் வாழ்ந்த மனிதன் இவ்வளவு பெரிய வளர்ச் சியை இன்று சந்தித்திருக்கிறான் என்றால் அதற்கு முழுமுதற்காரணம் அறிவியலும் அதனைச் சார்ந்த தொழில் நுட்பமுமே ஆகும்!

நிலவில் ஆராய்ச்சி செய்ய ஆளில்லா விண்கலம், ஆளுள்ள விண்கலம் என மற்ற நாடுகள் பலமுறை நிலவுக்குச் சென்று அங்கிருந்து கள், மண் எடுத்து வந்தார்கள்! நிலவில் நீர் இல்லை என்று தெரிவித் தார்கள்! ஆனால் நாங்கள் முழுநிலவு பகுதிகளிலும் நீர் இல்லையா? என்ற சரியான கேள்வியோடு செய்த முயற்சி தான் “சந்திரயான்”!! மற்ற நாட்டினர் நிலவில் இறங்காத பகுதிகளில் நீர் இருப்பதைச் “சந்திரயான்” கண்டு பிடித்தது. அதைப்போலவே செவ்வாய் கிரகத்திற்கும் மற்ற நாடுகள் பலமுறை சென்றார்கள். ஆனால் வெற்றி பெற முடியவில்லை. அவர்கள் ஏன வெற்றி பெற முடியவில்லை? அவர்களின் தோல்விக்குக் காரணம் என்ன? என்ற சரியான கேள்வியை எழுப்பி நாங்கள் செய்த ஆய்வின் பலனே “மங்கள்யான்” ஆகும். இதில் நாங்கள் முதல் முயற்சியி லேயே வெற்றி பெற்றோம்!

நாங்கள் கேட்ட சரியான கேள்வியே அதற்குக் காரணமாகும்.

கல்விரீதியிலான வளர்ச்சிகள் அன்று இருந்ததைக்காட்டிலும் இன்று பெருகி வருகிறது. ஆராய்ச்சிப் படிப்பிற்கான அறிவியல், பொறியியல் கல்லூரிகள் நிறைய உள்ளன. தற்போது பாடத் திட்டங் களிலும் பெருமாற்றங்கள் ஏற்பட்டு புதுத் தளங்களை நோக்கிச் செல்ல வழிகள் ஏற் பட்டுள்ளது.

மாணவரகள் பாடப்புத்தகங்களை வெறு மனே மனப்பாடம் செய்து ஒப்பிப்பவர்களாக இல்லாமல், புரிந்து, அறிந்து படிப்பவர்களா கத் திகழவேண்டும்! சரியான கேள்வியிலி ருந்து பிறந்ததுதான் கண்டுபிடிப்புகள். ஆகவே மாணவர்கள் திறம்பட சரியான கேள்விகள் கேட்கும் ஆராய்ச்சி மனப்பான் மையை வளர்த்துக் கொள்ளவேண்டும்! இவ்வாறு அவர் உரை நிகழ்த்தினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner