கருத்தாழக் கவிஞர் மறைவிற்கு தமிழர் தலைவர் இரங்கல் அறிக்கை
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தமிழ்நாட்டின் தலைசிறந்த கவிஞர்களில் ஒருவரான கருத்தாழக் கவிஞர் வாலி அவர்கள் நேற்று பிற்பகல் (18-.7-.2013) இயற்கை எய்தினார் என்ற செய்தி நமக்கு மிகப்பெரும் அதிர்ச் சியைத் தந்தது. சில நாட்களுக்கு முன்கூட அவரை மருத்துவமனையில் சந்தித்தபோது, இன்முகத்தோடு அப்பொழுது வரவேற்ற அவர் தம் பண்பும், பாசமும் - கொள்கை வேறுபாடு உள்ள நம்மைப் போன்றவர்களிடம்கூட அகநக நட்புடன் பழகிய பாங்கும் எப்போதும் மறக்க இயலாது.

அவர்களின் கருத்தாழம் மிகுந்த கவிதைகளும். திரைப்பாடல்களும் காலத்தை வென்றவை.

அவை மூலம் அவர் என்றும் வாழ்வார். வேற்றுமையில் ஒற்றுமை காண்பது எப்படி என்பதைக் காட்ட அவரைப் போன்ற ஒரு வித்தகரை தமிழ்நாடு எளிதில் காணமுடியாது.

அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தாருக்கும், கலை உலகத்தாருக்கும் திராவிடர் கழகம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை
18.-7.-2013

 


 

தமிழ்நாட்டின் தலைசிறந்த கவிஞர்களில் ஒருவரான கருத்தாழக் கவிஞர் மறைந்த வாலி உடலுக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் மாலை வைத்து மரியாதை செலுத்தினார். உடன் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், பெரியார் திடல் மேலாளர் சீதாராமன், மாநில மாணவரணி செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், தென்சென்னை மாவட்ட தி.க. தலைவர் இரா.வில்வநாதன், மாவட்ட செயலாளர் செ.ரா.பார்த்தசாரதி, டி.ஆர். சேதுராமன், இரா.பிரபாகரன், ந.அரவிந்தன், மு.வசந்தராஜ், புருனோ, கே.என்.மகேஷ், சுரேஷ், சுகுமார், ஆனந்த், தமிழ்குடிமகன், சந்தீப், லோகேஷ், சக்திவேல், காரல்மார்க்ஸ், நிக்கில் சுகுமார், வெற்றி ஆகியோர் கலந்து கொண்டனர். (சென்னை, 18.7.2013).
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner