பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, நவ.19- ராஜஸ்தான் மாநிலம் பொக்ரான் அணுஆயுத சோதனை தளத்தில் இருந்து பிரமோஸ் ஏவுகணை இந்திய ராணுவத்தால் நேற்று வெற்றிகரமாக பரிசோதனை செய்யப் பட்டது. எந்த கடின இலக்கையும் வெகுதொலைவு சென்று தாக்கும் சூப்பர்சானிக் வகை ஏவுகணையான பிரமோஸ், பொக்ரான் அணுஆயுத சோதனை தளத்தில் இருந்து நேற்று காலை 10.55 மணிக்கு பரிசோதிக்கப்பட்டது. இந்த பரிசோதனையில் பிரமோஸ் ஏவுகணை குறிப்பிட்ட இலக்கை கச்சிதமாக தாக்கியது.

ராணுவத்தில் உள்ள ஏவுகணைகளின் தயார் நிலை குறிப்பிட்ட கால இடைவெளிகளில் சோதித்துப் பார்க்கப்படுவது வழக்கமாகும். இந்நிலையில் லெப்டினன்ட் ஜெனரல் அமித் ஷர்மா மற்றும் மூத்த அதிகாரிகள் முன்னிலையில் பிரமோஸ் பிளாக் 3 வகை ஏவுகணை ராஜஸ்தானின் பொக்ரான் ராணுவ தளத்தில் நேற்று பரிசோதிக் கப்பட்டது. இந்த வகை பிரமோஸ் ஏவுகணை 300 கிலோ எடையுள்ள அணுஆயுதத்தை 290 கி.மீ தூரம் வரை எடுத்துச் சென்று தாக்கும் திறன் கொண்டது. இந்த ஏவுகணை நிலத்தில் இருந்து நிலம், கடல், வான்வெளி இலக்குகளையும், கடலில் இருந்து நிலம் மற்றும் வான்வெளி இலக்குகளையும் தாக்கும் திறன் படைத்தது. தரைப்படை மற்றும் கடற்படையில் ஏற்கெனவே சேர்க்கப்பட்டு இருக்கும் இந்த பிரமோஸ் பிளாக் 3 ஏவுகணை விமா னப்படையிலும் சேர்க்கப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner