தமிழ்நாட்டிலும் இந்த நிலையா? - மகாவெட்கம்!

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தமிழ்நாட்டிலும் இந்த நிலையா? - மகாவெட்கம்!

தேவிப்பட்டினத்தில் கோயிலில் பெண்ணுக்கு நிர்வாணப் பூஜையாம்!

கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி என்பது உண்மைதானே!

ராமநாதபுரம், ஜூன் 18_ பரிகார பூஜை என்று கூறி இளம்பெண்ணை நிர் வாணப்படுத்தி பாலியல் குறும்புகள் செய்த, தேவி பட்டினத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகரை காவல் துறையினர் கைது செய் தனர்.

ராமநாதபுரம் மாவட் டம், தேவிப்பட்டினம் வடக்கு தெருவைச் சேர்ந் தவர் கணேசமூர்த்தி (35). அதிமுகவைச் சேர்ந்த இவர் தேவிப்பட்டினம் கிளை ஜெயலலிதா பேரவைச் செயலாளராக உள்ளார். தேவிபட்டினம், நவ பாஷாண கோயிலுக்கு வரு வோரை அணுகி தோஷம் கழிக்கப் பரிகாரம் என்ற பெயரில் பூஜை செய்து வந்துள்ளார். 3 நாள்களுக்கு முன்னர் சிவகங்கை மாவட் டத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. தொப்புள்கொடி சுற்றிய நிலையில் குழந்தை பிறந்ததால் பரிகாரம் செய்ய குடும்பத்தினர் அந்த பெண்ணை, குழந்தையுடன் தேவிபட்டினம் கோயி லுக்கு அழைத்து வந்தனர்.

அந்த பெண்ணை மட்டும் இரவு 8 மணிக்கு நவபாஷாண கோயிலுக் குள் கணேசமூர்த்தி தனி யாக அழைத்துச் சென் றுள்ளார். பூஜையின்போது அருகில் யாரும் இருக்கக் கூடாது என உடன் வந் திருந்த அந்தப் பெண் ணின் உறவினர்களிடம் கூறியுள்ளார். கடற்கரையில் இருந்து 50 மீட்டர் தொலைவில் கோயில் கடலுக்குள் உள்ளதால், கோயில் வளாகத்திற்குள் என்ன நடக்கிறது என்பதை கரையில் நிற்பவர்களால் பார்க்க முடியாது.

இதை சாதகமாக்கிக் கொண்ட கணேசமூர்த்தி, பரிகார பூஜை செய்வதாகக் கூறி அழைத்துச் சென்ற அந்த பெண்ணை நிர் வாணமாக்கியுள்ளார். சிறிய லிங்கத்தை வைத்து பெண் ணின் உடல் முழுவதும் 108 முறை தடவி கொடுத்து, பாலியல் குறும்புகளில் ஈடுபட்டுள்ளார். கணேச மூர்த்தியின் இந்த பூஜை குறித்து, பெற்றோரிடம் அந்த பெண் உடனடியாக சொல்லவில்லை. ஊருக்குச் சென்றதும் தனக்கு நடந்த கொடுமைகளைக் கூறி கதறி அழுதுள்ளார்.

தேவிபட்டினத்தைச் சேர்ந்த சுற்றுலா வழி காட்டி கற்பூரசுந்தரம் என் பவர்தான் பரிகார பூஜைக் காக கணேசமூர்த்தியை சிவகங்கையைச் சேர்ந்த பெண்ணின் உறவினர் களுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். இது குறித்து அந்தப் பெண் ணின் உறவினர்கள் கற் பூரசுந்தரத்திடம் தெரிவித் துள்ளனர். கோபமடைந்த கற்பூரசுந்தரம், கணேசமூர்த் தியை சந்தித்து தட்டி கேட்டுள்ளார். ஆத்திர மடைந்த கணேசமூர்த்தி கற்பூரசுந்தரத்தை கடுமை யாகத் தாக்கி, கொலை செய்து விடுவதாக மிரட்டி யுள்ளார்.

இதையடுத்து கற்பூர சுந்தரம் தேவிபட்டினம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதில், பெண் களை இரவில் தேவிபட்டி னம் கோயிலுக்கு அழைத் துச் சென்று நிர்வாணப் படுத்தி, பாலியல் குறும்பு கள் செய்து வந்த விவரத் தையும் விரிவாக தெரிவித் துள்ளார். கொலை மிரட் டல் விடுத்த வழக்கில் கணேசமூர்த்தியை காவல் துறையினர் நேற்று கைது செய்தனர். பெண்களிடம் பாலியல் குறும்புகள் செய்தது குறித்து, வழக்கு ஏதும் பதியவில்லை.

எப்போது வரும் தடை?

வெளியூரைச் சேர்ந்த பெண் பக்தர்களிடம் கணேசமூர்த்தி தனது பாலியல் குறும்புகளை அரங்கேற்றியுள்ளார். தோஷம் கழிக்க நிர்வாண பூஜை அவசியம் என்று கூறி கடந்த சில ஆண்டு களாகவே பெண் பக்தர் களை குறி வைத்து இந்தப் பரிகார பூஜைகளை செய் துள்ளார்.

இளம்பெண்கள் என்றால் இரவு 8 மணிக்கு மேல்தான் பூஜையை செய்யவேண்டும் என்பா ராம். கோயில் வளாகத்தில் இதுபோன்ற ஏமாற்று மனிதர்கள் ஏராளமா னோர் திரிகின்றனர். இரவு நேரங்களில் பரிகார பூஜை நடத்தத் தடை விதிக்க வேண்டும் என பொது மக்கள் கடவுளிடம் சொல் லாமல் காவல்துறையினரி டம் கூறியுள்ளனர்..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Comments  

 
#1 கண்ணன் 2014-06-24 14:06
திராவிட ஆட்சியில் இதெல்லாம் அதிசயமில்லை!
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .?
 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner