தொடர்

ஊன்றிப் படித்து உண்மையை உணருங்கள்!! - 1

இந்து அறநிலையத்துறையை ஒழித்து

கோயில்களின் நிர்வாகத்தை பார்ப்பனர்கள் கைப்பற்ற சூழ்ச்சி!

 

இது ஒரு திராவிட - ஆரிய போராட்டமே!

அத்துறை அதிகாரிகளும்,

ஆய்வாளர்களும் அலசுகிறார்கள்!

அறிக, தெளிக, ஒன்றுபடுக!

[இங்கு இடம் பெற்றுள்ள அரிய ஆராய்ச்சியுடன் கூடிய தகவல்களை எழுதியவர் அறநிலையத் துறையில் பெரிய பதவி வகித்து ஓய்வு பெற்றவரும் பக்தி நிறைந்த தமிழ் இன உணர்வாளருமான ஒருவர். இன்றைய பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., பார்ப்பனர்கள் அறநிலையத் துறைக்கு எதிராக தாங்கள் புகுந்து, அரசர்கள் காலத்தில் கொள்ளையடித்தது போன்று மீண்டும் செய்ய வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் ஒரு பிரச்சார இயக்கத்தைக் கட்டவிழ்த்துவிட்டதோடு, நீதிமன்றங்களையும் தங்களுக்கு துணையாக்கிக் கொள்ள கடும் முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். தமிழ்நாட்டு பக்தர்களும் பொதுமக்களும் இதில் மிகவும் விழிப்பாக இருந்து உண்மைகளை உணர இவரது கீழ்க்கண்ட கருத்துக்கள் பெரிதும் உதவும்.  தமிழ்நாடு அரசு இதில் மேலும் விழிப்புணர்வுடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டிய காலகட்டம் இது.                               - ஆசிரியர், ‘விடுதலை’]

தமிழ்நாடு சட்டம் 22 / 1959 என அழைக்கப்படும் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சட்டம், தமிழ்நாட்டில் உள்ள இந்து சமய திருக்கோயில்கள், சமணக் கோயில்கள், அறநிலையங்கள் ஆகியவற்றை நிருவகிப்பதற்கான வழிவகைகளைத் தருகிறது. இச்சட்டத்தின் அடிப்படையிலான இந்து விதிகள், அரசாணைகள், உயர்நீதிமன்ற உச்சநீதிமன்ற தீர்ப்புகள் ஆகியவை இத்துறையின் நிருவாகத்தை நடத்துவதற்கான சட்ட அடிப்படைகளாக அமைகின்றன.

இந்து சமய திருக்கோயில்களின் நிருவாகங்கள் ஒரு குறிப்பிட்ட ஆதிக்க சாதியினரின் கட்டுப்பாட்டில் இருந்து வந்ததும் ஊழல்கள் மலிந்து நிருவாக சீர்கேடுகள் தலைவிரித்தாடும் இடங்களாக கோயில்கள் இருந்ததும் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி காலத்திலேயே முக்கிய மான விசயமாக விவாதத்திற்குள்ளானது. பொதுமக்கள் இதுகுறித்து சமஸ்தான மன்னர்களிடமும் கிழக்கிந்திய கம்பெனியாரிடமும் முறையிட்டவண்ணம் இருந்தனர். இந்த சூழ்நிலையில் முதலில் மதராஸ் நிலைக் கொடை கள் மற்றும் வாரிசு இன்மையால் அரசுப் பொருட்கள் ஒழுங்குறுத்தும் சட்டம் எண். VII / 1817 உருவாக்க ப்பட்டது.

இச்சட்டம் இந்து திருக்கோயில்களுக்கு வழங்கப்படும் நிதியுதவி முதலான அறக்கொடைகள் முறையாக பயன்படுத்தப் படுகின்றனவா, தனிப்பட்டவர் நலனுக்காக பயன்படுத்தப்படுகின்றனவா என்பவற்றை கண்காணிப்பு செய்யும் பணியை அப்போதைய வருவாய் வாரியத்திடம் (Board of Revenue) வழங் கியது. வருவாய் வாரியம் மேற்கண்ட நோக்கங்களை செயல்படுத்த உள்ளூர் அளவில் முகவர்களை நிய மிக்கும் அதிகாரத்தைப் பெற்றிருந்தது. 1858ல் இந் தியாவின் நிருவாகம் கிழக்கிந்திய கம்பெனியிடமிருந்து பிரிட்டிஷ் மகாராணியின் நேரடி நிருவாகத்திற்கு சென்றபிறகு திருக்கோயில்களின் நிருவாகம் குறித்த புகார்கள் பிரிட்டிஷ் அரசிடம் தொடர்ந்து அளிக்கப்பட்டு வந்தன. பிரிட்டிஷ் அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இந்தியாவின் ஆட்சி அதிகாரம் எடுத்துக்கொள்ளப் பட்டபோது இந்திய மக்களுக்கு தங்கள் மீது இருந்த வெறுப்பை குறைக்கவும் நம்பிக்கையை வளர்க்கவும் விக்டோரியா மகாராணி நிறைய வாக்குறுதிகளை அளித்தார். அதில் முக்கியமானது ‘மதத்தில் தலையிடுவதில்லை’ என்பது. உண்மையில் மதத்தில் தலையிடுவதில்லை என்ற வாக்குறுதி சாமானிய மக்களுக்கு எந்த வகையிலும் பயனளிக்கக்கூடியதாக இல்லை. ஏனெனில் மதத்தையும் மத நிறுவனங்களையும் கட்டுப்பாட்டில் வைத்தி ருந்தவர்கள் சிறுபான்மையாக இருந்த உயர்வகுப்பாரே (பார்ப்பனரே). அவர்களுக்கு மகாராணியின் வாக்குறுதி பெருமகிழ்ச்சியைத் தந்தது! திருக்கோயில்களை நிருவகித்த கொள்ளையர்களுக்கு இந்த வாக்குறுதி பாக்குவெத்தலை கொடுப்பதாக அமைந்தது. திருக்கோயில் நிருவாகங்களில் நிருவாக சீர்கேடுகளும் ஊழல்களும் மேலும் பெருகின. கூடவே இந்த நிருவாக சீர்கேடுகள் குறித்த புகார்களும் பெருகின. இச்சூழ்நிலையில் பிரிட்டிஷ் அரசு 1863இல் அறநிலை யங்கள் தொடர்பாக சட்டம் ஒன்றை கொண்டுவந்தது. ஆனால் இந்த சட்டம் பெரிதாக ஒன்றையும் சாதித்து விடவில்லை.

பிரிட்டிஷ் அரசு திருக்கோயில்கள் நிருவாகங்களில் தலையிடுவது தங்களுக்கு எதிர்மறையான சிக்கல் களையும் எதிர்ப்பையும் உருவாக்கலாம் எனக் கருதி திருக்கோயில் நிருவாகத்தில் தலையிடாக் கொள்கை யையே கடைபிடித்து வந்தது. இதனால் திருக்கோயில் நிருவாகங்களில் மேலும் சீர்கேடுகள் பெருகின. சட்ட சீர்திருத்தங்களுக்கான ஆலோசனை களை வழங்க அமைக்கப்பட்ட பல்வேறு சட்ட கமிஷன்களிடமும் திருக்கோயில்களின் முறையற்ற நிருவாகம் குறித்து பொதுமக்களால் புகார்கள் அளிக்கப்படுவது வாடிக்கை யாக இருந்தது. திருக்கோயில்கள் என்பவை உள்ளூர் மக்களின் நம்பிக்கை மற்றும் பக்தி சார்ந்த புனித நிறுவனங்களாக இருந்ததால் தங்கள் குடிமை வாழ்வில் தாம் சந்திக்கும் அரசு துறையின் பிற நிருவாக அமைப்புகளின் குறைபாடுகளைவிடவும் திருக்கோயில்களின் நிருவாகக் குறைப்பாட்டை 'சீரியஸான' விசயமாக மக்கள் பார்த்தனர். ஆனாலும் பிரிட்டிஷ் அரசின் உள்ளூர் நிருவாகத்தில் தலையிடா கொள்கை யும், திருக்கோயில்களின் நிருவாகத்தில் அரசு தலையிடக்கூடாது என திருக்கோயில்களில் ஆதிக்கம் செலுத் தியவர்கள் கொடுத்த அழுத்தமும் நிலைமையை மோசமாக்கின.

திருக்கோயில்களில் அப்போதிருந்த சீர்கேடுகள் சொல்லிமாளாது. திருக்கோயில்களின் சொத்துக் களுக் கும், பிரிட்டிஷ் அரசும் மன்னர்களும் திருக்கோயில் களுக்கு வழங்கிய மானியங்களுக்கும் எந்தப் பாது காப்பும் இல்லை. திருக்கோயில்களை நிருவகித்தவர்கள் திருக்கோயில் சொத்துக்களை சொந்த சொத்துக்கள் போல் பயன்படுத்தினர். நாணயமான, உண்மையிலேயே அறச்சிந்தனையுள்ள அறங்காவ லர்கள் பலரும் இருந்தனர். எனினும் அவர்களாலும் சுயநலமிகளின் - ஆதிக்கவாதிகளின் போக்கை தடுத்து நிறுத்த இயலவில்லை. கோயில்களின் நகைகளுக்கு எந்த கணக்குப் பட்டியலும் பேணப்படவில்லை. அவை அந்தந்த திருக்கோயில்களின் அர்ச்சகர்களிடமே கொடுக்கப்பட்டிருந்தன. புராதனமான விலைமதிப்புமிக்க அந்த நகைகள் அவர்கள் வீட்டு சொந்த சொத்துப் போலவே அவர்களது ஆளுகையில் இருந்தன. இத்தகு சீர்கேடுகள் குறித்து யாரேனும் நீதிமன்றங்களை அணுகினால் “ஸ்கீம் சூட்டுகள்” மூலம் தாங்கள் விரும்பும் “ஸ்கீம்”களைப் பெற்று தாங்கள் செய்யும் அறமற்ற செயல்களுக்கு சட்ட அங்கீகாரம் பெற்று வந்தனர். இதற்கான ஆலோசனை பெறவும், வழக்காடவும் கோயில்களின் வருமானத்திலிருந்தே செலவழிக்கப்பட்டன. இதற்காக உயர்வகுப்பு (பார்ப்பன) வழக்கறிஞர்களுக்கு பெருந்தொகைகள் வழங்கப் பட்டன. நீதிமன்றங்களிலும் உயர்வகுப்பாரே நீதிபதி களாக அமர்ந்து “ஸ்கீம் சூட்டுகளின்” மீதான வழக்கு களில் கோயில்களை கொள்ளையடித்து வந்த கூட்டத் தார் கேட்ட “ஸ்கீம்”களை உருவாக்கிக் கொடுத்து உதவி செய்தனர். மொத்தத்தில் பெரும்பான்மை மக்களாக இருந்த இந்துக்களின் உணர்வுப்பூர்வமான நம்பிக்கைப் பூர்வமான புனித நிறுவனங்களான திருக்கோயில்களின் பெருமை அவற்றை நிருவகித்த வர்களாலேயே சிறு மைக்குள்ளாகின. பக்தர்களின் உணர்வுகள் காயப்பட் டன. நம்பிக்கைகள் பாழடிக்கப்பட்டன. திக்கு தெரியாத திசையில் திருக்கோயில்களின் எதிர்காலம் பயணித்துக் கொண்டிருந்தது!

இந்த நிலையில் இரண்டு முக்கிய நிகழ்வுகள் நடந் தன. ஒன்று மான்டேகு - செம்ஸ்ஃபோர்டு சீர்திருத்தம் 1919. மற்றொன்று தென்னிந்திய நல உரிமைச் சங்கமாக தொடங்கப்பட்ட பிராமணர் அல்லாதாரின் அமைப்பு நீதிக்கட்சியாக உருவெடுத்த நிகழ்வு. மான்டேகு - செம்ஸ்ஃபோர்டு சீர்திருத்தத்தின் விளைவாக இரட்டை ஆட்சி முறை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதனடிப்படையில் புதிதாக தேர்தல் நடத்தப்பட்டது. அந்த வகையில் 1920ல் நடந்த தேர்தலில் மதராஸ் மாகாணத்தில் நீதிக்கட்சி பங்கேற்று வெற்றிப்பெற்று அமைச்சரவை அமைத்தது. வகுப்புவாரி பிரதிநிதித்துவம் உட்பட்ட பல்வேறு புரட்சிகரமான திட்டங்களை செயல்படுத்த முனைந்த நீதிக்கட்சி ஆட்சி முத்தாய்ப்பாக இந்து சமய அறநிலைய வாரியம் ஒன்றை 1927இல் அமைத்தது. இதற்காக மெட்ராஸ் இந்து சமய அறநிலையங்கள் சட்டம் II / 1927 போடப்பட்டது. இச்சட்டத்தின்படி திருக்கோயில்களின் நிருவாகத் திட் டத்தை வகுக்கும் அதிகாரம் வாரியத்திடம் கொடுக்கப் பட்டது. அதேபோல நிருவாகத் திட்டம் சரியாக செயல் படாத திருக்கோயில்களுக்கு நிருவாக அதிகாரிகளை போடவும் வாரியத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டது.

மேற்படி அறநிலையத்துறை வாரிய சட்டம் அவ் வளவு சுலபமாக வந்துவிடவில்லை. அதைக் கொண்டு வருவதற்கு பார்ப்பனர்கள் பெரும் எதிர்ப்பு காட்டினர். அவர்கள் அனைவரும் ஒன்றுபட்டு அரசு மதத்தில் தலையிடுவதாக குறைகூறினர். 'இந்து', 'சுதேசமித்திரன்' போன்ற பத்திரிக்கைகள் கண்டனம் தெரிவித்து தலை யங்கம் தீட்டின. “ஆண்டவனையே சட்டம்போட்டு கட்டுப்படுத்துவதா” என்று - காங்கிரஸ் சத்தியமூர்த்தி அய்யர் ஆவேசப்பட்டார். நீதிக்கட்சியில் இருந்த சில ரும்கூட புரியாமல் இச்சட்டத்தை எதிர்த்தார்கள் என்பது வேடிக்கை. அப்போதைய வைஸ்ராய் இர்வினிடம் முதலமைச்சர் பனகல் அரசர் எடுத்துச் சொல்லி சட்டத் திற்கான ஒப்புதலைப் பெற்றார்.

இச்சட்டத்திலும் குறைபாடுகள் இருந்ததால் 1951இல் மெட்ராஸ் இந்து சமயம் மற்றும் அறக்கொடைகள் சட்டம் XIX இயற்றப்பட்டது. இதன்படி கீழிருந்து மேலாக அதிகார மட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டு அதிகாரிகள் நியமிக்கப்படவும் தலைமை அதிகாரியாக ஆணையர் ஒருவர் நியமனம் செய்யப்படவும் வழிவகை செய்யப் பட்டது. அதிகாரிகளின் நிருவாக எல்லைகளும் வரை யறுக்கப்பட்டன. இறுதியாக 1959இல் முந்தைய சட்டங் களின் பெரும்பான்மையான குறைபாடுகள் களையப் பட்டு தற்போதுள்ள சட்டமான தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சட்டம் 1959 (தமிழ்நாடு சட்டம் XXII / 1959) இயற்றப்பட்டது. இதன்படி இந்து சமய திருக்கோயில்களை நிருவகிப்பதற்கான தனியான அரசுத்துறை ஒன்று உருவானது.

எனவே இந்து சமய கோயில்களை நிருவகிப்பதற்கான அரசுத்துறை உருவாக்கம் என்பது இந்துத் திருக் கோயில்களின் முறையான நிருவாகத்திற்காகவும் சொத் துப் பராமரிப்புக்காகவுமேயாகும். எந்தக் கட்டுப்பாடு களும் பொறுப்பு நிர்ணயமும் இல்லாதிருந்த திருக் கோயில்களின் நிருவாகங்கள் மீது இச்சட்டம் கட்டுப் பாட்டையும் பொறுப்பு நிர்ணயத்தையும் கொண்டு வந்தது. இதன் மூலம் இந்து மக்களின் நீண்டகால கோரிக்கையான முறையான திருக்கோயில் நிருவாகம் என்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் நடந்த சமூக நீதி போராட்டங்களின் விளைவாக அரசுப் பணிகளிலும் கல்வி நிலையங்களில் மாணவர் சேர்க் கையிலும், இடஒதுக்கீட்டு முறை கொண்டுவரப்பட்டது. நீதிக்கட்சியின் சாதனையான வகுப்புவாரி பிரதிநிதித்து வத்தின் வெற்றிகரமான நீட்சியே தற்போதைய இட ஒதுக்கீடு முறை. கடந்த அய்ம்பது ஆண்டுகளில் தமிழ் நாடு அரசில் தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர், பிற் படுத்தப்பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள், சிறுபான்மையினர், பெண்கள் என பலரும் இடஒதுக் கீட்டின் பலனாக வேலைவாய்ப்புப் பெற்று முன்னேறி யுள்ளனர். அந்த வகையில் இந்தியாவிற்கே சமூக நீதிக்கான முன்மாதிரி மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது. இந்து சமய அறநிலையத்துறையிலும் இத்தகு புரட்சிகரமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இந்து சமய அறநிலையத்துறையில் வேலைக்கு வருபவர்கள் 'இந்து வாக' மட்டுமே இருக்க வேண்டும் என்ற விதி உறுதியாக கடைபிடிக்கப்படுகிறது. இந்து மதத்தை சேர்ந்த ஆண் கள் மட்டுமே இந்து சமய அறநிலையத்துறையின் கட் டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் செயல் அலு வலர்களாக வரமுடியும் என்ற நிலை ஒரு முக்கியமான சட்டப் போராட்டத்தின் மூலம் மாற்றப்பட்டு சமூகத்தின் சரிபாதியாக உள்ள பெண்களிலிருந்தும் செயல் அலு வலர்கள் வேலைக்கு வருகின்றனர். இன்று இத்தகு மாற் றங்களால் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப் பாட்டில் உள்ள திருக்கோயில்களின் நிருவாகத்தை வர்ணாசிரம முறையால் ஒடுக்கப்பட்ட வாய்ப்புகள் மறுக் கப்பட்ட இந்து சமூகங்களிலிருந்து வந்த ஆண்களும் பெண்களும் கவனித்து வருகின்றனர். கடவுளின் முன் அனைவரும் சமம் என்பதும், அரசமைப்பு சாசனத்தின் முன் அனைத்து குடிமக்களும் சமம் என்பதும் இதன் மூலம் நிலைநாட்டப்பட்டுள்ளது.

ஆனால் திருக்கோயில்கள் என்பவை வெறும் வழி பாட்டு இடங்கள் மட்டும் அல்ல. திருக்கோயில்களுக் கென ஏராளமான அசையும், அசையா சொத்துக்கள் உள்ளன. கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் உலகப்பொருளாதார மாற்றங்களின் விளைவாக நிலம் என்பது பெரும் சந்தை சரக்காக மாற்றப்பட்டுள்ளது. நிலத்தின் மதிப்பு தகவல் தொழில்நுட்ப கம்பெனிகள், பன்னாட்டு நிறுவனங்கள் ஆகியவற்றின் வருகையால் பன்மடங்கு உயர்ந்துள்ளது. தனியார் வசம் இருந்த நிலங்கள், வயல்வெளிகள் போன்றவை ரியல் எஸ்டேட் செய்து முடிக்கப்பட்டுவிட்டன. வருவாய்துறைக்கு சொந்தமான நிலங்கள் பல்வேறு அரசுத்துறை வளர்ச்சி பணிகளுக்கும், நிலமில்லாதவர்களுக்கான இலவச நிலங்கள் வழங்குவது போன்ற திட்டங்களுக்கும் பயன் படுத்தப்பட்டு குறைந்து விட்டன. பிற துறைகளின் பொது சொத்துக்களுக்கும் இதுபோன்ற அல்லது வேறு வகை யான காரணங்களால் குறைவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அரசுக்கு அடுத்து நிலச் சொத்துக்கள் அதிகம் உள்ள நிறுவனங்களாக திருக்கோயில்கள் உள்ளன. அர சுத்துறை என்ற அளவில் வருவாய்த் துறைக்கு  அடுத்து அதிக அளவு அசையாச் சொத்துக்களைக் கொண்டுள்ள அரசுத்துறை இந்து சமய அறநிலையத்துறையே ஆகும். இந்து சமய அறநிலையத்துறையில் உள்ள சீர்திருத்தம் செய்யப்படவேண்டிய குறைபாடுகளையும் மீறி இத் துறையின் சிறப்பான நிருவாக முறையால் திருக்கோயில் களின் வருவாய் பெருமளவில் உயர்ந்துள்ளன.

ஆக்கிர மிப்பில் இருந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் குறியீடு நிர்ண யித்து திருக்கோயில்களுக்கு திருப்பணி செய்து குட முழுக்குகள் வெகுசிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றன. இதையெல்லாம் செய்பவர்கள் இத்துறையின் நிருவாகத் திலுள்ள சமூக நீதி கோட்பாட்டால் உரிமைபெற்று வேலைக்கு வந்துள்ள தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பழங்குடியின பெண்களும் ஆண்களுமே ஆவர். இதனைச் சகித்துக்கொள்ள முடியாத உயர் சாதியினர் (பார்ப்பனர்) நீண்டகாலமாகவே தங்களுக்குள் பொருமிக் கொண்டிருந்தனர். தற்போது தங்களுக்குச் சாதகமான அரசியல் சூழல் ஏற்பட்டுள்ள தாகக் கருதும் அவர்கள் வரலாற்றுச் சக்கரத்தை பின் னோக்கிச் சுழற்றி மீண்டும் திருக்கோயில்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கான முயற்சியில் இறங்கியுள்ளனர். இதற்காக அறநிலையத்துறையையும், அதிலுள்ள அலுவலர்களையும் மிகமோசமான வார்த் தைகளால் பழித்துப்பேசி கோயில்களைவிட்டு அற நிலையத் துறையை வெளியேறச் சொல்லி கூக்குரல் எழுப்பி வருகின்றனர்.

 

 

 

 

 

என்ற மிழ் நாடும் எழில்மிகு மொழியும்

நின்று நிலவிட நாடெலாம் போற்றிட,

புதுவை தன்னில் எளியதோர் வீட்டில்

கொட்டும் மழையாய்க் கொட்டிய பாக்கள்

குன்று போல் குவியும் குவலயம் போற்றும்

நாத்திக நெஞ்சத்தான் நற்றமிழ்க் கவிக்கோ

பெரியாரைப் போற்றிப் பெருமை மிகு கவி வடித்தான்

“வயதில் அறிவில் பெரியார் - நாட்டின்

வாய்மைப் போருக்கு என்றுமே இளையார்”

“மண்டைச்சுரப்பை உலகு தொழும் - அவர்

மனக்குகையில் சிறுத்தை எழும்” என்று

சமூக விடுதலை வேந்தனுக்குச் சிறப்புக் கவி தந்தான்

என்னருந் தமிழ் நாட்டில்

எழுச்சிக் கவி வடித்த கவிஞன்

முதல் கவிதையிலேயே முழக்கமிட்டவன்

நாடு மணக்க வந்த நற்றமிழ் - கவிக்கோமான்

செந்தமிழ் செழிக்கச் செய்த

சீர்மிகு கருத்தாளன் - இவன்

வண்டமிழ்ப் பாட்டுக் கேட்டு

வளமாகக் காதினிக்கக் கருத்திணிக்க

வீரத்தமிழ் ஒலித்திட்ட வேங்கை

சங்கநாதம் முழக்கமிட்ட கவிக்கங்கை

காடு கழனி கார்முகில் எல்லாம்

காலை மலரச் சோலை மலரும்

கனக சுப்புவிற்கோ கவிகள் மலரும்

உழைக்கும் தோழர்க்கு உன்னத நண்பன் அவன்

“சித்திரச்சோலைகளே - உமைநன்கு

திருத்த இப் பாரினிலே - முன்னர்

எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தனரோ!

உங்கள் வேரினிலே!” - என

அவர்தம் உழைப்பை உணர்ந்து உருகிய பெருமகன்

அழகு தமிழில் அதிரசப்பாக்கள் அள்ளி வீசினான்

சக்தியைப் பாடிய செந்தமிழ்க் கவிஞன்

இயற்கை எழிலின் இன்பம் மற்றும்

குயில் மயில் போன்ற குருவிகள் வாழ்க்கை

அனைத்தும் கவியாய் அவன் பாட்டில் புகுந்தன!

சமுதாயக் கொடுமைகள் சாடியே நின்றான்.

“கோரிக்கை அற்றுக் கிடக்குதண்ணே - இங்கு

வேரிற் பழுத்த பலா - மிகக்

கொடியதென்றெண்ணிடப் பட்டதண்ணே - குளிர்

வடிகின்ற வட்ட நிலா” என

விதவையர் நிலைக்கு வருந்திய பாக்கள்!

“தமிழுக்கும் அமுதென்று பேர் அந்த

தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்

மங்கையொருத்தி தரும் சுகமும் எங்கள்

மாத்தமிழுக்கு ஈடில்லை கண்டீர்!” எனத்

தமிழின் பெருமைக்குத் தனிச்சுவைப் பாடல்கள்

“கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால்

மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர் கடுகாம்!

கண்ணாடிக் கன்னத்தைக் காட்டி என்

உள்ளத்தைப் புண்ணாக்கிப் போடாதே!” எனக்

காதல் ததும்பும் கவிதைகள் யாத்தார்!

அறியாமை இருளை அகற்ற நினைத்தவர்

“சாணிக்குப் பொட்டிட்டுச் சாமியென்பார்

செய்கைக்கு நாணி உறங்கு நகைத்து நீ

கண்ணுறங்கு” எனத்தாலாட்டுப் பாடித்

தண்டமிழ்ப் பெண்களைத் தட்டியெழுப்பினார்!

இம்மட்டோ அம்மட்டோ அப்பப்பா

இருமும் போதும் இன்றமிழ்ப்பாட்டு

தும்மும் பொழுதும் தூய்தமிழ்பாக்கள்

பாரதிதாசனின் பாக்கள் யாவுமே

வெல்லம் சர்க்கரை விழையும் தேனே!

கற்கண்டுச் சுவைபோல் கவிதைகள் இனிக்கும்!

பலாச்சுளைக் கவிதையைப் படித்து மகிழ்க!

சுந்தரத் தமிழைச் சுவைத்து மகிழ்க!

சிந்தை தெளிவுறச் சீர்மிகு தமிழில்

சந்தனப்பாக்கள் தரணிக்கு அளித்த

விந்தைக் கவிஞன் பாரதிதாசன்

செந்தமிழ் வாழும் காலமெல்லாம்

வாழிய வாழிய வாழிய பல்லாண்டே!

- எழில் அண்ணாமலை,

தஞ்சை


"ஒழுக்கம் உயர்குலம்"-இக்கட்டுரை 1917 ஜூலை 10இல் வெளிவந்துள்ளது. கட்டுரையாளர் ரா.பி. சேதுப்பிள்ளை பி.ஏ. "ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்; இழிந்த பிறப்பாய் விடும்"

எனும் குறளுக்கு விளக்கமளித்து எழுதப்பட்ட இக்கட்டுரையில் பார்ப்பனர்கள் கடுமையாகக் கண்டிக்கப்பட்டுள்ளனர். இக்காலத் திலே நம் கைப்பொருளையெல்லாம் நம் மக்கள் கல்வியிற் செலவிடாது, நம்மை அடியோடு ஒழிக்க எண்ணங்கொண்டுள்ள வேதியரென்னும் பார்ப்பார்க்குக் கொடுப்பது அறியாமையே யல்லவா?

ஜாதி, குலம், பிறப்பு என்னும் பிரிவுகளும், பாகுபாடுகளும் பிற்காலத்தில் பார்ப்பன ரால் நம் நாட்டிற்குண்டாகிய பெருங் கேடென்பதை நாம் நன்றாக உணர வேண்டும். "பாம்பிற்குப் பாலூட்டி வளர்ப் பாரும், வேங்கைக்கு நோய் தீர்ப்பாரும் உலகில் உண்டா?

நம்மைக் கொல்ல நினைத்துள்ள எதிரியிடம் நம் ஆயுதத்தை கொடுத்தால் சும்மா விடுவானா? ஆகவே திராவிட நன்மக்களாகிய நாமனைவரும் இன்றுமுதல் நன்மை தீமைகளில் பார்ப் பனனுக்குக் கொடுக்க நினைத்துள்ள பொருளை நம் மாணவர்களின் கல்விக்காக உபயோகப்படுத்துவ தென்று கங்கணம் கட்டிக்கொள்வோமானால் திராவிட நாடு சீரும் சிறப்பும் பொருந்தி உன்னத பதவியடையும் என்பதில் சிறிதும் அய்ய மில்லை.

திராவிடராகிய நாம் நன்மை தீமை களைக் கொண்டாடும் போது அளவிறந்த பொருளைத் தீயொழுக்கம் குடிகொண் டிருக்கிற பார்ப்பனருக்குக் கொடுத்து ஆதரிக்கின்றோமல்லவா?

அனுதினமும் ஆயிரம் ஆயிரமாக பார்ப்பனர்களுக்கு அள்ளிக்கொடுக்கும் பொருளையெல்லாம் திராவிட நிதியாகச் சேர்த்து ஒவ்வொரு சிற்றூரிலும் பள்ளிக் கூடமும் கல்லூரியும் ஸ்தாபிக்க வேண்டும். முயற்சி செய்வோமானால் நம் சிறுவர்கள் கல்வியில் தேர்ச்சியடைந்து முன்னேற்ற மடைவது திண்ணம்." (ப.6)

1917 அக்டோபர் 26இல் வெளிவந்த திராவிடனில் இரா.பி.சேதுப்பிள்ளையின் பேருரை பின்வருமாறு வெளியிடப்பட் டுள்ளது.

“ஒருமுறை சங்க நூல்களை ஒதுவோ மாயின் பண்டைக்காலத்தில் இருந்த நம் முடைய ஏற்றமும் அப்போது ஆரியர்களி ருந்த நிலையும் நன்கு விளங்கும் என்றும்,

இப்போது உலகெங்கும் பிரசித்திப் பெற்றுள்ள விவேகானந்தர், மெஸ்ஸர்ஸ் கோஷ், சர்.சின்ஹா. சர்.சங்கரன் நாயர், பிபின் சந்திர பால் இவர்கள் யாவரும் பார்ப்பனரல்லாதாரே’’ என்றும் சொன்னார்.

"பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும்" என்னுங் குறளை இனிது விளக்கிக் காட்டி னார். நம் பாஷையில் பாண்டித்ய மடைந்துள்ளவர்கள், எம்.ஏ. பட்டம் பெறலாமென்றிருந்தும் இப்போது எடுக்கப் பட்டுச் சம்ஸ்கிருத்திலும் பாண்டியத்துவ மடைந்தவர்களுக்குத் தான் எம்.ஏ. பட்டங்கொடுக்க வேண்டு மென்றும், நம் தலையில் நாமே மண்ணை வாரிப்போட்டுக் கொண்டது போல் நம்முடைய பணத்தைச் செலவழித்துப் போலி பார்ப் பனர்கள் அந்த நன்மையை அடையச் செய்வதை இனி நிறுத்திவிட நம்முடைய நன்மைக்காக யாவருங் கங்கணங்கட்டிக் கொண்டுழைக்க வேண்டுமென ரா.பி.சேதுப்பிள்ளை கூறினார்.

நூல்: நீதிக்கட்சியின் திராவிடன் நாளிதழ் ஓர் ஆய்வு

நூலாசிரியர் பெ.சு.மணி

பக்கம் 323 & 324

Banner
Banner