தொடர்


பதிமூன்றாம் அத்தியாயம்

(சருக்கங்கள் 68 முதல் 71 முடிய)

இத்தகையார் கடவுள ராம் நான்முகன் அம்புகள் இராவணாதியர் ஏவினால், இராமனா தியரைக் கொல்லாமல் மயக்கத்தில் ஆழ்த்து கின்றதும், இராமனாதியர் ஏவினால், இராவணா தியரைக் கொன்று விடுவதுமாக இருக்கின்றது!

அம்பு கூடவா இப்படி இருத்தல் வேண்டும் கதை எழுதினா லும் இப்படியா கட்டுக் கதைகள் பொருந்தா வாறு எழுதுதல் வேண்டும்.

நாகக் கணையை விடுவிக்க ஒரு கருடன் வந்து விடு கிறான்!

மிக அழகே போதாக் குறைக்கு இரா வணன் இராமனைத் தெய்வமாகிய திருமாலே என எண்ணி வருந்தினனாம் இராமனுடைய பெருமையை உயர்த்த வேண்டுமானால், இப் படியல்லவா பொய்க்கதை கட்ட வேண்டும்?

திருமால் எத்தனை முறை இராவணனுக்குத் தோற்றோடியவன்! பொய்யும் பொருந்து மாறில் லையே! இனி கம்பர் போக்கைக் காண்போம்.

அதிகாயன் இலக்குவனுக்குத் தூதனுப்பிய தாகக் கம்பர் புதுக்கதை எழுதுகிறார். வீடணன் வாயால் மதுகைடவர் வரலாற்றைக் கூறிய தோடு, இராமன் உண்மையில் அதிகாய னைக் கண்டு புகழ்ந்தனனாகவும், அதை மறைத்து வீடணனிடம் இலக்குவனுடைய பெருமை யைக் கூறினனென அவர் பாடுகிறார். எல்லா இடங்களிலும் அவர் ஏறுக்குமாறே செய்கிறார்.

நராந்தகனாதியோர் அதிகாயனுக்கு முன் னரே மடிந்தனராகக் கம்பர் அவர்கள் அவ னுக்குப் பின்னரே மடிந்தனரெனக் கூறுவ தோடு, தாருகன், காலன், குலிசனாதி அறுவர் முன் இறந்தனரென எழுதுகிறார்.

ஆனால், அவர் அனுமானால் தேவாந்தகனும் திரிசிர சும் இறந்த செய்தியை மட்டும் அதிகாயன் கொலைக்கு முன் கூறுகிறார்.

அதிகாயன் மாண்டபின் அங்கதன் நராந்த கனையும, நீலன் மத்தனையும், இடபன் வய மத்தனையும், சுக்கிரீவன் கும்பனையும், அனுமன் அங்கதனை வென்ற நிகும்பனையும் கொன்றதாகக் கம்பர் எழுதுகிறார்.

அங்கதன் நராந்தகனைக் கொன்றது உண்மையே. ஆனால், நீலன் மகோதரனையும், இடபன் மகாபார்சனையுமே கொன்றதாக வால்மீகி கூறுகிறார்.

மத்தன் வயமத்தன் என்பன புதுப் பெயர்களே. ஆனால், மகோதரனுடைய வேறு பெயராகிய யுத்தோன் மத்தனென்ப தையும் மகாபார்சனுடைய வேறு பெயராகிய மத்தன் என்பதையும் வேறு அரக்கர் பெய ரென மயங்கி இங்ஙனம் கம்பர் மாறுபடக் கூறினரெனத் தெரிகிறது. கும்பநிகும்பர் மடிவு இப்பொழுது நிகழ்ந்ததன்று. கம்பர் இங்கே சேர்த்திருப்பது மிக மாறுபட்டதே.

கம்பர் தமக்கு விருப்பமான சொல்லை இதில் சொல்லி மகிழவில்லையே என எண் ணினோம். ஆனால், அவர் தானியமாலை புலம்பலென வருவித்துக் கொண்டு, அவள் தன் மகனாகிய அதிகாய்ன் இறந்தமை கேட்டு மார்பில் அடித்து அழுதாள் என்று சொல்லும் போது, முலைக்குவட்டு எற்றும் கையாள் (பாடல் 267 அதிகாயன் வதைப் படலம்) என்று புகன்றுளார்.

அவர் சிந்தை காமத்தை மறப்பதேது? இனிமேற் செல்லுதும்.

(தொடரும்)

 

இதிகாசங்கள் என்றும் புராணங்கள் என்றும்  மக்களிடையே உலவ விடுகிறார்கள்.

இவற்றிற்குத் தெய்வீக முத்திரைகள் குத்துகின்றனர் இவற்றைப் படித்தால், இவற்றின்படி ஒழுகினால் நல்லது நடக்கும் - நற்கதி கிடைக்கும் என்றெல்லாம் இன்றுவரை கூடப் பிரச்சாரம் செய்கிறார்கள்.

உண்மையில் அவை என்ன?

இவற்றின் தன்மை என்ன?

ஒழுக்கத்திற்கு இடம் இருக்கிறதா?

பகுத்தறிவுக்கு வழி இருக்கிறதா?

ஒன்றும் இல்லை.

வால்மீகி இராமாயணம் பற்றி சைவப் பெரும் புலவரான பண்டித இ.மு.சுப்பிரமணிய பிள்ளை  (சந்திரசேகரப் பாவலர்) ‘குடிஅரசி’ல் எழுதிய பகுதிகள் (நூலாகவும் வெளிவந்துள்ளன).

இங்கே வாரம் இருமுறை வெளியிடப்படுகிறது.

படியுங்கள் - பகுத்தறிந்து பாருங்கள் - தெளிவு பிறக்கும்.

Banner
Banner