எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

- குடந்தை கருணா

கால் நடை பாதுகாப்பு எனும் முகமூடி அணிந்து, பல்வேறு பிரிவு மக்களின் உணவு விசயத்தில் ஓர் கட்டுப்பாட்டை மத்திய அரசு திணித்திருக்கிறது.

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங் குடி மற்றும் சிறுபான்மை மக்களுக்கு எதிரான கலாச்சார யுத்தம் என்பதையும் தாண்டி, பொருளாதார அளவுகோலின்படி, மத்திய அரசின் இத்தடை சரியானதா?

உழைக்கும் மக்கள் தங்களின் சொற்ப வருவாயில், தங்களுக்கான சிறந்த புரோட்டின், இரும்பு சத்து நிறைந்த உணவாக மாட்டிறைச்சியைத் தான் கருதுகிறார்கள். மற்ற அசைவ உணவுகளான மீன், ஆட்டிறைச்சி போன்றவைகளைக் காட்டிலும், மாட்டிறைச்சி, விலை குறைவானது. ஆனால், சத்து நிறைந்தது. இதை தங்கள் உணவாக உழைக்கும் மக்கள் உட்கொள்ளும் நிலை, ஏழைகள் நிறைந்துள்ள இந்தியா போன்ற நாட்டில் தவிர்க்க இயலாதது.

மேல்தட்டு மக்களும், தங்கள் இல்லங்களையும் தாண்டி, அய்ந்து நட்சத்திர விடுதிகளில் பறிமாறப்படும் உணவுகளில், மாட்டிறைச்சியும் இருக்கிறது. அவர்கள் விருப்பப்பட்டு உண்கிறார்கள். இதில் தலையிட வேண்டிய அவசியம் இப்போது ஏன்?

உலகம் முழுவதும் மாட்டிறைச்சி உண்கிறார்கள். அங்கெல்லாம், மாடுகளை பராமரிக்க அந்த அரசுகளுக்கு தெரியாத ஒரு புதிய யுக்தி, மோடி அரசிடம் திடீரென, ரம்லான் துவங்கும் நாளில் தோன்றுவதற்குக் காரணம் என்ன?

உத்தரப்பிரதேசத்தில் அண்மையில் பாஜக ஆட்சியைக் கைப்பற்றி யது. கோவிலில் பூசாரியாக இருந்து வஸ்தா அரசியல் செய்து வந்த யோகி, முதல்வர் பதவியை கைப்பற்றினார். உடன், மாட்டிறைச்சிக்கு தடை என உத்தவு போட்டார். உச்சநீதிமன்றம், உணவு விசயத்தில் தடை செய்ய முடியாது என யோகியின் மூக்கை உடைத்தது.

இதற்கு பழி தீர்க்கும் விதமாக, மத்திய அரசு இப்போது தடையை இந்தியா முழுமைக்கும், மாநிலங்களை கலந்து ஆலோசிக்காமல், தன்னிச்சையாக ஓர் அவசர ஆணையைப் பிறப்பித்துள்ளது.

நாட்டின் 125 கோடி மக்களும் தன் பக்கம் என மேடை தோறும் பெருமை பேசும் மோடி அவர்கள், மக்களவையில் பெரும்பான்மை உறுப்பினர்களைக் கொண்டு ஆட்சி செய்யும் மோடி அவர்கள், மக்களின் எந்த பிரச்சினையிலும், அது 500, 1000 நோட்டு செல்லாது என்ற அறிவிப்பாக இருந்தாலும், பசுவைப் புனிதப்படுத்தும் ஆர்.எஸ்.எஸ். அஜெண்டாவின் நீட்சியாக, மாடு, ஒட்டகம் என விலங்குகள், மாட்டிறைச்சிக்கு தடை என வெகுமக்களை பாதிக்கும் பிரச்சினையாக இருந்தாலும், இவைகளை, விவாதத்திற்கு உட்படுத்தாமல், ஆணை பிறப்பிப்பது, ஜனநாயக ரீதியில், பாசிச ஆட்சி நடைபெறுகிறது என்பதற்கான ஓர் அடையாளம். மேற்குறிப்பிட்ட, நோட்டு செல்லாது என்ற ஆணையும், மாட்டிறைச்சி தடை என்ற ஆணையும், மோடி அரசிற்கு சரியானதொரு பொருளாதாரக் கொள்கை இல்லை என்பதையும் தெளிவாக்குகிறது.

மோடி அரசின் மாட்டிறைச்சிக்கான தடையை, வெகுமக்கள் மட்டுமல்ல, பொருளாதார ரீதியில் நாடு முன்னேற வேண்டும் என நினைப்பவர்கள் அனைவரும் எதிர்க்க வேண்டும்.



.
 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner