தமிழர்களின் சிந்தனைக்கு

ஊன்றிப் படித்து உண்மையை உணருங்கள்! - 2

இந்துக் கோவில்களின் பணத்தை எடுத்து

அரசால் செலவு செய்யப்படுகின்றதா?

இந்து சமய அறநிலையைக் குறித்து எழுப்பப்படும் ஒரு முக்கியமான குற்றச்சாட்டு, அந்தத் துறையின் பணத்தை எடுத்து பிற துறைகளுக்கு செலவழிக்கிறார்கள் என்பது. இது இந்துத்துவவாதிகளால் தொடர்ந்து சொல்லப் படும் பொய். கட்டுக்கதை.

இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. ஆகவே, எந்த ஒரு மதத்திற்காகவும் தன் நிதியைச் செலவுசெய்ய முடியாது. இது ஒரு அடிப்படையான விஷயம். ஆகவே, இந்து சமய அறநிலையத் துறையின் நிதியை அரசு பயன்படுத்துவதும் இல்லை. மாநில அரசின் நிதியை கோவில்களுக்கென செலவழிப்பதும் இல்லை. இதைப் புரிந்துகொள்ள கோவில் கள் எப்படி நிர்வகிக்கப்படுகின்றன என்பதைத் தெரிந்து கொள்வது முக்கியம்.

இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் தற்போது 38,635 கோவில்கள் உள்ளன. இவற்றில் திருக் கோவில்கள் 36,595. திருமடங்கள் 56. திருமடத்துடன் இணைந்த திருக்கோவில்கள் 57.  Specified அறக்கட்ட ளைகள் 1,721. அறக்கட்டளைகள் 189. அரசியல்சாஸனத்தைப் பொறுத்தவரை, சமணர்களும் இந்துக்கள் என்பதால், சமணக் கோவில்களையும் இந்து சமய அறநிலையத் துறையே நிர்வகிக்கிறது. அப்படி 17 சமணக் கோவில்கள் இந்தத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. மொத்தமாக 38,635.

இந்தக் கோவில்கள் பிறகு Non-Listed Temples (பட்டியலைச் சாராத கோவில்கள்), Listed Temples
- (பட்டியல் கோவில்கள்)  என்று பிரிக்கப்படுகின்றன. இதற்கு அந்தக் கோவில்களின் வருமானமே அடிப்படையாக அமைகிறது. கோவில்களுக்கு உண்டியல், வாடகை என ஆண்டு வருமானம் பத்தாயிரம் ரூபாய்க்கு கீழே உள்ள கோவில்கள்  Non-Listed  கோவில்கள். அந்த வகையில் 34,082 கோவில்கள் இருக்கின்றன.

ஆண்டு வருமானம் பத்தாயிரம் ரூபாய்க்கு மேலே உள்ள கோவில்கள் மூன்றாகப் பிரிக்கப்படுகின்றன. முதல் பிரிவு, ஆண்டு வருமானம் 10,000 முதல் இரண்டு லட்ச ரூபாய் வரை உள்ள கோவில்கள். இவற்றின் எண்ணிக்கை 3,550. இரண்டாவது பிரிவு, ஆண்டு வருமானம் இரண்டு லட்சம் முதல் பத்து லட்சம் வரை உள்ளவை. இவற்றின் எண்ணிக்கை 672. மூன்றாவதாக ஆண்டு வருவாய் 1,00,000 ரூபாய்க்கு மேற்பட்டவை. இவற்றின் எண்ணிக்கை 331.ஆக, கிட்டத்தட்ட 85 சதவீதக் கோவில்கள் ஆண்டு வருவாய் பத்தாயிரம் ரூபாய்க்கு கீழே உள்ளவைதான்.

இத்தனை ஆயிரம் கோவில்களையும் நிர்வகிக்க மிகப் பெரிய கட்டமைப்பை தமிழக அரசு உருவாக்கி வைத்திருக் கிறது. இந்த கட்டமைப்பின் ஒட்டுமொத்த தலைவர் ஆணையர். அவருக்குக் கீழே, கூடுதல் ஆணையர்கள், இணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள், தனி அலுவலர்கள், கண்காணிப்புப் பொறியாளர்கள், செயற் பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள்,  முதுநிலை வரை நிலை அலுவலர்கள், கணக்கு அலுவலர்கள், தணிக்கை அலுவலர், துணை இயக்குனர் என இந்தக் கட்டமைப்பு செயல்படுகிறது. இவை தவிர, கோவிலை நிர்வகிக்கும் அந்தந்த கோவில்களின் ஊழியர்கள் தனி.

சரி, இவர்களுக்கான சம்பளத்தை யார் வழங்குவது, அரசா, கோவில்களா? கோவில் ஊழியர்களைத் தவிர்த்த அனைவருக்கும் தமிழக அரசுதான் சம்பளத்தைத் தரு கிறது. ஆணையரில் துவங்கி, தணிக்கை அலுவலர், துணை இயக்குனர் வரை அனைவரும் அரசு ஊழியர்கள். சரி, ஒரு மதச்சார்பற்ற அரசு எப்படி இந்துக் கோவில்களின் நிர்வாகத்திற்காக தன் பணத்தை செலவிட முடியும் என கேள்வியெழுப்பலாம்.

அதற்கும் ஒரு ஏற்பாடு இருக்கிறது. Assessible income   என்று சொல்லக்கூடிய வரி செலுத்தக்கூடிய வருவாயில் 14 சதவீதம் அரசுக்குச் செல்லும். இந்த 14 சத வீதத்தை கோவில்களில் இருந்து பெற்று, இந்தக் கட்ட மைப்பை நிர்வகிக்கிறது தமிழக அரசு. கோவிலின் நேரடி ஊழியர்கள், அந்தக் கோவிலின் நிதி நிலைக்கு ஏற்ப ஊதியம் பெறுவார்கள்.

இந்த 14 சதவீதத்தைத் தவிர, இந்துக் கோவில்களின் வருவாய் எதையும் அரசு எடுப்பதில்லை.

இதற்கு மற்றொரு ஏற்பாட்டை அரசு செய்திருக்கிறது. அதாவது Commissioner Common Good Fund
என்று இதற்குப் பெயர். அதிக வருவாய் உள்ள கோவில்கள் இந்த நிதிக்கென ஒரு குறிப்பிட்ட அளவு வருவாயைச் செலுத்த வேண்டும். இந்த நிதியிலிருந்துதான் வருவாய் கிடைக்காத கோவில்களின் திருப்பணிகளும் பிற செலவுகளும் சமாளிக்கப்படுகின்றன.

உண்மையில், ஒரு கோவிலில் கிடைக்கும் வருவாயை வங்கியில் போட்டுவைக்கவே பல விதிமுறைகளை அரசு வகுத்திருக்கிறது. முதலாவதாக, தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் ஒரு குறிப்பிட்ட அளவை டெபாசிட் செய்ய வேண்டும். இரண்டாவதாக கூட்டுறவு வங்கிகளில் ஒரு குறிப்பிட்ட அளவை டெபாசிட் செய்ய வேண்டும். மூன்றா வதாக, அதிக வட்டி கிடைக்கும் வங்கியில் குறிப்பிட்ட அளவை டெபாசிட் செய்ய வேண்டும். அரசு குறிப்பிட்ட அளவு மாறினால்,  தணிக்கையின்போது அது கவனிக்கப் பட்டு, கோவிலின் நிர்வாக அதிகாரிக்கு நோட்டீஸ் அனுப் பப்படும்.

கோவிலின் நிதி என்பது இவ்வளவு கட்டுப்பாட்டுடன் நிர்வகிக்கப்படுகிறது. ஆனால், ஏதோ இந்துக் கோவில் களின் பணத்தை எடுத்து இலவசத் திட்டங்களுக்கு அரசு செலவுசெய்வதைப்போல ஒரு பொய்ப் பிரச்சாரம் தீவிர மாகச் செய்யப்படுகிறது.

இந்த ஆண்டில் இந்தியாவிலேயே மிகச் சுத்தமாக நிர் வகிக்கப்படும் கோவிலுக்கான விருதை மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பெற்றது. அதற்குத் தகுதியான கோவில் தான் அது என்பதை அங்கு சொல்பவர்கள் உடனடியாக உணர முடியும்.

ஒவ்வொரு கோவிலையையும் அறநிலையத் துறை கையகப்படுத்தும்போது, அந்தக் கோவிலுக்கென உள்ள நகைகள் அனைத்தும் பட்டியலிடப்பட்டு பதிவு செய்யப் படுகின்றன. ஒரு நகை இந்தப் பட்டியலுக்குள் இடம் பெற்று விட்டால், அந்த நகை காலாகாலத்திற்கும் பாதுகாக்கப்படும். வருடந்தோறும் இந்த நகைகள் எடுத்து, பரிசோதிக்கப்பட்டு, தணிக்கை செய்யப்படும். அறநிலையத் துறையின் கட்டுப் பாட்டில் உள்ள ஒவ்வொரு கோவிலிலும் இந்த நடைமுறை வழக்கத்தில் உள்ளது.

இதையெல்லாம் மீறி ஒரு சிலை திருட்டுப்போனால், அந்தக் கோவிலின் நிர்வாக அதிகாரி, அறங்காவலர்கள், பாதுகாவலர்கள், ஊழியர்கள் என பல தரப்பினரும் விசார ணைக்கு உள்ளாக்கப்படுவதோடு, வழக்கையும் எதிர் கொள்வார்கள். அப்படியானால், சிலை திருட்டுகள் நடப்ப தில்லையா என்றால், நடக்கிறது என்பதுதான் உண்மை. ஆனால், அவை விதிவிலக்குகள். இம்மாதிரி திருட்டில் ஈடுபடுபவர்கள் கடும் தண்டனைக்கு உரியவர்கள் என் பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

அதை விடுத்துவிட்டு, அறநிலையத் துறை என்ற அமைப்பையே கலைத்துவிட வேண்டும் என்று கோருவது முட்டாள்தனமானது. இவ்வளவு பெரிய அமைப்பைக் கலைத்துவிட்டு, சட்டங்களை நீக்கிவிட்டு, இந்த நிர் வாகத்தை யாரிடம் கொடுப்பது? பச்சை பொய் ராஜாக் களிடமா?

ஏற்கனவே ஆதீனங்கள்தான் மதுரைக் கோவிலைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள்; அரசு அநியாயமாக அந்தச் சொத்தைப் பிடுங்கிக்கொண்டுவிட்டது. மீண்டும் சமயப் பெரியார்களிடம் அதை ஒப்படைப்பதே முறை என்கிறது இந்தக் கும்பல். ஆனால், உண்மை என்ன? மீனாட்சி அம்மன் கோவில் ஆதீனத்தின் சொத்தா? அவர்கள் எப்போதாவது நிர்வாகம் செய்திருக்கிறார்களா? இதோ விளக்கம்!

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் துவக்கம் குலசேகர பாண்டியனது காலத்தில் ஆரம்பிக்கிறது.அந்த மன்னன், கோவில் வழிபாடுகளை நடத்த சில கவுட பிராமணர்களை நியமித்தார். ஆனால், கோவில் நிர்வாகம் நேரடியாக மன்னனின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. இந்த நிலை 14ஆம் நூற்றாண்டில் மதுரையை ஆட்சி செய்த பராக்கிரம பாண்டியன் காலம் வரை நீடித்தது. 1310ல் மாலிக் காஃபூர் மதுரை மீது படையெடுத்துவந்து, கோவி லைச் சூறையாடினான். பாண்டியர்கள் மதுரையை நீங் கினர். பிறகு குமார கம்பன்னர்கள் 1378ல் மதுரையை மீட்டு, கோவிலில் வழிபாடுகளைத் தொடரச் செய்தனர். அப் போது துவங்கி நாயக்கர் ஆட்சி முடிவுக்கு வரும்வரை மீண்டும் மன்னர்கள் கட்டுப்பாட்டிலேயே மதுரைக் கோவில் இருந்தது. குறிப்பாக திருமலை நாயக்கர் ஆட்சிக் காலத்தில் மதுரையும் மீனாட்சி அம்மன் கோவிலும் பெரும் வளர்ச்சியை அடைந்தன. கடைசி அரசி மீனாட்சி சாந்தாசாகிபால் கொல்லப்பட்ட பிறகு உற்சவ மூர்த்திகள் மானாமதுரைக்கு கொண்டுசெல்லப்பட்டன. கோவிலில் அரச ஆதரவின்மையால் வழிபாடுகள் குன்றின. பிறகு கிழக்கிந்திய கம்பெனி மதுரையின் நிர்வாகத்தைக் கைப் பற்றியது.

1801ல் மதுரை ஆட்சியராக உர்திஸ் பதவியேற்றார். அப்போது முதல் 1841 வரை மாவட்ட ஆட்சியர் வசமே கோவில் நிர்வாகம் இருந்தது. ஆனால், இந்துக் கோவில் களை ஏன் கிறிஸ்தவர்கள் நிர்வகிக்க வேண்டும் என பாதிரிமார்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். கவனிக்கவும், இந்துக்கள் கிளர்ச்சி செய்யவில்லை. கிறிஸ்தவர்களே கிளர்ச்சி செய்தனர். இதனால் கோவில் நிர்வாகம் முத்து செல்லத் தேவர் என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் மீது ஊழல் புகார்கள் எழவே, தனசிங் என்பவரிடம் ஒப் படைக்கப்பட்டது. அவர் மீதும் புகார்கள் எழுந்தன.

அப்போதுதான் முதன்முதலாக கோவில் நிர்வாகம் 1859ல் மதுரை ஆதீனம் எனப்படும் திருஞானசம்பந்தர் மடத்தின் தலைவரிடம் கொடுக்கப்பட்டது. ஆனால், நிர் வாகம் சரியில்லையென புகார்கள் எழுந்தன. இதையடுத்து 1864ல் ஆதினகர்த்தர் தலைமையில் அய்வர் குழு அமைக் கப்பட்டது. இருந்தபோதும் தினசரி நிர்வாகத்தை தாசில்தார் கவனித்துவந்தார்.

ஆனால், இதிலும் நிலைமை சரியில்லாத நிலையில் மீண்டும் கோவில் நிர்வாகம் பிரிட்டிஷ் அரசின் வசம் சென்றது. அவர்கள் முத்து கரு.வெ. அழகப்பச் செட்டி யாரை ரிசீவராக வைத்து கோவிலை நிர்வகித்தனர். அதற் குப் பிறகு தொடர்ச்சியாக பிரிட்டிஷ் அரசுதான் கோவில் நிர்வாகத்தைக் கவனித்துவந்தது.

1937இல் கோவிலின் நிர்வாக அதிகாரியாக இருந்த ஆர்.எஸ். நாயுடுதான் தமிழகத்திலேயே முதன் முறையாக தாழ்த்தப்பட்டவர்களை கோவிலுக்குள் அழைத்துச் சென்றார். தனிநபர்களின் வசம் கோவில் இருந்திருந்தால், குறிப்பாக மதுரை ஆதீனம் வசம் கோவில் இருந்திருந்தால் நித்யானந்தாவிற்கு வரவேற்பு கிடைத்திருக்குமே தவிர, எளிய மக்கள் உள்ளேயே நுழைந்திருக்க முடியாது.

ஆக, ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் நீளும் வரலாற் றில் ஆதீனம் கோவிலை நிர்வாகம் செய்தது வெறும் 5 ஆண்டுகள்தான். அதிலும் ஆயிரம் புகார்கள்.

உண்மையில் திருமலை நாயக்கர் காலத்திற்குப் பிறகு, மதுரைக் கோவில் தன் மகோன்னத நிலையை எட்டியிருப் பது இப்போதுதான். ஒரு தீ விபத்தால் எல்லாம் மாறிவிடாது.

நமது திருக்கோவில்கள் வெறும் வழிபாட்டுத் தலங்கள் மட்டுமல்ல. அவை பொதுமக்களின் வாழ்வின் அங்கம். அவற்றை ஒருபோதும் தனிநபர்களால் நிர்வகிக்க முடியாது.

தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டுவரும் சமூக நீதி செயல்பாடுகளால் தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடி யினர், பிற்படுத்தப்பட்டவர்கள் எனப் பலரும் அறநிலையத் துறையில் பணியாற்றிவருகின்றனர். அறங்காவலர் குழு வில் நிச்சயமாக ஒரு தாழ்த்தப்பட்டவர் இடம்பெற வேண் டுமென்கிறது சட்டம். இதைப் பலரால் சகிக்க முடியவில்லை. ஆகவேதான் மீண்டும் தங்களது தனியுரிமை கோலோச்ச வேண்டும் என்கிறார்கள்.

தமிழ்நாட்டுக் கோவில்களுக்குச் சொந்தமான நிலங்கள் கொள்ளை போகின்றன என்பது நீண்டகாலமாக சொல்லப் பட்டுவரும் ஒரு குற்றச்சாட்டு.

தமிழ்நாட்டில் கோவில்கள் என்பவை வெறும் வழி பாட்டுத் தலங்கள் மட்டும் அல்ல. கோவிலைச் சுற்றி வழிபாடு தவிர்த்து மிகப் பெரிய வாழ்க்கை இருந்தது. இலக்கியம், இசை, நடனம், பழக்க வழக்கங்கள், சடங்குகள் எல்லாமே அந்தந்த ஊரின் கோவில்களைச் சார்ந்தவை. இப்போதும் மதுரை மக்களின் ஆழ்மனதில் மீனாட்சி அம்மன் கோவில் என்பது எப்போதும் நிலை கொண்டி ருக்கும், அவர் எந்த மதத்தவராயினும் சரி. மீனாட்சி கோவி லின் திருவிழாக்களை ஒட்டியே, மக்கள் தங்கள் திட்டங் களை, நல்லது - கெட்டதுகளை வகுத்துக்கொள்வார்கள்.

ஆகவே, இம்மாதிரி கோவில்கள் நல்ல முறையில் செயல்பட, அவை தோன்றிய காலம்தொட்டே மன்னர் களும் ஆட்சியாளர்களும் அந்தக் கோவில்களுக்கு நிலங் களையும் செல்வங்களையும் பெரும் அளவில் அளித்தனர். அப்படி அளிக்கப்பட்ட நிலங்களுக்கு வரி கிடையாது. ஆகவே அவை ‘இறையிலி நிலங்கள்’ என்று அழைக்கப் பட்டன.

இப்படி வழங்கப்பட்ட நிலங்கள் இரண்டு வகைப்படும். ஒன்று, கோவில் பெயரிலேயே முற்றிலுமாக இறைவனுக்கு எழுதிவைக்கப்பட்ட இறையிலி நிலங்கள். இரண்டாவது, ‘குடி நீங்கா தேவதான’ நிலங்கள். முதல் வகை நிலத்தைப் பொறுத்தவரை, அது முற்றிலுமாக கோவிலுக்குச் சொந்த மான நிலம். அதன் பயன்பாடு கோவிலைச் சார்ந்தது.

இரண்டாவது வகை நிலத்தைப் பொறுத்தவரை, அந்த நிலம் குடியானவருக்குச் சொந்தமாக இருக்கும். ஆனால், அந்த நிலத்தில் விளையும் விளைச்சலில் ஆறில் ஒரு பங்கை கோவிலுக்குச் செலுத்த வேண்டும்.  இந்த நிலங் களை குடியானவர்கள் விற்கலாம், குத்தகைக்கு விடலாம், வாடகைக்கு விடலாம். ஆனால், இறைவனுக்கு விதிக்கப் பட்டதை தந்துவிட வேண்டும்.  மதுரையில் சிறிய கோவில் களுக்குக்கூட இப்படி ‘குடி நீங்கா தேவதான’ நிலங்கள், வீடுகள் இப்போதும் உண்டு.

தமிழகத்தில் ஆங்கில ஆட்சி வந்த பிறகு, மாநிலத்தின் பல பகுதிகளில் உள்ள நிலங்களுக்கு வரி வருவதில்லை என்று கண்டுபிடித்தனர். அப்படி எந்தெந்த நிலங்கள் வரி விதிக்கப்படாமல் இருக்கின்றன என்பதைக் கண்டறிய ஒரு ஆணையம் ஒன்றை அமைத்தனர். அந்த ஆணையத்தின் பெயர்  . இந்த ஆணையத்தின் அலுவலர்கள் ஒவ்வொரு கிராமமாகச் சென்று, நிலங்களை அளந்து, இனாம் நிலங் களைக் கண்டறிந்து அவற்றை உறுதிப்படுத்தினர். அந்த நிலங்களை யாரெல்லாம் பயன்படுத்திவந்தார்களோ அவர் களுக்கு   என்ற உரிமைப் பத்திரம் வழங்கப்பட்டது. பிறகு இந்த விவரம் இனாம் சுத்த நகல் பதிவேட்டில் -   - பதிவுசெய்யப்பட்டது. இந்தப் பதிவேடு இரு பிரதிகளாக உருவாக்கப்பட்டது. ஒரு பிரதி மாவட்ட தலைமையகத்தில் வைக்கப்பட்டது. இரண்டாவது பிரதி சென்னை ஆவணக் காப்பகத்தில் வைக்கப்பட்டது. தமிழக ஆலயங்களுக்கு கிறிஸ்தவர்களான ஆங்கிலேயர்கள் செய்த மிகப் பெரிய சேவை இது.

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, இனாம் நிலங்கள், ஜமீன்தாரி நிலங்களை ஒழித்து அவற்றை வரி விதிக்கும் முறைக்குள் - ரயத்வாரி - கொண்டுவருவதற்கான நடை முறைகள் உருவாக்கப்பட்டன. அப்போதுதான் தமிழக கோவில் நிலங்களுக்கு மிகப் பெரிய அநீதி நிகழ்ந்தது.

அதாவது, 1960ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதியன்று யாரெல்லாம் ஜமீன் நிலங்கள், கோவில் நிலங்கள், புறம் போக்கு நிலங்களை 12 ஆண்டுகளாக பயன்படுத்தி வந் திருக்கிறார்களோ, அவர்களுக்கு நிலங்கள் பட்டா போட் டுத் தரப்பட்டன. 12 ஆண்டுக்குக் குறைவான காலத்திற்கு நிலத்தைப் பயன்படுத்தியவர்கள் குறிப்பிட்ட தொகையை கொடுத்த பிறகு, நிலத்தை வைத்துக்கொள்ளலாம் என்று சட்டம் கூறியது.

கோவில்களுக்கு சொந்தமான நிலம் இவ்வாறு தனிநபர் களுக்கு வழங்கப்பட்டால், அதற்கான இழப்பீட்டை தமிழக அரசு அந்தக் கோவில்களுக்கு தரும் என்று கூறப்பட்டது. அப்போதுவரை இப்போதுவரை இந்த இழப்பீடு வந்து சேரவில்லை.

இந்தச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு, 1963.

திராவிடக் கட்சிகள் மீது

குற்றம் சாட்டுவது தப்பு!

இப்படி நிலங்களை அப்போது அனுபவித்துவந்தவர்கள், பா.ஜ.ககாரர்கள் சொல்வதைப் போல தி.மு.கவினர் அல்ல. கோவில் அர்ச்சகர்கள், ஊழியர்கள், ஆளும் கட்சியின் செல்வாக்கைப் பெற்றவர்கள்தான். பல லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள், சர்வ மானிய கிராமங்கள் இந்தச் சட்டத் தினால் தனியாருக்கு தாரைவார்க்கப்பட்டன. இந்தக் காரி யத்தைச் செய்தது எம். பக்தவத்சலம் தலைமையிலான காங்கிரஸ் அரசு. இப்படி பறிபோனது போக எஞ்சியிருப் பதே தற்போதுள்ள கோவில் நிலங்கள்.

பொதுவாக கோவிலுக்கு நிலங்களை எழுதி வைப்ப வர்கள், கோவில் பெயரில் எழுதிவைக்க மாட்டார்கள். அந்தக் கோவிலில் உறையும் இறைவனின் பெயருக்கே எழுதிவைப்பார்கள். இறைவனின் பெயரிலேயே கோவில் நிலங்கள் இருக்கும். ஆகவே, பதிவாளர்கள், உள்ளூர் வட்டாட்சியர்களைக் கைக்குள் போட்டுக் கொண்டு, இறைவனின் பெயரைக் கொண்டிருந்தவர்கள், தங்கள் பெயரில்தான் அந்த நிலங்கள் இருக்கின்றன என்று பட்டா போட்டுக்கொண்டார்கள்.

கோவில்களின் நிர்வாகத்தை அரசிடமிருந்து மீட்க வேண்டும் என்று சொல்லும் இந்து அமைப்புகள், திராவிட கட்சிகள்தான் கோவில் நிலங்களை, சொத்துக்களைக் கொள்ளையடித்ததாகக் குறைகூறுவார்கள். ஆனால், இந்த நில விவகாரம் தொடர்பாக தி.மு.க. அரசில் இரு முக்கிய மான விஷயங்கள் நடைபெற்றன.

அதாவது, ஒரு நிலத்தை மீட்பதற்கான வழக்குத் தொடுக்கும்போது, எந்த நிலத்தை மீட்க வழக்குத் தொடுக் கிறோமோ அதன் மதிப்பில் 7.5 சதவீதத்தை நீதிமன்றத்திற் குக் கட்ட வேண்டும்.  ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் என்றால், ஏழரை லட்ச ரூபாய் கட்ட வேண்டும். இவ்வளவு தொகையை புரட்டுவது அறநிலையத் துறைக்கு சிரமமான காரியம். ஆகவே, தி.மு.க ஆட்சிக் காலத்தில் ஒரு அர சாணை வெளியிடப்பட்டது. அதன்படி, அறநிலையத் துறை சொத்து தொடர்பான வழக்குகளுக்கு 15 ரூபாய் நீதிமன்றக் கட்டணமாக செலுத்தினால் போதும்.

தவிர, சென்னையில் அமலில் இருந்த வாடகைக் கட்டுப்பாட்டுச் சட்டம், கோவிலுக்குச் சொந்தமான வீடு களில் இருந்து, வாடகை செலுத்தாத நபர்களை வெளி யேற்றுவதில் சிக்கலை ஏற்படுத்தியது. ஆகவே, தமிழக அரசு மற்றொரு அரசாணையின் மூலமாக, கோவில் கட்ட டங்களுக்கு இந்தச் சட்டத்திலிருந்து விலக்கு அளித்தது.

இந்த இரு அரசாணைகளும் பல ஏக்கர் விஸ்தீரண முள்ள கோவில் நிலங்களையும் பல ஆயிரம் சதுர அடி பரப்புள்ள கட்டங்களையும் மீட்க உதவியது. இந்த இரு அரசாணைகளும் தி.மு.க. தலைவர் மு. கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில் வெளியிடப்பட்டவை.

 

நாளை தொடரும்

ஊன்றிப் படித்து உண்மையை உணருங்கள்!

ஆலயங்களைக் கைப்பற்ற ஆரிய பார்ப்பனர்கள் அவிழ்த்துவிடும் பொய்கள் - அதற்கான பதில்கள்!

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து ஏற் பட்ட பிறகு, ஒரு தரப்பிலிருந்து வேகமாக பொய்ப் பிரச் சாரங்கள் அவிழ்த்துவிடப்பட்டன. அந்தப் பிரச்சாரங்களின் தொனி இதுதான்: அறநிலையத் துறை வருவதற்கு முன்பாக மடாதிபதிகளும் தர்ம சிந்தை உடையவர்களும் கோவிலை நிர்வகித்து வந்தார்கள்; அறநிலையத் துறை வந்த பிறகு கோவில்களை கைப்பற்றி, அதற்கு உரிய நிலங்களை விற்று, சொத்துக்களை விற்றுவிட்டது. இதில் அரசியல் வாதிகள் லாபம் பெறுகிறார்கள். இது முழுக்க முழுக்கப் பொய் என்பது எழுதுபவர்களுக்கே தெரியும். இருந்த போதும் இந்தப் பிரச்சாரம் இன்றுவரை தொடர்ந்து வருகிறது. இதில் சில நாளிதழ்களும் ஈடுபட்டுவருகின்றன.

மீனாட்சி  அம்மன் கோவில் தீ விபத்து ஏற்பட்ட சில நாட்களில் நாளிதழ் ஒன்றில், கட்டுரை ஒன்று வெளிவந்தது. "தீயில் என்ன ஆச்சரியம்: அனைத்தும் சட்டவிரோதம்" என்ற அந்தக் கட்டுரைப் படித்த பக்தாள் அனைவரும், அதில் உள்ள தகவல்களைச் சரிபார்க்காமல், சமூக வலை தளங்களில் கொண்டாட்டத்துடன் பகிர்ந்துவருகிறார்கள்.

அதற்கு அடுத்த நாள் அதே நாளிதழில் ஒரு குறிப்பு. அதாவது 1965லேயே மதுரை மீனாட்சி அம்மன் கோவில், நெல்லையப்பர் கோவில் உள்ளிட்ட 45 கோவில்களிலிருந்து அரசு வெளியேற வேண்டுமென உச்ச நீதிமன்றம் தீர்ப் பளித்ததாகவும் ஆனால், அந்தத் தீர்ப்பு ரகசியமாக இருப் பதாகவும் அந்தக் குறிப்பு கூறியது. அந்த 45 கோவில்களின் பட்டியல் வேறு. இதுவும் வேக வேகமாக பரப்பப்பட்டது.

இதில் உள்ள தகவல்கள் ஒவ்வொன்றும் எப்படிப் பொய்யானவை என்று பார்க்கலாம்.

1. மீனாட்சியம்மன் கோவிலை தனியார் வசம் அர சென்ன மாற்றுவது, அதை அரசு நிர்வகிப்பதே செல்லாது.

உண்மை: மீனாட்சி அம்மன் கோவில் ஒருபோதும் தனியாரால், தனி நபரால் நிர்வகிக்கப்பட்ட கோவில் அல்ல. குலசேகர பாண்டியன் காலத்திலிருந்தே மதுரை மன்னர் களால், கிழக்கிந்தியக் கம்பெனி நிர்வாகிகளால், பிரிட்டிஷ் அரசால், குறுகிய காலத்திற்கு மதுரை ஆதீனத்தால், மாநில அரசால் நிர்வகிக்கப்பட்ட கோவில். எப்போதுமே அரசின் வசமே இருந்த கோவில் அது. தனியார் வசம் மாற்றுவ தென்றால், யார் அந்த தனியார்?

2. 1920 முதல் 1937 வரை பதிமூன்று ஆண்டுகள் பிரிட் டிஷ் அரசுடன் இணைந்து தமிழகத்தை ஆண்ட நீதிக் கட்சி, கொள்கைகளுக்காக இந்து சமய அறக்கட்டளைச் சட்டத்தை நிறைவேற்றியது.

உண்மை: 1927ஆம் வருடச் சட்டத்திற்கு முன்பாக 1817ல் துவங்கி பல கட்டங்களாக இது தொடர்பான சட்டங் கள் அப்போதைய கிழக்கிந்தியக் கம்பெனி நிர்வாகத்தாலும் பிரிட்டிஷ் அரசாலும் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. இந்த உண்மையை மறைத்து, ஏதோ நீதிக் கட்சி ஆட்சி சதி செய்து கோவில் நிர்வாகத்தை பிடுங்குவதற்காக இந்தச் சட்டத்தை கொண்டுவந்ததாக நம்ப வைக்கவே இந்தப் பொய்த் தகவல்.

3. இதன் மூலம் தெப்பக்குளங்களின் மீன் குத்தகைக்கு விடப்பட்டது. கோவில் நிலங்கள் கேள்விக்குறியாகத் துவங்கின. சிலர் மட்டும் வருமானம் பார்க்கும் இடங்களாக கோவில்கள் மாறின.

உண்மை: கோவில் தொடர்பாக வருவாய் அளிக்கக் கூடிய இடங்களை குத்தகைக்கு விடுவதற்கு சட்டத்தில் இடம் இல்லாததது போலவும், திராவிடக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் இம்மாதிரி குத்தகைக்கு விட்டு, வருமானம் பார்ப்பது போலவும் ஒரு தோற்றத்தை ஏற்படுத்தும் தகவல் இது. ஆனால், உண்மை வேறு மாதிரியானது. கோவில்கள் முறைப்படி அறநிலையத் துறை நிர்வாகத்தின் கீழ்வந்த பிறகுதான், ஒவ்வொரு கோவிலுக்கும் எவ்வளவு நிலம் இருக்கிறது என்பது முறைப்படி கணக்கிடப்பட்டு பட்டிய லிடப்பட்டது.

இதற்காக அறநிலையத் துறை அலுவலர்கள் பட்டபாடு சொல்லிமாளாது. ஒவ்வொரு தாசில்தார் அலுவலகத்திற்கும் சென்று மணிக்கணக்கில் அமர்ந்து, அங்குள்ள மூலப் பத்திரங்களைப் பார்த்து, அவை கோவிலுக்குச் சொந்தமான வையாக இருந்தால் வழக்குத் தொடர்ந்து அந்த நிலங்களை மீட்டனர். அதற்கு முன்பாக எந்தக் கோவிலுக்கு எங்கே நிலங்கள் இருந்தன என்பது குறித்து எந்தத் தகவலும் முறைப்படி இருந்ததில்லை. கடவுள் நம்பிக்கை இல்லை என்று கூறிய திராவிடக் கட்சிகளின் ஆட்சியே இந்த நிலங்களை மீட்டது. தற்போது அறநிலையறையின் கீழ்

4 லட்சத்து 78 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் கண்டறியப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன. இது அறநிலையத் துறையின் மகத்தான சாதனைகளில் ஒன்று.

இது தவிர, இந்து சமய நிறுவனங்களுக்குச் சொந்தமாக 22,600 கட்டடங்களும் 33665 மனைகளும் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. இந்தக் கட்டடங்களை யார் கட்டியது? மன்னர்கள் கட்டினார்களா, இவர்கள் தனியார் தனியார் என்று சொல்பவர்கள் கட்டியதா? இவை அனைத்தும் அறநிலையத் துறையால் கட்டப்பட்டவை. இதன் மூலம் இந்தத் துறைக்கு 2017-18இல் மட்டும் 141 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இந்த மனைகளிலும் கட்டடங் களிலும் குடியிருப்பவர்களை வெளியேற்றி, அந்த இடங் களை பாழடைந்த இடங்களாகப் போட்டுவைத்தால், இவ்வளவு பணத்தையும் "தனியார்" கொடுப்பார்களா?

4. 1950ல் அரசியல் சாஸனம் அமலுக்கு வந்த பிறகு, எல்லா மதங்களுக்கும் சம உரிமை வழங்கப்பட்டது. மத உரிமை என்றால் வழிபாட்டுத் தலங்களின் நிர்வாக உரிமை யும் அடங்கும்.

உண்மை: அரசியல் சாஸனத்தின் பிரிவு இருபத்தியாறு, மத நிறுவங்களை நிர்வகிப்பது பற்றிக் கூறுகிறது. அதாவது,

ஷிuதீழீமீநீt tஷீ ஜீuதீறீவீநீ ஷீக்ஷீபீமீக்ஷீ, னீஷீக்ஷீணீறீவீtஹ் ணீஸீபீ லீமீணீறீtலீ, மீஸ்மீக்ஷீஹ் க்ஷீமீறீவீரீவீஷீus பீமீஸீஷீனீவீஸீணீtவீஷீஸீ ஷீக்ஷீ ணீஸீஹ் sமீநீtவீஷீஸீ tலீமீக்ஷீமீஷீயீ sலீணீறீறீ லீணீஸ்மீ tலீமீ க்ஷீவீரீலீt tஷீ மீstணீதீறீவீsலீ ணீஸீபீ னீணீவீஸீtணீவீஸீ வீஸீstவீtutவீஷீஸீs யீஷீக்ஷீ க்ஷீமீறீவீரீவீஷீus ணீஸீபீ நீலீணீக்ஷீவீtணீதீறீமீ ஜீuக்ஷீஜீஷீsமீs;

ணீ) tஷீ னீணீஸீணீரீமீ வீts ஷீஷ்ஸீ ணீயீயீணீவீக்ஷீs வீஸீ னீணீttமீக்ஷீs ஷீயீ க்ஷீமீறீவீரீவீஷீஸீ;

தீ) tஷீ ஷீஷ்ஸீ ணீஸீபீ ணீநீஹீuவீக்ஷீமீ னீஷீஸ்ணீதீறீமீ ணீஸீபீ வீனீனீஷீஸ்ணீதீறீமீ ஜீக்ஷீஷீஜீமீக்ஷீtஹ்; ணீஸீபீ

நீ) tஷீ ணீபீனீவீஸீவீstமீக்ஷீ suநீலீ ஜீக்ஷீஷீஜீமீக்ஷீtஹ் வீஸீ ணீநீநீஷீக்ஷீபீணீஸீநீமீ ஷ்வீtலீ றீணீஷ்.

இதில் எங்கேயாவது அரசு நிர்வகித்துவரும் சமய நிறுவனங்களை தனியாரிடம் கொடுக்க வேண்டுமெனவோ, அரசு நிர்வகிக்கக்கூடாது எனவோ இருக்கிறதா?  பிரிவு  26ன் படி, சமய நிறுவங்களை உருவாக்கி ஒருவர் நிர்வகிக்க உரிமை இருக்கிறது. அவ்வளவுதான்.

5. 1951ஆம் வருட சட்டத்தின் மூலம் கோவில்களை எல்லாம் அரசு ஆளுகைக்குள் எடுத்துக் கொண்டது. இதை எதிர்த்து தருமபுர ஆதீனம் உச்ச நீதிமன்றத்தில் போராடி 1965 பிப்ரவரி 10ஆம் தேதி ஒரு தீர்ப்பைப் பெற்றார். அதன்படி, மதுரை, ஸ்ரீரங்கம், ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட45 கோவில்கள் மீதான அரசின் உரிமை ரத்தானது.

உண்மை: திருவாரூர் மாவட்டம் தியாகராஜர் சுவாமி கோவிலை அரசாணைகள் மூலம் நிர்வகித்துவந்தது. அந்த அரசாணைகள் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்கப் பட்டன. 1951ல் வெளியிடப்பட்ட அரசாணையின் காலம் 1956ல் முடிவுக்கு வரவே, புதிய அரசாணையை வெளி யிட்ட தமிழக அரசு 1961ஆம் ஆண்டுவரை கோவிலை தங்கள் வசம் வைத்திருக்கப்போவதாகத் தெரிவித்தது. இதனை எதிர்த்து தருமபுர ஆதீனம் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகினார். அவரது வாதம், தங்களைக் கேட்காமல் இந்த அரசாணை வெளியிடப்பட்டுவிட்டது; ஆகவே இது செல்லாது என அறிவிக்க வேண்டும் என்பது தான். இதனை உயர் நீதிமன்றம் விசாரித்து தீர்ப்பளிக்கும் போது 1961 ஆகஸ்ட் மாதம் வந்துவிட்டது. இந்த அரசாணை யின் காலமே 1961 செப்டம்பரில் முடியும் நிலையில், இதில் தீர்ப்பளிப்பது தேவையில்லாதது என்று கூறி அந்த ரிட் மனுவைத் தள்ளுபடி செய்தது.

இதனை எதிர்த்து, ஆதினகர்த்தர் உச்ச நீதிமன்றம் சென்றார். அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆதீனகர்த்தாவின் முறையீட்டை ஏற்றது. அவரது தரப் பையும் கேட்டே அரசு அதனைச் செய்திருக்க வேண்டும் என்று கூறியது. இந்தத் தீர்ப்புதான் 1965 பிப்ரவி 10இல் வெளியானது. இதில் எங்கே மீனாட்சி அம்மன் கோவில் உட்பட 45 கோவில்கள் வருகின்றன?

6. இதுதான் இருப்பதிலேயே காமெடி. "இந்த உண்மை, தமிழக மக்களுக்கும் இந்து அமைப்புகளுக்கும் தமிழக வழக்கறிஞர்களுக்கும் தெரியாத ரகசியமாக இன்றளவும் இருந்துவருவது பேராச்சரியம்."

உண்மை: உச்ச நீதிமன்றத் தீர்ப்பை யாராவது ரகசிய மாக வைத்திருக்க முடியுமா? யாருக்கும் தெரியாத ரகசியம் இவருக்கு மட்டும் எப்படித் தெரிந்ததாம்? அப்படியே யாருக்கும் தெரியவில்லை என்று வைத்துக்கொள்வோம், வழக்கில் ஜெயித்த ஆதீனகர்த்தரும் தனக்கு சாதகமாக வந்த தீர்ப்பை ரகசியமாக வைத்துக்கொண்டாரா?

7. நீதிமன்றத் தீர்ப்பை நிறைவேற்றாமல் இருக்க 1965ல் புதிய சட்டங்களை உருவாக்கி கோவில்களின் கட்டுப் பாட்டை தானே வைத்துக்கொண்டது.

உண்மை: தனக்குத் தேவையான சட்டங்களை இயற் றும் அதிகாரம் சட்டமன்றத்திற்கு உண்டு அல்லவா? அதில் என்ன தவறு?

8. 3 மாதங்களுக்கு மேல் இருக்க முடியாத தக்கார் பதவி யில் நிரந்தமாக ஆட்களை வைத்துள்ளனர்.

உண்மை: அறங்காவலர்கள் இல்லாத காலகட்டத்தில், தக்கார் என்பவர் நியமிக்கப்பட்டு கோவில்கள் நிர்வகிக்கப் படும் என இந்துசமய அறநிலையத் துறை விதிகள் கூறு கின்றன. அறங்காவலர் குழு இருப்பதுதான் சரியானது. அப்போதுதான் பொதுமக்களுடன் பேச முடியும். தி.மு.க. ஆட்சியில் இருந்த 2011 வரை எல்லாக் கோவில்களிலும் அறங்காவலர் குழுக்கள் இருந்தன. 2011இல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, கோவில்களுக்கு தக்கார்களை நியமித்ததோடு நிறுத்திக்கொண்டார். கடைசிவரை அறங்காவலர் குழுக் களை நியமிக்கவில்லை. உடனடியாக அதைச் செய்ய வேண்டும். ஒவ்வொரு குழுவிலும் விதிப்படி, தாழ்த்தப் பட்ட வர்களை நியமித்து கோவில்களை நிர்வகிக்க வேண்டும். அப்போதுதான் நிலைமை மேம்படும்.

பொய் தகவல் 1: தமிழக அரசின் கொள்கை விளக்கக் குறிப்பேட்டில் 38,635 கோவில்கள் இருப்பதாக கூறப்பட்டு உள்ளது. இவற்றில் பல கோவில்கள் காணாமல் போய் விட்டன.

பதில்: உண்மையில் அறநிலையத் துறை வசம் உள்ள கோவில்கள் என்பவை, 36,441 இந்துக் கோவில்கள். 17 சமணக் கோவில்கள். மீதமுள்ளவை மடங்களுக்குக் கீழே உள்ளவை. ஆனால், அறநிலையத் துறையின் கண்காணிப் பில் இருப்பவை.

அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோவில்களின் பட்டியல் பின்வரும் இரு சுட்டிகளில் இடம்பெற்றுள்ளன.   லீttஜீ://ஷ்ஷ்ஷ்.tஸீலீக்ஷீநீமீ.ஷீக்ஷீரீ/ஜீபீயீ/விஷீஷீறீணீஸ்ணீக்ஷீ_ழிஷீஸீலிவீstமீபீ.ஜீபீயீ.

லீttஜீ://ஷ்ஷ்ஷ்.tஸீலீக்ஷீநீமீ.ஷீக்ஷீரீ/ஜீபீயீ/விஷீஷீறீணீஸ்ணீக்ஷீ_ழிஷீஸீலிவீstமீபீ.ஜீபீயீ. இவற்றில் காணாமல் போன பத்தாயிரம் கோவில்கள் எவை என அவதூறு ராஜாக்கள் தான் பதில் சொல்ல வேண்டும்.

பொய் தகவல் 2: உண்டியல் இல்லாத கோவில்களை ஒரு நாளும் நிர்வாகத்திற்குள் கொண்டுவந்ததில்லை.

பதில்: இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோவில்களில் 34,082 கோவில்கள் வருடத்திற்கு 10,000 ரூபாய் வருவாய்க்கும் கீழே உள்ளவை. அதாவது மாத வருவாய் சுமார் 850 ரூபாய் மட்டுமே. இது சராசரி அளவு மட்டுமே. பல கோவில்களில் வருவாய் இதற்கும் கீழே.

பல கோவில்களில் பூஜை செய்வதற்கான தாம்பாளத் தட்டுகளே கிடையாது. அரசு கையகப்படுத்திய பிறகுதான் அவற்றிற்கான பூஜை பொருட்கள் படிப்படியாக வாங்கப் பட்டு, ஒரு நேரமாவது பூஜை நடப்பது உறுதிசெய்யப்பட்டி ருக்கிறது. 12745 கோவில்கள் இப்படி ஒரு கால பூஜையில் தான் இயங்கிவருகின்றன. இதற்கென ஒவ்வொரு கோவி லின் பெயரிலும் ஒரு லட்ச ரூபாய் வைப்பு நிதி செலுத்தப் பட்டு, அதன் வட்டியில் இந்த பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

தாம்பாளம், தூபக்கால், மணி, கார்த்திகை விளக்கு, தொங்கும் விளக்கு ஆகியவை இல்லாத கோவில்களில் அவற்றை வாங்குவதற்காக வருடத்திற்கு இரண்டரைக் கோடி ரூபாய் என இரு வருடங்களாக 20,000 கோவில் களுக்கு இந்தப் பொருட்கள் வாங்கி அளிக்கப்பட்டுள்ளன. இந்தப் பொருட்களே இல்லாத கோவில்களில், உண்டியல் எப்படி இருக்கும்? இருந்தும் அறநிலையத் துறை பராமரித் துத்தானே வருகிறது?

பொய் தகவல் 3: கோவில் சொத்துகளை மீட்க மாட்டார்கள், ஆக்கிரமிப்புகளை அகற்ற மாட்டார்கள், சட்டம் இருந்தும் செயல்படாத அறநிலையத்துறை..

பதில்: நீதிமன்றங்களில் நிலம் தொடர்பாக தொடர்ந்து வழக்குகளைத் தொடர்ந்து போராடிவரும் அரசுத் துறைகளில் ஒன்று இந்து சமய அறநிலையத் துறை. இந்த வழக்குகளையும் மீறி, சொத்துக்களை ஆக்கிரமித்து வைத்திருப்பது, வேற்று மதத்தினர் அல்ல. இந்துக்கள்தான். தவிர, தற்போது கோவில்களுக்குச் சொந்தமாக உள்ள 4.78 லட்சம் ஏக்கர் நிலமும் இந்து சமய அறநிலையத் துறை அடையாளம் கண்டு கையகப்படுத்தியதுதான். யாரோ ஒரு மடாதிபதி எழுதிவைத்துவிட்டுப் போனதல்ல.

பொய் தகவல் 4: அறநிலையத் துறை வசம் உள்ள கோவில்களை இந்து ஆன்றோர் சான்றோர் அடங்கிய தனித்து இயங்கும் அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டு மென 1985ல் எம்.ஜி.ஆர் அரசால் உருவாக்கப்பட்ட கமிஷன் பரிந்துரைத்தது.

பதில். எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் கோவில்கள் தொடர்பாக இரு கமிஷன்கள் நியமிக்கப்பட்டன. ஒன்று நீதியரசர் மகராஜன் கமிஷன். இதன் அறிக்கை 1982இல் தாக் கல் செய்யப்பட்டது. இந்த ஆணையமானது, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக அனுமதிப்பது தொடர்பானது. நீதியரசர் மகராஜன் ஆணையம், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராவதை அனுமதிக்க வேண்டும் என்று பரிந்து ரைத்தது.

இரண்டாவது கமிஷன், திருச்செந்தூர் முருகன் கோவிலில் வேல் திருட்டுப்போனது தொடர்பானது. 1980 நவம்பர் 26ஆம் தேதி திருச்செந்தூர் கோவிலின் நிர்வாக அதிகாரி சி. சுப்பிரமணியம் பிள்ளை தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரம் மிகப் பெரிதாக உருவெடுத் தது.  டிசம்பர் 2ஆம் தேதி திருச்செந்தூரில் முழு அடைப்பே நடைபெற்றது. இதையடுத்து இந்த விவகாரத்தை விசாரிக்க நீதிபதி பால் தலைமையில் ஒரு கமிஷன் அமைக்கப்பட்டது. அந்த கமிஷன், விசாரணையத் துவங்கும் முன்பாகவே அந்த அறங்காவலர் குழுவைக் கலைக்க வேண்டும் என்றது. நீதிபதி பால், தனது விசாரணையை முடித்து அறிக்கையை சமர்ப்பித்த பிறகும், அது சட்டப்பேரவையில் தாக்கல்செய்யப்பட்டாத நிலையில், 1982இல் தி.மு.க. தலைவர் கருணாநிதி அதனை வெளியிட, அவர் மீதே வழக்குத் தொடரப்பட்டது.

மேலே சொன்ன இரண்டு கமிஷன்களுமே அறநிலை யத் துறையின் நிர்வாகம் தொடர்பானவையல்ல. யாருக்கும் தெரியாமல் வேறு எந்த கமிட்டி அல்லது கமிஷனை எம்.ஜி.ஆர். நியமித்தார்? தவிர, ஒரு கமிட்டி என்பது சட்டப்பேரவையைவிட மிக உயர்ந்த அமைப்பா?

பொய் தகவல் 5: கோவில்களின் நிர்வாகத்தில் தவறு நடந்தால் அதை எடுத்து சரிசெய்து, மீண்டும் அறங்காவ லர்களிடமே ஒப்படைக்க வேண்டும் என அறநிலையத் துறையின் சட்டம் சொல்கிறது.

பதில்: லீttஜீ://ஷ்ஷ்ஷ்.tஸீலீக்ஷீநீமீ.ஷீக்ஷீரீ/லீக்ஷீநீமீ_ணீநீt_1959.லீtனீறீ மேலே இருப்பது அறநிலையத் துறையின் 1959ஆம் வருடச் சட்டத்தின் சுட்டி. இதுதான் திருத்தங்களோடு இன்றுவரை தொடர்ந்து வருகிறது. இதில் எங்கே அப்படிச் சொல்லியிருக்கிறது?

பொய் தகவல் 6: கோவில்களின் பெயரில் நான்கு லட்சத்து 78 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் இருப்பதாக கொள்கை விளக்கக் குறிப்பு சொல்கிறது. அத்தனை நிலங்களும் அறநிலையத் துறையிடம் இருக்கின்றனவா? பட்டா யார் பெயரில் இருக்கிறது?

பதில்: கோவில்களின் பெயரில் நான்கு லட்சத்து 78 ஆயிரம் ஏக்கர் நிலம் இருக்கிறது என்று அரசு சொல்கிறது என கூறிவிட்டு, அறநிலையத் துறையிடம் இருக்கிறதா என்று கேட்டால் என்ன பதில் சொல்வது. இருக்கிறது என்று அவர்கள் சொல்வதையே எடுத்துப்போட்டு, இருக் கிறதா என்றால் என்ன செய்வது?

பொய் தகவல்: கோடிக் கணக்கில் நிலுவையில் உள்ள வாடகை பாக்கியை முறையாக வசூலிக்கவில்லை. கோவில் நிலங்களுக்கான வாடகை நிர்ணயம் மிக மோசமாக இருக்கிறது. பணம் வாங்கிக்கொண்டு யார் யாருக்கோ கோவில் நிலங்களை மாற்றித் தருவது நடக்கிறது. ஒரு ஏக்கருக்கு 245 காசுகள் வாடகையாக வாங்கப்படுகிறது.

பதில்: கடந்த ஆறு வருடங்களில் தனியார் பெயரில் தவறாக பட்டா மாற்றம் செய்யப்பட்ட, 789 கோவில்களுக்குச் சொந்தமான 5559.08 ஏக்கர் பரப்பு நிலங்களைக் கண்ட றிந்து கோவில்களின் பெயரில் பட்டா மாற்றியிருக்கிறது அறநிலையத் துறை. கடந்த ஆண்டில் மட்டுமே சுமார் 1120 ஏக்கர் நிலம் இப்படி மீட்கப்பட்டிருக்கிறது. இந்த வேலையைச் செய்ய ஓய்வுபெற்ற துணை ஆட்சியர்கள், வட்டாட்சியர்கள், ஓய்வுபெற்ற நில அளவையர்கள், ஓய்வு பெற்ற வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவ லர்களை தொகுப்பூதியத்திற்கு பணிக்கு அமர்த்தியிருக் கிறது அறநிலையத் துறை. கோவில்களையெல்லாம் தூக்கி, மடாதிபதிகளிடம் கொடுத்துவிட்டால் என்ன நடக்கும் என்று யோசித்துக்கொள்ளுங்கள்.

வாடகை நிர்ணயத்தைப் பொறுத்தவரை, மண்டல இணை ஆணையர், திருக்கோவில் செயல் அலுவலர், அறங்காவலர், மாவட்டப் பதிவாளர் ஆகியோர் அடங்கிய குழுதான் கோவிலுக்குச் சொந்தமான இடத்தின் வாட கையை முடிவுசெய்கிறது.  இதற்கும் பல்வேறு விதிமுறை கள் உள்ளன.

நிலங்களைப் பொறுத்தவரை, நஞ்சை விவசாய நிலங்களுக்கான குத்தகை 75:25 என்ற விகிதத்தில் உள்ளது. ஏக்கருக்கு 5 குவிண்டால் குத்தகை என்ற விகிதத்தில் (சற்று முன் பின் இருக்கலாம்) குத்தகை உள்ளது. இதன் இன்றைய விலை நிலவரம் 8000 ரூபாய் வரும். அவதூறு ராஜா சொல்வதைப் போல 245 காசுகள் அல்ல. தவிர, எல்லா நிலங்களும் நஞ்சை நிலங்கள் அல்ல.

இது தவிர, குத்தகைத் தொகையை சரியாகச் செலுத்தாத குத்தகைதாரர்களை வெளியேற்ற தமிழ்நாடு பொது பொறுப்புரிமை - விவசாய நிலங்கள் ஒழுங்குபடுத்துதல் மற்றும் மேலாண்மை - சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்கென 10 இடங்களில் வருவாய் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.  2016-17ஆம் ஆண்டுகளில் நடந்த 16511 வழக்குகளில், 9629 வழக்கு களுக்கு தீர்வு காணப்பட்டு 17 கோடியே 83 லட்ச ரூபாய் குத்தகையாக வசூலிக்கப்பட்டிருக்கிறது. ஆக்கிரமிப்பு விவகாரத்தைப் பொறுத்தவரை, கடந்த ஆறு ஆண்டுகளில் சுமார் 2315 ஏக்கர் விவசாய நிலமும் 468 கிரவுண்ட் பரப்பளவுள்ள மனையும் 179 கிரவுண்ட் பரப்பளவுள்ள கட்டடங்களும் மீட்கப்பட்டுள்ளன. இவற்றின் தற்போதைய சந்தை மதிப்பு 2887 கோடிகள்.

இந்தத் தகவல்களை யாரொருவரும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சரிபார்த்துக்கொள்ளலாம்.

இதுபோல இன்னும் பல தகவல்கள் அந்த பேட்டியில் தவறாக அளிக்கப்பட்டுள்ளன. அவற்றிற்கான பதில்கள் அடுத்த பாகத்தில்.

ஆனால், இப்படி தவறான தகவல்களைத் தருவதன் மூலம் இவர்கள் சாதிக்க நினைப்பது என்ன? இவ்வளவு பெரிய அமைப்பைக் குலைத்துவிட்டு, நாம் அடையப் போவது என்ன? திருக்கோவில்களை உண்மையிலேயே நேசிக்கும் பக்தன், இதனை குலைக்க உண்மையிலேயே விரும்புவானா? மனசாட்சியுடன் பதில் சொல்லுங்கள்.

தமிழ் உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாகத் தடை ஏன்?

ஊன்றிப் படித்து உண்மையை உணருங்கள்!

உயர்நீதிமன்றத்திலும் வழக்கு மொழியாக தமிழ்:

சட்டப்படி, நியாயப்படி சரியானதே!

தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கம்!

மதுரையில் உள்ள உயர்நீதிமன்றக் கிளை ஆகிய இரண்டு உயர்நீதிமன்றங்களிலும் வழக்கு மொழி யாக தமிழ் நடைமுறையாகும் என்ற கலைஞர் அரசு செய்த அறிவிப்பு, ஏதோ ஒரு சிலர் எண்ணுவதுபோல், வெறும் உணர்ச்சி வயப்பட்ட முடிவல்ல; அறிவுபூர் வமான, நடை முறைப்படுத்தக்கூடிய ஒரு சிறப்பான, தேவையான திட்டமாகும்.

நுனிப் புல்லர்கள் அறிவார்களாக!

எந்த ஒரு முடிவும் முதல்வர் கலைஞர் அவர் களது அரசைப் பொறுத்தவரை, விரைந்து எடுக்கப் படும் முடிவானாலும், ஆழ்ந்து சிந்தித்து, உரிய சட்ட வல்லுநர்கள் கருத்தை அறிந்தே மேற் கொள்ளும் முடிவுகளாகும் என்பதை ‘நுனிப்புல்லர்கள்’ அறிந்து கொள்ளவேண்டும்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 348(2) பிரிவின்படிதான் இந்த முடிவை தி.மு.க., அரசு எடுத்து, தமிழர்களின் காதுகளில் தேன்பாயச் செய் துள்ளது! இது ஒரு பொதுநலத் திட்டமும் ஆகும்!

வழக்குரைஞரோ, நீதிபதியோ என்ன பேசுகிறார் கள் என்று வழக்காடிகள் அறியாத ஒரு விசித்திரமான வேதனையான நிலை இதன் மூலம் விரட்டி அடிக்கப்படுகிறது; காரணம் ஆங்கிலம் தெரியாத வழக்காடிகளே அநேகம் பேர்கள்!

சட்டம் என்ன கூறுகிறது?

348(2)-இன்படி, ஒரு மாநிலத்தின் ஆளுநர் முன்கூட்டியே

அரசுத் தலைவரின் ஒப்புதலையைப் பெற்று, இந்தி மொழியிலோ அல்லது அந்த மாநிலத்தின் ஆட்சிமொழி எதுவோ அந்த மொழியிலோ, அந்த மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் வழக்கு மொழி யாகப் பயன்படுத்தலாம்.

ஆனால், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்போ, ஆணையோ டிக்கிரியோ, நீதிபதி கூறும்போது, அவற்றில் இது பொருந்தாது (இதனால் தீர்ப்புகள் ஆங்கிலத்தில் இருக்கவேண்டும் என்று கூறப் பட்டுள்ளது) பிறகு இதுகூட 1963 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட மத்திய ஆட்சி மொழிச் சட்டம் (No. XIX of 1963) 1967 ஆம் ஆண்டு திருத்தப் பட்டபடி அதன் 7 ஆம் செக்ஷன்படி உயர்நீதி மன்றத்தின் தீர்ப்புகள், ஆணைகள், டிக்கிரிகள் எது வும்கூட, குடியரசுத் தலை வரின் முன் அனுமதியோடு அந்த மாநிலத்தின் ஆட்சி மொழியில் அமையலாம் என்று தெளிவாகத் திட்டவட்டமாகக் கூறியுள்ளது). அதன்படி உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்கு மொழி யாகத் தடையேதுமில்லை.

பழம் நழுவி வாயிலும் விழுந்தது

இதனை சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதி கள் ஒட்டுமொத்தமாக வரவேற்றனர். முதல்வர் கலைஞர் சொன்னதுபோல், “பழம் நழுவி வாயிலும் விழுந்தது” போன்ற மகிழ்ச்சியான ஒன்றாகும்.

அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் எம்.என்.சுக்லா, கோபிநாத் ஆகிய இருவர் அடங்கிய 'டிவிஷன் பெஞ்ச்'

பிரபந்திக் சமிதி Vs ஜில்லா வித்தியாலய நிர்ஷாக் என்பவர்களுக்கிடையே வழக்கு ஒன்று 1976இல் நடைபெற்றது. (AIR 1977 அலகாபாத் பக்கம் 164) அந்த வழக்கில் தந்த தீர்ப்பு இதுபற்றி மிகவும் தெளிவாகவே - (உ.பி.,யில் இந்தியில் உயர்நீதிமன்ற ரிட் மனுவில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த தையொட்டி எழுந்த வழக்கு இது தீர்ப்பு எழுதப் பட்டுள்ளது.

மத்திய அரசின் சட்டம் மத்திய அரசு 1963 ஆம் ஆண்டைய ஆட்சி மொழிச் சட்டத்திற்கு திருத்தத் சட்டமாக(Act 19 of 1963) 1967 ஒரு சட்டம் கொண்டு வந்தது.

அதில் 7 ஆம் பிரிவின்படி,

“As from the appointed day or any day thereafter the Governor of the State may, with the previous consent of the President authorise the use of Hindi or the official language of the State, in addition to the English language for the purpose of any judgement, decree, or order passed or made by the High Court for that State and where any judgement, decree, or order, is passed or made in any such language (other than the English language) it shall be accompanied by a translation of the same in English language issued under the authority of the High Court.

குடியரசுத்தலைவரின் ஒப்புதலுடன் ஒரு மாநில ஆளுநர் ஒரு குறிப்பிட்ட நாள் அல்லது அதன்பின் எந்த ஒரு நாள் முதற் கொண்டோ, அந்த மாநிலத்தின் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவோ, கட்டளை அல்லது உத்தரவு பிறப்பிக்கவோ ஆங்கில மொழி யுடன் இந்தி அல்லது அம் மாநிலத்தின் ஆட்சி மொழியைப் பயன்படுத்தவோ அனுமதிக்கலாம்; அது போன்று ஆங்கிலம் தவிர வேறு ஒரு மொழியில் அந்த மாநில உயர்நீதி மன்றத்தால் வழங் கப்படும் தீர்ப்பு பிறப்பிக்கப்படும் கட்டளை அல்லது உத்தரவுடன் உயர்நீதி மன்றத்தின் அத்தாட்சி வழங்கப்பட்ட அதற்கான ஆங்கில மொழிமாற்ற தீர்ப்பு நகலும் இணைக்கப் படவேண்டும்.

இந்த 7 ஆம் பிரிவின்படி,

1. ஏற்கெனவே குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்றுச் செய்யவேண்டும்

2. ஆங்கிலத்துடன் கூடுதலாக இந்த மொழியும் வழக்கு மொழியாக நீதிமன்றத்தில் இருக்கலாம்.

3. இந்த மாநில ஆட்சி மொழியிலேயே தீர்ப்புகள், ஆணைகள், டிக்கிரிகள் தரப்படலாம், அதற்கு எவ்விதத் தடையும் இல்லை.

4. இதன் ஆங்கில மொழி பெயர்ப்பும் இந்த மாநில ஆட்சி மொழியில் தரப்படும் தீர்ப்புகளோடு கூடுதலாக தருதல் வேண்டும்.

அண்ணாவின் சாதனை

தமிழ்நாட்டில் அறிஞர் அண்ணா முதல்வராக வந்தவுடன் அவர் அறிவித்த மூன்று புரட்சிகரமான திட்டங்களில் - சாதனைகளில் - இருமொழி (தமிழ், ஆங்கிலம்) என்பது ஒன்று. இதனை வழக்காடி களுக்கும் பயன்பெறச் செய்ததன் மூலம் - தமிழைச் செம்மொழி என அறிவிக்க வைத்த கலைஞர் அவர்கள் மேலும் தனது ஆட்சி என்ற மணி மகுடத்தில் ஒளிரும் வைரம் ஒன்றையும் ஆழப் பதித்து விட்டார்கள்!

தமிழ் கூறும் நல்லுலகம் கலைஞருக்கும், அவர் தம் அமைச்சரவைக்கும் என்றென்றும் நன்றி கடன் பட்டது.

அண்ணா பெயரில் கட்சி நடத்தும் இன்றைய ஆட்சியாளர்கள் இவற்றை உணர்ந்து நடக்க வேண்டும்!

அதற்கான நடவடிக்கைகளில் முனைந்து செயல் படவேண்டும்.

 

=======================

தமிழ் வழக்குமொழியாக தக்கோர் தரும் தீர்வுகள்

 

நீதிபதி ஆர்.இலட்சுமணன்

நாட்டில் உள்ள ஒவ்வொரு மாநிலமும் ஒரு ஆட்சி மொழி ஆணையத்தை பெற்றிருத்தல் வேண்டும். தமிழ்நாடு அரசு இரண்டு அல்லது மூன்று ஆணையங்களை இதற்கு முன்பு நீதிபதி அனந்த நாராயணன், நீதிபதி மகராசன் மற்றும் பிறரைக் கொண்டு அமைத்திருந்தது.

ஆணையமானது மூன்று கலைச் சொற்களை வெளியிட்டது. இது ஏற்ற நேரம். ஒரு புதிய ஆட்சி மொழி ஆணையம் அமைக்கப்பட்டு அந்த ஆணையம் - ஆங்கிலச் சட்டங்களை தமிழில் மொழிபெயர்ப்புப் பணியினை எடுத்துக் கொள்ளலாம். மற்றும் இது செய்யப்பட்டால் அது அதிகாரப்படியான மொழிபெயர்ப்புக்கும் கொள் ளப்படும்.

இதனை உயர்நீதிமன்றங்களும் பிற நீதிமன்றங் களும் அதிகாரப்படியான மொழி பெயர்ப்பாக ஏற்கும். அரசானது உயர்நீதிமன்றத்தில் உண்மை யாகவே தமிழை ஒரு கூடுதல் மொழியாகப் புகுத்த அக்கறைகாட்டுமானால், அரசானது உட னடியாக ஆட்சி மொழி ஆணையத்தை அமைத் தல் வேண்டும். அது மொழிபெயர்ப்புப் பணி யையும் பிற இதுபோன்ற பணிகளையும் செய்தல் வேண் டும். தமிழை நீதிமன்றங்களில் புகுத்துவது, தமிழை நீதிமன்றங்களில் கூடுதல் மொழி யாகக் கொண்டு வருவதற்கு உள்கட்டமைப் புகளைச் சட்டத்தமிழில் கொண்டு வருவது அவசியம். இத்துடன் இணையாக - 348 ஆம் உறுப்பில் வகைசெய்யப்பட்டவாறு ஆளுநர், இந்திய அரச மைப்பின் 348 ஆம் உறுப்பிற்கிணங்க அறிக்

கையினை வெளியிட நடவடிக்கை எடுக்க முன் வருவார்.

மாநிலச் சட்டப்பேரவை - 348 ஆம் உறுப்பில் (3) ஆம் கூறின் படி - அதனால் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் மற்றும் சட்டங்களுக்கு ஆங்கிலம் அல்லாது வேறு மொழிகளைப் பயன்படுத்தும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

==================

 

தலைமை நீதிபதி

 

தமிழை வழக்கு மொழியாக நடைமுறைப்படுத்து வதில் உள்ள சிக்கல்களை நிவர்த்தி செய்ய சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அவர்கள் கூறிய கருத்துகள்:

1. சென்னை உயர் நீதிமன்றத்திலும் மற்றும் கீழமை நீதிமன்றங் களிலும் தமிழில் வெளிவந்துள்ள சட்ட நூல்கள், இதழ்கள் அடங்கிய கிளை நூலகம் உரு வாக்கிட வேண்டும்.

2. தமிழ் மென்பொருள் உயர் நீதிமன்றத்தில் அமைத்து அனைத்து கணிப்பொறியிலும் பொருத்துவதற்கு சிறப்பு நிதி ஒதுக்கிட வேண்டும்.

3. கணிப்பொறியை இயக்கத் தெரிந்த தமிழ் சுருக்கெழுத்தாளர்கள் நியமித்திட வேண்டும்.

4. தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும், ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும் மொழிபெயர்த்திட, மொழி பெயர்ப்புக் குழு ஏற்படுத்திட வேண்டும்.

5. தமிழில் மூல சட்ட நூல்கள், சட்ட விளக்க நூல்கள் அனைத்தும் கொண்டு வர சிறப்பு திட்டம் உருவாக்க வேண்டும்.

6. தமிழில் வெளிவருகின்ற சட்ட நூல்களுக்கு சிறப்பு மானியம் வழங்கிட வேண்டும்.

7. தமிழில் வெளிவரும் சட்ட இதழ்களுக்கும் சிறப்பு மானியம் வழங்கிட வேண்டும்.

8. மாநில ஆட்சி மொழி ஆணையத்தை விரைவில் உருவாக்கிட வேண்டும்.

9. உயர்நீதிமன்றத்தில் தமிழை நடைமுறைப் படுத்துவதற்காக மூத்த நீதிபதி தலைமையில் நீதிமன் றத்தில் ஒரு குழு ஏற்படுத்திட வேண்டும்.

10. சட்ட கலைச்சொற்கள் உருவாக்க தனிக்குழு நியமித்திட வேண்டும்.

11. தமிழில் வெளிவந்து கொண்டிருக்கின்ற சட்டக்கதிர், தீர்ப்புத் திரட்டு இந்த இரண்டு இதழ்களும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பொது நூலகங்கள், ஊராட்சிமன்ற படிப்பகங்கள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள், நீதிமன்றங்களின் நூலகங்கள் அனைத் திலும் இடம்பெற சிறப்பு உத்தரவினை வழங்கிட வேண்டும்.

12. அரசு விளம்பரங்களை சட்டக்கதிர் இதழில் வெளியிட சிறப்பு உத்தரவினை வழங்கிட வேண்டும். சட்டக் கதிருக்கென சிறப்பு மானியம் வழங்கிட வேண்டும்.

இதுபோன்ற பணிகளை செய்து முடித்தால்தான் தமிழ் நாட்டில் சென்னை உயர் நீதி மன்றத்திலும் அதன் கீழ் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் தமிழ் வழக்கு மொழியாக உயர்ந்து நிலைபெறும்.

==================

உயர்நீதிமன்ற வழக்குரைஞர் சாந்தகுமாரி

உயர்நீதிமன்றத்தின் வழக்கு மொழியாக தமிழ் ஆவதற்கு செய்ய வேண்டியவை:

“பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழி யில் பெயர்தல் வேண்டும்” என்ற எம் பாட்டன் பாரதியின் வாக்குக்கு இணங்க லத்தீன் வார்த்தைப் பிரயோகங்களில் உள்ள கொள்கை நெறிகளை தமிழில் மொழி பெயர்ப்போம்.

மத்திய - மாநிலச் சட்டங்கள் அனைத்தையும் அதிகாரப் பூர்வ மொழியாக்கத்தில் தமிழில் கொண்டு வருவோம்.

சட்டச் சொல் அகராதியை வளப்படுத்தும் வகையில் சட்ட நீதியான புதுப்புது சொல்லாக்கத்தை முன் வைப்போம்.

நீதிபதிகளது தீர்ப்புரைகளை ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்ய புதிய மொழிபெயர்ப்புத் துறையை உருவாக்கிடுவோம்.

சட்ட மொழி தமிழாக மாற உயர்நிலைக்குழு அமைப்போம்; அரசியலுக்கு அப்பாற்பட்டு உண்மை யிலேயே உயர் நீதி மன்றத்தில் தமிழை வழக்கு மொழியாக்க உயிர் கொடுக்கும் அன்பர்களைக் கொண்ட உயர்நிலைக் குழுவை அமைப்போம்.

சர்வதேச மாநாடுகளில், அய்க்கிய நாடுகள் சபையில் எந்தமொழியில் பேசினாலும் அடுத்த சில மணித் துளிகளில் ஆங்கிலத்தில் வருவது போல நீதிமன்றத் தில் நாம் தமிழில் வாதிடும் போது அவையனைத்தும் தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியில் உடனடி மொழிபெயர்ப்புக் கருவி மூலம் தமிழறியா நீதிபதிகள் காதிலே தேன் தமிழாகப் பாய ஆவன செய்வோம்.

அனைத்திற்கும் மேலாக அரசியல் விருப்பு வெறுப்புகளை மறந்து அனைவரும் ஒன்றிணைந்து உயர் நீதிமன்றத்தின் வழக்கு மொழியாக தமிழே எனும் தமிழ்நாடு சட்டமன்றத் தீர்மானத்தை வலியுறுத்தி அதற்கான குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெறுவோம்.

அதனடிப்படையிலேயே மாநில ஆளுநரின் அனுமதியோடு தமிழை உயர் நீதிமன்ற வழக்கு மொழியாக பிரகடனப் படுத்துவோம். ஆக்கப்பூர்வ மான இப்பணிகளுக்காக தமிழ் காக்க விரும்பும் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள், தமிழறிஞர்கள், சட்ட வல்லுநர்கள், ஆட்சியாளர்கள் கொண்ட கூட்டு நடவடிக்கைக் குழுவை அமைத்து ஆரோக்கியமாக செயல்படுவோம்.

இவையெல்லாம் நடந்து முடிவதற்கு சில காலம் ஆகத்தான் செய்யும். இங்கே காலம் கனியக்காத் திருத்தல் தவிர்க்க முடியாதது. அதுவரை கவிஞர் ஞானக் கூத்தன் சொன்னது போல “எனக்கும் தமிழ் தான் மூச்சு : ஆனால், அதைப் பிறர்மேல் விடமாட் டேன்” என்பதை நினைவில் கொள்வோம். நமது ஒன்றிணைந்த பணியால், ஓயாத உழைப்பால் மாற்று மொழி பேசுவோரும் உயர் நீதிமன்றத்தில் தமிழில் நிகழ்வுகளை நடத்த வழி சமைப்போம்.

உயர்நீதி மன்றத்தில் தமிழே வழக்கு மொழி யென்பது நாளைய வரலாறு என்பதறிந்து பாடுபடு வோம்.

 

 

 

 

 

ஊன்றிப் படித்து உண்மையை உணருங்கள்! - 7

உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழி

கூறப்படும் தடைகளும் அதற்கான விடைகளும்!

கூறப்படும் தடைகள்

“சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அங்கீகரிக்க வேண்டும் என டெல்லியில் நடந்த முதல்வர்கள், நீதிபதிகள் மாநாட் டில், தமிழக முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் வலி யுறுத்தி உள்ளார். இதில் எந்த அளவிற்கு நடைமுறை சாத்தியம் உள்ளது?

தொன்மையும் வளமும் நிறைந்த மொழி தமிழ் மொழி என்பதில் சந்தேகமில்லை; இதற்கு தடை யார் என தெரிந்து கொள்ள வேண்டும்

இந்திய அரசியல் சட்டத்தில் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றப் பரிபாலன மொழி என்ன என்பது பற்றி அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 348-ல் கொடுக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்புச் சட்டம் வருவதற்கு முன்னால், இந்திய அரசியலமைப்புச் சட்டம் 214 (5) மற்றும் 227இன் கீழ் இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான நிர்வாகம் மற்றும் நீதி பரிபாலனம் இருக்க வேண்டிய காரணத்தால், மாநிலங்கள் மற்றும் மத்திய அரசில் இயற்றப்படும் சட்டங்கள், ஆளுநர் மற்றும் அரசு உத்தரவு, அதைப் பரிசீலனை செய்து தீர்ப்பு அளிக்கும் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் என்று சட்டம் இருந்தது.

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலமும் சட்டத்தீர்ப்பை தன் மொழியில் எழுதினால், சட்ட பரிபாலனத்தில் மொழி வேற்றுமை காரணத்தால், பல மொழி சட்டத்தில் பல தீர்ப்புகள் முரணாக அமையும். இதைப் போக்க வேண்டுமானால் அனை வரும் ஏற்கும் ஒரே மொழியில்தான் சட்டம் மற்றும் தீர்ப்புகள் தேசிய மற்றும் மாநில அளவில் இருக்க வேண்டும். இன்றுள்ள இந்திய அரசியல் பின்னணி யில் “ஆங்கிலம்” ஒன்றே “ஓர் இணைப்பு மொழி’. ஹிந்தியோ, தமிழோ அல்லது மற்ற மொழிகளோ அல்ல.

அரசியலமைப்புச் சட்டம் 348ஆவது பிரிவில் கூட முதல் பிரிவு இதையே வலியுறுத்துகிறது. ஆனால், இதற்கு மாற்றாக அல்லது விதிவிலக்காக 348(2)ஆவது பிரிவில் ஒரு மாநிலத்தின் ஆளுநர், குடியரசுத் தலைவரின் ஒப்புதலின் பேரில் அந்த மாநிலத்தில் இயற்றப்படும் சட்டம் மற்றும் உயர் நீதிமன்ற நடவடிக்கை (வழக்காடு மொழி) அந்த மாநிலத்தின் அலுவல் மொழியாக இருக்கலாம் என்று வழிவகை செய்கிறது.

அதேநேரத்தில் உயர் நீதிமன்றத்தின் வழக்காடு மொழி, தமிழில் இருந்தாலும் தீர்ப்பு ஆங்கிலத்தில் தான் இருக்க முடியும், தமிழில் அல்ல. மேலும் அரசு சட்டங்கள் கூட தமிழில் இயற்றினாலும் அதனுடைய அதிகாரப்பூர்வ மொழியாக்கம் ஆங்கிலத்திலும் இருக்க வேண்டும். அவ்வாறு மொழிமாற்றம் செய் யப்பட்ட ஷரத்துகளே அதிகாரப்பூர்வ சட்டமாகும் என்று உள்ளது.

இதன் ஒட்டுமொத்த விளைவு என்னவென்றால் உயர்நீதி மன்றத்தில் தமிழில் வழக்காடினாலும் அதன் தீர்ப்பு தமிழில் இருக்காது. ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கும். அப்படியானால், தமிழில் வாதாடி, ஆங்கிலத்தில் தீர்ப்பா? ஒரு மொழி ஒழுங்காகத் தெரிந்தவர்களே குறைவு என்கிறபோது, தமிழில் பேசி ஆங்கிலத்தில் தீர்ப்பு எழுதும்போது வரும் இடைவெளி மாற்றம், புரிதல் இதற்கெல்லாம் யார் பொறுப்பு?

நான், தமிழில் என்ன பேசினேன் என்பது ஆங்கிலத் தீர்ப்பாக வரும்போது மொழிபெயர்க்கும் (ஆங்கிலத் தீர்ப்பு எழுதும்) நீதிபதி சரியாக மொழி இடைவெளி இல்லாமல் புரிந்துகொண்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம்?

இதுமட்டுமல்ல, உயர் நீதிமன்றங்கள் மாநில வரம்புக்குள் இருந்தாலும் உச்ச நீதிமன்றம் இந்தியா முழுவதற்கும் ஒன்றே. ஆனால் 21 மொழிகள் அலுவலக மொழி என்று அட்டவணை 8இல் உள்ள போது, 21 அட்டவணை மொழிகளும் உயர் நீதிமன் றத்தின் மொழியானால் அதை மொழிமாற்றம் செய்து ஒரே மொழியான ஆங்கிலத்தில் பரிபாலனம் செய்வது தேவையா? நேரம், பொருள், நிதி விரயம் இல்லையா?

அப்படியானால் அலகாபாத், ராஜஸ்தான் மாநில உயர் நீதிமன்றத்தில் ஹிந்தி வழக்காடு மொழியாக இருக்கிறதே என்ற வாதத்துக்கு, அங்கு கூட ஒரு நீதிபதி ஹிந்தியில் போடும் மனுக்கள் போன்ற வைக்கு ஆங்கில மொழியாக்கம் பெற நிர்ப்பந்திக் கலாம். மேலும் தீர்ப்புகள் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் என்று சொல்கிறது. ஏற்கெனவே நீதிமன்ற நடவடிக்கை தாமதம் ஆகும் இவ்வேளையில், மொழியாக்க நேரம், செலவு தேவைதானா? அது விரயம் இல்லையா? தமிழில் வாதாடினால் சட்டம் தெரியும் என்று அர்த்தம் அல்ல. மொழி வேறு, ஒரு பிரிவில் பாண்டித்யம் என்பது வேறு. சட்டம் தெரியா மல் தமிழ் தெரிந்தவர்கள் எவ்வளவு பேர்?

இந்தியா போல பல மொழி பேசும் மாநிலங்களின் கூட்டாக ஒரு தேசம் இருக்கையில் இணைப்பு மொழியாக ஆங்கிலத்தைத் தவிர வேறு எதுவும் நல்லதல்ல. அது இந்தியாவுக்கு மட்டுமல்ல, இதர நாடுகளின் பரிவர்த்தனைக்கும்! இன்று 80 நாடுகளில் புலம் பெயர்ந்துள்ள தமிழர்கள் ஆங்கில அறிவு இல்லாதிருந்தால் இன்று அவர்களுக்கு ஜீவாதாரமே இல்லை.

இந்தியராய் எந்த மாநிலத்திலும் தங்கி, உயிர் வாழ்ந்து, தொழில் செய்யும் உரிமை, அடிப்படை உரிமையாக இருக்கும்போது, ஒரு மாநிலத்தின் ஆட்சிமொழி ஓர் அளவுக்கு மேல் இந்த அடிப்படை உரிமையைப் பாதிக் காததாக இருக்க வேண்டும்.

தமிழ் வழக்காடு மொழியாவதற்கு முன், தேவை யாக உள் கட்டமைப்பு, எல்லா சட்டங்களின் தமிழாக் கம், தீர்ப்புகளின் தமிழாக்கம், தமிழ் சட்டமொழி, மொழியாக்கத்தில் வல்லுநர்களாக உள்ளோரின் தேர்வு இவை அனைத்தையும் செய்யாமல் வழக் காடு மொழியாக தமிழை அறிவிப்பது அரிசி இல்லா மல் வெறும் பாத்திரத்தில் சோறு வடிப்பதைப் போன்றது!

- ஷான் (மயிலாடுதுறை)

==================================

தடைகளுக்கான விடைகள்

- நீதியர தடைகளுக்கான விடைகள்

சர் ஏ.கே.ராஜன் -

 

தமிழ், உயர்நீதிமன்ற மொழியாக வருவதற்குத் தேவையான ஆக்கப்பூர்வமான வேலைகள் என்ன என்பதுதான். ஆக்கப்பூர்வமான யோசனைகள் என்ன என்பதைப் பற்றித்தான் சிந்தித்துப்பேச வேண்டும். அதிகம் படித்தவர்களுக்கு நாம் தவறு செய்து விடு வோமோ என்ற அச்ச உணர்வுதான் அதிகமாக இருக் கும். தவறு செய்துவிடக்கூடாது என்ற அந்த அச்ச உணர்வுதான் அதிகமாக இருக்கும். மெத்தப் படித்தவர் கள் அச்சம் அதிகம் கொண்டவர்கள்தான்; அதில் நிச்சய மாக சந்தேகமே இல்லை. எனவே அதிகம் படித்தவர்களி டம் கருத்துக் கேட்டால் அதிகமான பயத்தைத்தான் உண்டு பண்ணுவார்கள். எதிர்மறை விளக்கம் அதிகமாக இருக்கும்.

அந்த அச்சத்தை விட்டொழியுங்கள். நம்மால், தமி ழில் முடியாது என்று ஏன் நினைக்கிறீர்கள். தமிழில்தான் இப்போதும் வாதங்கள் நடைபெறுகின்றன. தமிழில்தான் தீர்ப்புகள் எழுதப்படுகின்றன. தமிழில்தான் சாட்சியங்கள் பதிவு செய்யப்படுகின்றன. தமிழில்தான் தட்டச்சு செய்து தருகிறார்கள். சுருக்கெழுத்தர்கள் எழுதிக் கொள்கிறார் கள். தமிழ் சுருக்கெழுத்தர்கள், தட்டச்சர்கள் இல்லை என்று கூறுவது ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல. நம்மு டைய தமிழ் மாநிலத்தில் ஆயிரக்கணக்கான கற்றறிந்த, தகுதி பெற்ற தட்டச்சர்கள் மற்றும் சுருக்கெழுத்தர்கள் உள்ளனர். அவர்களுக்கு வேலை கிடைப்பது இல்லை. நீங்கள் மாவட்ட நீதிமன்றங்களுக்குச் சென்று பார்த்தீர் களேயானால், தமிழில் மிக வேகமாகத் தட்டச்சு செய்ப வர்களை நீங்கள் பார்க்கலாம். பேசுகின்ற பொழுதே தட்டச்சு செய்து தருபவர்கள் என்னிடம் பணிபுரிந்திருக் கிறார்கள். வாய்மொழியாகச் சொல்லும்போதே தட்டச்சு செய்து முடித்தவர்கள் என்னிடம் பணியில் இருந்திருக் கிறார்கள். இப்பொழுதும் பலர் இருக்கிறார்கள். எனவே, நம்முடைய தமிழ் நாட்டில் தமிழ்த் தட்டச்சுத் திறமையில் எந்தவிதமான குறையுமில்லை. சுருக்கெழுத்தாளர்களும் தேவைக்கு அதிகமாகவே இருக்கின்றனர். அவர்களை நாம் பயன்படுத்திக்கொள்வதுதான் நாம் செய்ய வேண் டிய செயல். தடைகளைக் கடந்து நடைமுறைப்படுத்துவ தற்குத் தேவையான கருத்துக்களைச் சொல்லி வழி நடத்த வேண்டும்.

கலைச் சொற்கள் என்பது ஒரே நாளில் உருவாகி விடுவதல்ல. பல அறிஞர்கள் ஒன்றுகூடி அமர்ந்து சிந் தித்தாலுங்கூட, சில, பல, நாட்களில் சரியான சொற்களைத் தேர்ந்தெடுத்துவிட முடியாது. ஒரு சொல், சரியான  நிலையை அடைவதற்குப் பல நாட்கள், பல ஆண்டுகள் தேவை. 50 ஆண்டுகள் கழித்துத்தான் மிஸீபீவீணீஸீ சிஷீஸீstவீtutவீஷீஸீ என்பதற்கு “இந்திய அரசமைப்பு” என்ற சொல் கிடைத் திருக்கிறது.

மேலும், வழக்குத் தமிழ் வேறு, சட்டத் தமிழ் வேறு என்ற வார்த்தை என்னால் ஏற்றுக்கொள்ள இயல வில்லை. வழக்குத் தமிழ் தான் சட்டத் தமிழ். சட்டத் தமிழ்தான் வழக்குத் தமிழ். சில வார்த்தைகள் சட்டத்தில் வருமே தவிர வழக்குத் தமிழை விட்டு மாறிவிடாது.

நீதிமன்றங்களில் வாதிடுவதற்கு வாதத் திறமை வேண்டும், தமிழில் எங்களுக்கு வாதத்திறமை வராது. ஆங்கிலத்தில்தான் வரும் என்றும் சொன்னார்கள். நிச்சயமாக இது உண்மை அல்ல. ஒரு நீதிபதியை ஏமாற்றி வாதத் திறமையால் வென்றுவிடுவது எல்லாம் அந்தக் காலம். இப்பொழுது எந்தவொரு நீதிபதியையும் வாதத்தால் ஏமாற்றி வென்று விட முடியாது. ஏனென்றால், அவர்கள் சட்டத்தைப் பார்த்துத்தான் தீர்ப்பு எழுதுகிறார்கள்.

தமிழில் வாதிக்க முடியாது எனவே, தமிழில் வேண் டாம் என்று சொல்வது ஏற்கத்தக்கதல்ல என்பதற்காக இதைச் சொல்கிறேன். தற்பொழுது தமிழில் சட்டம் இல்லை என்றார்கள். அரசியல் சட்டம் இன்னும் தமிழில்; மொழி மாற்றம் செய்யப்படவில்லை என்றார்கள். பல சட்டங்கள் மாற்றப்படவில்லை என்றார்கள். அவை எல்லாம் உண்மை அல்ல. இந்திய அரசு அமைப்புச் சட்டம் பல ஆண்டுகளுக்கு முன்பே மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளி வந்துவிட்டது. அகில இந்திய அனைத்துச் சட்டங்களும் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வந்துவிட்டன. குறிப்பாக, தற்பொழுது தமிழ் நாடு சட்டசபையில் இயற்றப்படுகின்ற சட்டங்கள் அவ்வப்பொழுது தமிழில் மொழி பெயர்ப்பு செய்யப் படுகின்றன. எனவே, மொழி மாற்றம் இல்லை என்பது சரியான வாதம் அல்ல.

ஆட்சி மொழி குறித்தான 1963ஆம் ஆண்டு சட்ட திருத்தம் ஏற்கனவே நடைமுறைக்கு வந்துவிட்டது. இச் சட்டம், உயர் நீதிமன்ற வழக்கு மொழியை மாற்றிக் கொள்ள வழிவகை செய்துள்ள சட்டமாகும். உயர் நீதி மன்றங்களைப் பொருத்தமட்டில் அரசமைப்பன் 348வது பிரிவு நடைமுறையில் இல்லை. அப்பிரிவு உச்ச நீதிமன்றத்திற்கு மட்டுமே பொருந்தும். தற்போது, உச்ச நீதிமன்றத்தைப் பொறுத்தவரையில் ஆட்சி மொழி ஆங்கிலம்தான். உயர் நீதிமன்றத்தைப் பொறுத்தவரை, ஆங்கிலத்துடன் அந்தந்த வழக்கு மாநிலத்தின் ஆட்சி மொழியும் வழக்கு மொழி ஆகலாம். நாம் தமிழை மட்டும் வழக்கு மொழியாகப் பயன்படுத்த வேண்டும் என்று கேட்கவில்லை. ஆங்கிலத்துடன் தமிழையும் பயன்படுத்த வேண்டும் என்றுதான் கேட்கிறோம். அதே நேரத்தில் உயர்நீதிமன்ற நீதிபதிக்கு தீர்ப்புகளை தமி ழிலோ அல்லது ஆங்கிலத்திலோ எழுதுவதற்கு முழு உரிமை உண்டு. தமிழில்தான் தீர்ப்புகளை எழுத வேண் டும் என்று கட்டாயமில்லை. நீதிபதிகள் தமிழில் தீர்ப்பு கள் எழுத விரும்பினால் அவர்களுக்கு தக்க மொழி பெயர்ப்பாளர் அமர்த்தப்படும். தற்போது மொழி பெயர்க்க வழிவகைகள் மிகவும் அதிகம். மொழி பெயர்ப்பாளர்கள் உயர் நீதிமன்றத்திலே உள்ளனர். சுருக்கெழுத்தாளர்களும் உள்ளனர். தற்போது நடை முறையில் உள்ள விஞ்ஞான வளர்ச்சியில் நீதிபதி அவர்கள் பேசினாலே, தானே மொழி பெயர்த்து விடும் வசதி வாய்ப்புகளும் உள்ளன. இன்னும் வசதி வாய்ப் புகள் வளர்ச்சி அடைந்து இப்பணியை மிகச் சுலபமாக மாற்ற வாய்ப்புள்ளது. தற்போது தமிழில் தீர்ப்புகள் வழங் குவதற்கும் தமிழ் மொழியை நீதி மன்ற மொழியாகப் பயன்படுத்துவதற்கும் எந்தவித தடையும்; இல்லை. சட்டச் சிக்கலும் இல்லை.

 

================

- நீதிபதி தாவிது அன்னுசாமி -

எல்லா சுதந்திர நாடுகளிலும் அந்தந்த நாட்டின் மொழியே நீதிமன்றத்தில் பயன்படுத்தப்படுகிறது. நம் நாட்டிலும் அவ்வாறே அமைய வேண்டுமென்று தான் இந்திய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் எண்ணினர். எனினும் நாடு சுதந்திரமடைந்து 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் உயர்நீதிமன்றத்தில் ஆங்கிலமே வேரூன்றி நிற்கிறது. அது மக்களுக்கு சங்கடத்தையும் கவலையையும் அளித்து வருகின்றது.

வழக்குத் தொடர்பவர்கள் தம் சார்பாக அல்லது தமக்கு எதிராக என்ன எழுதப்பட்டுள்ளது; என்ன பேசப் படுகிறது என்பதை அறிந்து கொள்வது அவர்களின் இயற்கையான உரிமை. மேலும் ஒரு குடிமகனுக்கு மரண தண்டனையை உறுதி செய்யும் போதும் கூட அவனுக்குபுரியாத மொழியில் தீர்ப்பளிக்க வேண்டிய கட்டாயத்தில் உயர்நீதிமன்றம் உள்ளது. அதே நீதி மன்றம் குற்றவாளியின் தாய் மொழியிலேயே நீதிமன்ற நடவடிக்கைகள் இருக்கவேண்டும் என்பதை பலமுறை தெரிவித்திருக்கிறது. குற்றப்பத்திரிகை தமிழில் இருக்க வேண்டும் என்றும் ஆணை இட்டிருக்கிறது.

தாமதத்தின் காரணம்

சிலர் உயர்நீதிமன்ற நடவடிக்கைக்கு தமிழ் தகுதி அற்றது என்று கருதி வருகின்றனர். இதற்கு ஒரு ஆதா ரமும் இல்லை. மொழி உயிருள்ளது. நாம் எதற்கு அதை உபயோகப்படுத்துகிறோமோ அதற்கு ஒத்துவரக்கூடிய தன்மை உள்ளது.

மேலும் ஆங்கிலேயர் ஆட்சியின் முதற்பகுதியில் வட்டார நீதிமன்றங்களில் தமிழில்தான் தீர்ப்பு அளிக்கப் பட்டு வந்தது... (பேரெழுத்தாளர் வேதநாயகம் பிள்ளைத் தீர்ப்புகளும் இருக்கின்றன) நாடு சுதந்திரம் அடைந்த பிறகு அந்நீதிமன்றங்கள் நவீன முறையில் தங்களது தீர்ப்பை தமிழில் மக்கள் - புரிந்துக்கொள்ளும்படி வழங்கி விடுகின்றன. இப்போது ஆங்கிலத்தில் உள்ள உச்சநீதிமன்ற உயர்நீதிமன்றத் தீர்ப்புகள்கூட தமிழில் செம்மையாக மொழி பெயர்க்கப்பட்டு சட்டக் கதிர் இதழில் வெளிவருகின்றன. உயர் நீதிமன்றமும் அவ்வா றான ஒரு தீர்ப்புத் திரட்டை பல ஆண்டுகளாக வெளி யிட்டு வருகிறது.

தாமதத்திற்கு மற்றொரு காரணமும் கூறப்படுகிறது. தீர்ப்புத் தமிழில் அமைந்து விட்டால் அது மற்ற உயர் நீதிமன்றங்களுக்கு உதவாமல் போய்விடும் என்பது. அதேதொனியில் உச்ச நீதிமன்றத்திற்கு மேல்முறையீடு செய்யும்போதும் சங்கடம் ஏற்படும் என்று சொல்லப்படு கிறது. இது குறித்து - நம் மனதில் கொள்ள வேண்டியது என்னவென்றால் எல்லாத் தீர்ப்புகளும் அச்சிடப்படுவ தில்லை. எல்லாத் தீர்ப்புகள் மீதும் மேல்முறையீடு செய் யப்படுவதில்லை. மிகச் சிலமட்டும் இவ்விரண்டிற்கும் உட்படுகின்றன. அவைகளை முன்வைத்து எல்லாத் தீர்ப்புகளையும் ஆங்கிலத்தில் எழுதுவது சரியாகாது. தேவையான தீர்ப்புகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்ப் பதற்கு எளிதில் ஏற்பாடு செய்துவிடலாமே.

எதிர்ப்புக்கு மூலக்காரணம் என்னவென்றால் சிலர் ஆங்கில மொழியைக் கற்பதற்கு நிறைய பணமும் முயற்சியும் செலவிட்டிருக்கின்றனர். அந்த முதலீடு பறிபோய்விடுமோ என்ற அச்சம். இரண்டாவதாக ஒரு பழக்கத்தைத் கைவிடுவதென்றால் மனம் இடம் தருவ தில்லை. இந்த மனப்பான்மை வழக்குரைஞர்களுக்கு அவர்கள் பயிற்சியினால் அதிகமாகவே காணப்படும். இம்மாதிரிதான் இங்கிலாந்தில் 17ஆம் நூற்றாண்டுவரை ஆங்கிலம் நீதிமன்ற உபயோகத்திற்கு சரிவராது என்று கூறி பிரெஞ்சுமொழியைப் பயன்படுத்திவந்தனர். அதே சமயத்தில் பிரெஞ்சு நாட்டில் பிரெஞ்சுமொழி தகுதியற்ற தாகக் கருதப்பட்டு இலத்தீன் பயன்படுத்தப்பட்டு வந் தது. ஆங்கிலத்தை நிலை நாட்டுவதற்காக சிக்ஷீஷீனீஷ்மீறீறீ என்ற முதல் அமைச்சர் தீவிர ஏற்பாடு செய்து வெற்றி கண்டார்.

மொழிமாற்றத்தால் சங்கடங்கள் ஏற்படுவது இயல்பே. எனினும் அதை வழக்குரைஞர்களால் சமாளிக்கமுடியும். அதுவுமின்றி மக்கள் தேவை எனும் போது சிலரின் சங்கடம் பொருட்படுத்தத்தக்கதன்று. அவர்கள் மாற்றத் திற்கு ஆயத்தம் செய்துகொள்ளவேண்டியது தான். மாற்றம் கொண்டு வரும்போதும் அவர்களின் சங்கடம் குறை இருக்கும் அதை போக்க முடியும். மேலும் சங்கடம் எல் லோருக்கும் ஒரே அளவில் இருக்காது. இளம் வழக்கறி ஞர்களுக்குத் மொழி மாற்றம் நல்ல வாய்ப்பை அளிக்கும்.

எப்படி செயல்படுத்துவது?

நீதிமன்ற ஆணையினால் தமிழை உயர்நீதிமன்றத் திற்கு கொண்டு வரமுடியாது என்பதை முன்பே சுட்டிக் காட்டினோம். அதற்கான வழிவகைகள் இந்திய அரசு சட்டத்தில் 348 (2) ஆம் அங்கத்தில் தெளிவாக உள்ளது. முதற்படியாக தமிழ் மொழியைப் பயன்படுத்துவதற்கு ஆளுநர் உத்தரவைப் பெறலாம். அதற்கு தமிழக அர சாங்கத்தின் முயற்சி தேவை. முறையாக அரசாங்கத்தை அணுகினால் அது ஆவன செய்யுமென்று நம்பலாம்.

நாடாளுமன்ற ஒப்புதலும் தேவை. இதற்கு தமிழக அரசாங்கத்தையும் தமிழ் நாட்டு நாடாளுமன்ற உறுப் பினர்களையும் அணுகி ஏற்பாடு செய்ய வேண்டிக் கொள்ளலாம். இதற்குத் தகுந்த முயற்சி எடுத்தால் எல்லா கட்சியினரும் இதை ஆதரிப்பார்கள்.

அரசமைப்பு சட்டத்தை உருவாக்கியவர்கள் 15 ஆண்டுகளுக்குள்ளாகவே மாநில மொழிகள் உயர்நீதி மன்றங்களில் புழக்கத்தில் வந்துவிடலாமென்று எதிர் பார்த்தனர். அதற்கென தனிவழிமுறையை 349 ஆம் அங்கத்தில் குறிப்பிட்டனர். இப்போது 50 ஆண்டு களுக்குமேல் ஓடிவிட்டதால் உடனடி யாக மேற்கண்ட செயலில் இறங்கினால் இது நிறைவேறும்.

 

 

தமிழ் உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாகத் தடை ஏன்?

ஊன்றிப் படித்து உண்மையை உணருங்கள்!

“நீதிமன்றங்களில் தமிழ்” என்ற நூலின் கருத்துப்படி

உயர்நீதிமன்றங்களில் தாய்மொழி வேண்டும்!

தீக்கதிர் ஏடு வற்புறுத்தல்

 

ஆட்சியில் தமிழ்; நிர்வாகத்தில் தமிழ்; நீதித் துறையில் தமிழ் என்ற பேச்சு பேச்சாகத்தான் இருக்கிறது. உயர்நீதி மன்றத்தில் தமிழ் வழக்கு மொழியாக வருவதற்கான போராட்டம் கூட இன்னும் முடிந்தபாடில்லை. அதுவும் ஆங்கிலத்தை அகற்றிவிட்டு தமிழை அந்த இடத்தில் அமர வைப்பதற்கு அல்ல. மாப்பிள்ளைத் தோழன் போல துணையாக இருப்பதற்குத்தான் . வழக்கு தொடுப்ப தற்கான மனு அளிப்பது, வாதாடுவது தமிழில் இருந்தாலும் தீர்ப்பு ஆங்கிலத்தில் தான் இருக்கும்.இதற்கு மீண்டும் மீண்டும் சொல்லப்படும் காரணம் சட்டச் சொற்கள் ஆங்கிலத்தில்தான் வளமாக உள்ளன.

ஆங்கிலம் பொதுமொழியாக இருக்கிறது போன் றவை தான். சட்டம் பிறக்கும் போதே ஆங்கிலமும் பிறந்து விட்டதா? அல்லது ஆங்கிலத்தில் சொன் னால்தான் வாழ்வேன் என்று சட்டம் சொல்கிறதா? இரண்டுமே இல்லை. 300 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலத்தின் கதி என்ன? ஆங்கிலத்தின் பிறப் பிடமான இங்கிலாந்தில் 12, 13ஆம் நூற்றாண்டுகளில் லத்தீன்தான் சட்டமொழியாக இருந்திருக்கிறது. உயர்மட்டத்தில் பிரெஞ்சு வழக்கத்தில் இருந்ததால் நீதிமன்றங்களில் அதுவே வழக்காடு மொழியாக இருந்துள்ளது.

1731ஆம் ஆண்டுதான் சட்டம் இயற்றப்பட்டு லத்தீன் மொழியிலான சட்டங்கள் ஒழிக் கப்பட்டு ஆங்கிலம் சட்ட ஆட்சி மொழியாகக் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் சென்னை உயர் நீதி மன்றத்தின் உத்தரவுகள், ஆணைகள் மற்றும் இதர நட வடிக்கைகளில் தமிழ் மொழியை அறிமுகப்படுத் துவதற்கான தீர்மானம் 6.12.2006 அன்று தமிழக சட் டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. (ஏதோ ஒருபிரச்சனைக்காக பேரவையிலிருந்து வெளியேறி விட்டதால் இந்தத் தீர்மானம் நிறை வேறியபோது அஇஅதிமுக உறுப்பினர்கள் அவை யில் இல்லை என்பது தனி விஷயம்.) இந்தத் தீர் மானம் மத்திய அரசுக்கும் அனுப்பப்பட்டது.

2007 ஆம் ஆண்டில் நினைவூட்டல் கடிதம். 2008 ஆம் ஆண்டிலும் நினைவூட்டல். இதன் பிறகு நான்கு ஆண்டுகள் உருண்டோடி விட்டன. தமிழ் உயர்நீதிமன்றப் படியேற முடியாமல் தடுக்கப்பட் டிருக்கிறது. ஏன் இந்தத் தடையென்றால் காரணங் கள் அடுக்கப்படுகின்றன.

1. மொழிமாற்றத்தில் அனுபவ மிக்கவர்கள், தமிழில் இருந்து ஆங்கிலத்திலும்/ஆங்கிலத்திலி ருந்து தமிழிலும் செய்யக் கூடிய திறன்மிக்கவர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

2. தீர்ப்புகளைத் தமிழில் வெளியிட வேண்டு மானால் அதற்கு தகுதி வாய்ந்த ஆங்கிலத்திலும்/தமிழிலும் பரிச்சயம் பெற்ற சுருக்கெழுத்தாளர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

3. உயர்நீதிமன்றம் தற்போது அனைத்து நீதி மன்றங்களையும் கணினிமயமாக்க விழைந்துள்ளது.

இந்த சூழ்நிலையில் ஆங்கிலத்திற்கிணையான தமிழ் மொழியிலான கணினி உபகரணங்கள் இன் னும் பெறப்படவில்லை.

4. பெரும்பாலான சட்டங்கள் ஆங்கிலத்தில் அமைந்துள்ளன. ஆகவே அந்த சட்டங்கள் யாவும் தமிழாக்கம் செய்யப்பட வேண்டும்.

5. அரசு, நீதிமன்றங்களில் போதுமான தமிழாக்கம் செய்யப் பாடநூல்கள், புத்தகங்கள், சட்ட நுணுக்கங் கள் கொண்ட பத்திரிகைகள் நிறைந்த நூலகங்கள் நிறுவப்பட வேண்டும்.

6.அம்மாதிரியான நூலகங்களை நிறுவுவதற்கான இடவசதி செய்து தரப்பட வேண்டும். இது ஒரு புறம் இருக்க உயர் நீதிமன்றத்தலைமை நீதிபதி தடை களாக சுட்டிக்காட்டிய வற்றை நீக்குவதற்கு முந்தைய அரசோ இப்போதைய அரசோ என்ன நடவடிக்கை எடுத்தது? புரியாப் புதிராகவே தொடர்கிறது.

உயர்நீதிமன்றத்தில் தமிழில் வாதாடுவதற்கான முயற்சி தொடர் கதையாகவே இருப்பதற்கான பல தகவல்களைத் திரட்டி சட்ட வல்லுநர்கள், நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள், தமிழ்த்துறை தலைவர்கள் எனப் பலதுறையினரின் கருத்துக்களைத் தொகுத் துத் தந்துள்ள நூல் நீதிமன்றங்களில் தமிழ்.

ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், பீகார், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வழக்கு மொழியாக இந்தி இருக்கிறது. ஏனெனில் அதுவே இந்தியாவின் ஆட்சி மொழி என்பதால். மேலும் 1963 ஆம் ஆண் டின் ஆட்சிமொழிகள் சட்டம் 7வது பிரிவின் படி ஆளுநர் பரிந்துரைத்து மத்திய அரசு ஏற்றால் மாநிலத்தின் நிர்வாக மொழியே நீதிமன்ற வழக்காடு மொழியாகவும் இருக்கமுடியும். ஆனால் நடை முறை தான் அப்படி இல்லை.

உயர்நீதிமன்றங்களில் தீர்ப்புகள் ஆங்கிலத்தில் தான் இருக்க வேண்டும் என 1965 ஆம் ஆண்டு நீதிபதிகள் மாநாட்டில் நிறை வேற்றப்பட்ட தீர்மானம் சாக்காக சொல்லப்படுகிறது. இதுபோன்ற பல விவ ரங்களை சிந்தனைக்குவைக்கின்ற இந்த நூலினை சட்டக்கதிர் இதழின் ஆசிரியர் வி.ஆர்.எஸ். சம்பத் தொகுத்துத் தந்துள்ளார்.

1956 ஆம் ஆண்டு ஆட்சி மொழியாகத் தமிழ் அரியணையேறினாலும் 1976ஆம் ஆண்டு தான் கீழமை நீதிமன்றங்களில் கூட தமிழ் ஒலித்தது. மறைந்த வழக்கறிஞர் வானமாமலை தமிழிலே வாதம் செய்ய முடியும் என்பதைக் காட்டுவதற் காகவே வாதிட்டார். தமிழில் வாதிட முடியாது; சட்டச் சொற்கள் இல்லை; புரியாது; என்ப தெல்லாம் வெற்றுவாதம்; எந்த மொழியும் நாம் எதற்குப் பயன் படுத்துகிறோமோ அதற்கு ஒத்து வரும் என்ற மொழி யியலாளர்களின் கருத்துக்கு முரணானது. தமிழ்மீது அக்கறையும் ஈடுபாடும் கொண்டவர்களும் தமிழ் நீதிமன்ற வழக்காடு மொழியாக வருவதில் உள்ள இடர்பாடுகளை அறிந்து அவற்றைக் களைய விரும் புவோரும் அரசுகளுக்குக் கோரிக்கைகளை முன் வைத்துக் குரல் கொடுக்க எண்ணுவோரும் அவசி யம் வாங்கிப் படித்து பாதுகாக்க வேண்டிய நூல்.

 

==================

“சட்டக்கதிர்" இதழ் வலியுறுத்தல்

 

குடியரசுத் தலைவர் அறிவுரைப்படி

உயர்நீதிமன்றங்களில் மாநில மொழி!

 

அண்மையில் கேரள உயர்நீதிமன்றத்தின் 75ஆம் ஆண்டு நிறைவு பவள விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரை நிகழ்த்திய மேதகு இந்தியக் குடியரசுத் தலைவர் இராம்நாத் கோவிந்த் அவர்கள் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். "இனி வருங்காலங்களில் இந்தியாவில் இருக் கும் ஒவ்வோர் உயர்நீதிமன்றமும் அது ஆங் கிலத்தில் வழங்குகின்ற தீர்ப்புகளை அந்தந்த மாநில மொழிகளில் மொழிபெயர்த்து வெளி யிட வேண்டும்" என்பது அவர் அந்த விழா வில் அறிவுறுத்திய செய்தியாகும்.

இந்த அறிவிப்பு ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்கது என்று கூறலாம். ஏனெனில் மக்களாட்சி நடைபெறும் நாட்டில் சட்டமன்றம், நிருவாகம், நீதித்துறை ஆகிய மூன்றும் அந்தந்த மாநில மக்கள் மொழியில் நடைபெற வேண்டும். இந்த மூன்று துறைகளின் நடவடிக்கைகளும் மக்கள் மொழியில் இருந்தால் மட்டுமே மக்களாட்சித் தத்துவத்தின் அடிப்படைக் கொள்கையை மக்களுக்கு உறுதி செய்வதாக அமையும். அந்த வகையில் மேதகு இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்களின் அறிவுறுத்தல் மக்களாட்சித் தத்துவத்திற்கு வலு சேர்ப்பதாக அமைகிறது. இதனால் பல்வேறு மொழிகளைக் கொண்ட இந்திய மக்கள் ஒவ்வொருவரும் தங்கள் தாய்மொழியில் உயர்நீதிமன்றத் தீர்ப்பு களைப் பெறுகிற வாய்ப்பு ஏற்படும்.

மேதகு இந்தியக் குடியரசுத் தலைவர் இந்தக் கருத்தை மேலும் விளக்குகின்ற அடிப் படையில் "கேரள உயர்நீதிமன்றத் தீர்ப்புகள் மலையாளத்திலும் கொல்கத்தா உயர்நீதிமன் றத் தீர்ப்புகள் வங்காள மொழியிலும் மொழி பெயர்க்கப்பட்டு உடனுக்குடன் வழங்கப்படு தல் வேண்டும்" என்றும் எடுத்துக்காட்டுகளு டன் சுட்டிக் காட்டியுள்ளார்.

இதன் அடிப்படையில் தமிழ் நாடு மாநிலத் தின் உயர்நீதி மன்றமான சென்னை உயர்நீதி மன்றத் தீர்ப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்து வழங்குவதற்குச் சென்னை உயர்நீதிமன்றம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண் டும். இதன் தொடர்பாக சென்னை உயர்நீதி மன்றம் தற்போது ஆங்கிலத்தில் வெளியிட்டு வருகின்ற அனைத்துத் தீர்ப்புகளையும் தமி ழில் மொழிபெயர்க்கும் பணியைச் செய்வதற் குத் தகுதி வாய்ந்த சட்ட மொழி பெயர்ப்பா ளர்களைக் கொண்டு தனிப்பிரிவை உருவாக்க வேண்டும்.

தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புகளில் ஒரு சிலவற்றை மட்டுமே தமிழில் மொழிபெயர்த்துத் தீர்ப்புத்திரட்டு" என்னும் பெயரில் இதழ் ஒன்று வெளியிடப்பட்டு வருகின்றது. இந்த இதழ் செய்துவரும் சிறிய அளவிலான பணியின் விரிவாகவே தற்போது முன்வந்து செய்ய வேண்டிய தீர்ப்புகளின் மொழிபெயர்ப்புப் பணிகளும் அமையும்.

அதே போல சட்டக்கதிர்' மாத இதழில் உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற தீர்ப்புக்கள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு வாசகர்க ளுக்கு வழங்கப்படுகிறது.

இந்த நேரத்தில் மாநில உயர்நீதிமன்றத்தின் ஆட்சிமொழி குறித்து இந்திய அரசமைப்புத் தெரிவிக்கும் கருத்துக்களைப் பற்றிக் காண் பதும் பொருத்தமாகிறது. இந்திய அரசமைப் பின் 348 ஆம் உறுப்பில் இது தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அது ஒரு மாநில உயர்நீதிமன்றத்தின் ஆட்சிமொழி பொதுவாக ஆங்கிலம் என்றே குறிப்பிடுகிறது.

உயர்நீதிமன்றம் ஒன்றின் பயன்பாட்டில் ஆளப்படும் மொழியை அரசமைப்பு இரு வகையாகப் பிரித்துக் காண்கிறது. அவை

1. உயர்நீதிமன்ற நடவடிக்கைகளுக்குப் பயன்படும் மொழி. 2. உயர் நீதிமன்றத் தீர்ப் பினை எழுதுவதற்குப் பயன்படும் மொழி என் பன. இந்திய அரசமைப்பில் நாடாளுமன்றம் சட்டத்தினால் பிறவாறு வழிவகை செய்யப் படும் வரையிலும் உயர்நீதிமன்றத்தின் அனைத்து நடவடிக்கைகளும் ஆங்கில மொழியில்தான் இருத்தல் வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது, எனினும் இதற்கு விலக்களிப்பும் வழங்கப்பட்டுள்ளது.

ஒரு மாநில ஆளுநர், குடியரசுத் தலைவ ரின் முன் இசைவுடன் அந்த மாநில உயர்நீதி மன்ற நடவடிக்கைகளில் இந்தியை அல்லது அந்த மாநிலத்தின் அரசு அலுவல்களில் பயன் படுத்தப்படும் பிறமொழி எதனையும் பயன் படுத்துவதற்கு அரசமைப்பில் அதிகாரமளிக் கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வகைமுறையைப் பயன்படுத்தி ஒவ்வொரு மாநிலமும் அந்த மாநில மொழி ஒன்றை உயர் நீதிமன்ற நடவடிக்கைக்குப் பயன்படுத்திக் கொள்ள நடவடிக்கை எடுக்கலாம்.

இந்த வழிமுறையைப் பயன்படுத்தி மேற்கு வங்கம் தங்கள் கொல்கத்தா உயர்நீதி மன்றத்தில் வங்காள மொழியைப் பயன்படுத் திக் கொள்ள குடியரசுத் தலைவரின் இசை வைப் பெறுவதற்காகக் காத்திருக்கிறது.

தமிழ்நாட்டில் சென்னை உயர்நீதிமன்ற நடவடிக்கைகளில் தமிழைப் பயன்படுத்துவ தற்கு மாநில ஆளுநரின் வழி குடியரசு தலை வரின் இசைவினைப் பெறுவதற்குத் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாடு சட்ட மன்றத்தில் 2006 ஆம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற அனைத்து நீதிபதிகள் கலந்து கொண்ட கூட் டத்தில் தமிழைக் கூடுதல் மொழியாகப் பயன் படுத்த வேண்டும் எனத் தீர்மானம் நிறை வேற்றி உச்சநீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டது. மத்தியில் சட்ட அமைச்சகம் ஆதரவு தெரி வித்தது. ஆனால் தமிழைக் கூடுதல் வழக்கு மொழியாகப் பயன்படுத்த உரிய கட்டுமான வசதி இல்லாத காரணத்தால் இன்று வரையில் உச்ச நீதிமன்றம் அனுமதி தரவில்லை. இதனால் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் இதுவரையிலும் பெறப்படவில்லை. எனவே சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்காடு மொழியாகத் தமிழைப் பயன்படுத்தும் வாய்ப் புக் கிட்டாமலேயே உள்ளது. உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ள கட்டுமான வசதிகள் செய்யப் பட்டு தமிழைப் பயன்படுத்த ஏற்பாடு செய் தால் இதற்கான அனுமதி கிடைத்துவிடும்.

எனவே, மேதகு குடியரசுத் தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்படி உயர்நீதி மன்றத் தீர்ப்புகள் அந்தந்த மாநில மொழிகளில் மொழிபெயர்த்து வழங்குவதை உயர்நீதிமன் றங்கள் கண்டிப்பாக மேற்கொள்ள உச்ச நீதி மன்றம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதைப் போலவே எந்தெந்த மாநிலங்களில் இருந்து அவர்களது உயர்நீதிமன்றங்களில் அந்தந்த மாநில மொழிகளை வழக்காடு மொழிகளாகப் பயன்படுத்துவதற்கு இசைவு கேட்டு தீர்மானங்கள் அனுப்பட்டுள்ளனவோ அவை அனைத்திற்கும் குடியரசுத் தலைவரின் இசைவினை வழங்க உச்சநீதிமன்றம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதன் மூலம் ஒவ்வொரு மாநில உயர்நீதி மன்றத்தின் நடவடிக்கைகளும் அந்த மாநில மக்கள் மொழியில் அமைந்து மக்களாட்சியின் மாண்பு சிறப்பாக வெளிப்படும். இதுவே பன் மொழி பேசும் இந்திய மக்களின் எதிர்பார்ப் பாகும் - உரிமையும் ஆகும்.

==============

சென்னை உயர்நீதிமன்றத்திற்குத்

தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என்று பெயர் சூட்டுக

 

இந்திய அரசாங்கத்தின் சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் மதராஸ், பம்பாய், கல்கத்தா ஆகிய மூன்று உயர்நீதிமன்றங்களின் பெயர் களை மாற்றுவதற்கான முயற்சி இன்னும் செயல் வடிவம் பெறாமலயே உள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் பெயர் ‘மெட்ராஸ் அய்க்கோர்ட்’ என்பதாக உள்ளது. அதை நாம் தமிழில் சென்னை உச்சநீதிமன்றம் என்று அழைத்து வருகிறோம். ஆனால் சட்டப்படி அது செல்லக் கூடியது அல்ல; எனினும் இதுவே வழக்கத்தில் பல்லாண்டு களாக நிலை பெற்று விட்டது.

சென்னை மாநகரத்தை ஆங்கிலத்தில் மெட்ராஸ் என்றும் தமிழில் சென்னை என்றும் இரு பெயர்களால் அழைக்கப்பட்டாலும் சென்னைக்கு அதிகாரப்பூர்வமான பெயர் மெட்ராஸ் தான்.இந்தப் பெயர்க் குழப்பத்தில் இருந்து மீளவும் வடமொழிக் கலப்பில்லாமல் எழுதவும் நீண்ட நாள் வழக்கத்தில் இருந்து வரும் வரலாற்றுப் பெயரான “சென்னை” என்ற பெயரையே தமிழிலும் ஆங்கிலத்திலும் அழைக்க 1996ஆம் ஆண்டு ஜூலை 17ஆம் தேதி அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் அன் றைய முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் ஓர் தீர்மானத்தை முன்மொழிய அதனை தமிழ்நாடு சட்டமன்றமும் நிறைவேற் றியதும் இந்தப் பெயர் மாற்றத்தை மத்திய அரசும் பல்வேறு நிறுவனங்களும் விமானப் போக்குவரத்தும் ஏற்றுக் கொண்டு பொது மக்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு சென்னை என்றே கடந்த 20 ஆண்டு காலமாக அழைத்து வரப்படுகிறது.

ஆனால், சென்னை உயர்நீதிமன்றம் மட் டும் இன்றளவிலும் ‘மெட்ராஸ் உயர்நீதிமன்றம்’ என்றே அழைக்கப்பட்டு வருகிறது. தென்னிந் தியா முழுவதும் அடங்கிய நிலப்பரப்பை ‘மெட்ராஸ் பிரசிடென்சி’ என்ற மாநிலம் முழு வதற்கும் மெட்ராஸ் உயர்நீதிமன்றம் உருவாக் கப்பட்டது. இன்றைய மெட்ராஸ் பிரசிடென்சி என்னும் பகுதி தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, ஆந்திரப் பிரதேசம் தெலுங்கானா, புதுச்சேரி எனப் பல மாநிலங்களாக பிரிந்து விட்டன. அந்தந்த மாநிலத்திற்கு என்று தனித்தனி உயர் நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டு விட்டன.

தற்போது மெட்ராஸ் உயர்நீதிமன்றம் என் பது தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி மாநிலங் களுக்கான உயர்நீதிமன்றமாக மட்டும் விளங்கி வருகிறது. ‘மெட்ராஸ் பிரசிடென்சி’ என்னும் மாநிலத்தின் பெயர் 1947இல் மெட்ராஸ் மாநிலம் என்றும் பல மாநிலங்கள் பிரிந்த பின் பும் மெட்ராஸ் மாநிலம் என்றே அழைக்கப் பட்டு வந்தது.

1968இல் அன்றைய முதலமைச்சர் பேரறி ஞர் அண்ணா அவர்களால் மெட்ராஸ் மாநி லம் என்பது, ‘தமிழ்நாடு மாநிலம்’ என்று பெயர் மாற்றம் கொண்டு வர தமிழ்நாடு மாநில சட்டமன்றத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டு அது மத்திய அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அன்று முதல் தமிழ்நாடு என்றும் தமிழ்நாடு சட்டமன்றம் என்றும் அழைக்கப்படுகிறது. எனவே, மெட்ராஸ் மாநிலத்திற்குத் தமிழ்நாடு என்றும், மெட்ராஸ் நகரத்திற்குச் சென்னை நகரம் என்றும் சட்டப் பூர்வமாகப் பெயர் மாற்றம் செய்யப்பட்ட பிறகு மெட்ராஸ் உயர்நீதிமன்றத்திற்கு மட்டும் பெயர் மாற்றம் செய்யப்படாமல் இருப்பது எந்த வகையிலும் பொருத்தமில்லாத செயலாகும்.

இது குறித்துத் தமிழ் மக்களும் வழக்கறிஞர் சமுதாயமும், அரசியல் கட்சிகளும் தமிழ்நாடு அரசும், மெட்ராஸ் உயர்நீதிமன்றம் என்ப தைத் ‘தமிழ்நாடு உயர்நீதிமன்றம்’ என்று மாற் றிடக் குரல் கொடுத்து வந்தனர்.

இதன் விளைவாக மெட்ராஸ் உயர்நீதிமன் றம் என்று அழைக்கப்படுவதற்குப் பதிலாக சென்னை உயர்நீதிமன்றம் என மாற்ற மத்திய அரசு சட்டஅமைச்சகமும் முன் முயற்சி மேற்கொள்ள உள்ளது. ஆனால் இந்தியா முழுவதும் அந்தந்த மாநிலத்தின் பெயரையே உயர்நீதிமன்றத்தின் பெயராக வைக்கப்பட்டு உள்ளது. மெட்ராஸ் உயர்நீதிமன்றம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான உயர்நீதி மன்றம். எனவே தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என்றே அழைக்கப்படுவதுதான் பொருத்தம் உடைய தாக இருக்கும்.

இதற்கான முயற்சியினைத் தமிழ் நாட்டி லுள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர் களும் உரிய வகையில் முயற்சி மேற்கொண்டு சென்னை உயர்நீதிமன்றம் என்பதை தமிழ் நாடு உயர்நீதிமன்றம் என மாற்றம் செய்திடக் குரல் கொடுக்க வேண்டும். இதனையே தமி ழக மக்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.

 

Banner
Banner