எழுத்துரு அளவு Larger Font Smaller Font

யுத்த காண்டம்

ஆறாம் அத்தியாயம்

(சருக்கங்கள் 25 முதல் 30 முடிய)

இங்ஙனம் சுகசாரணர்களென்ற அமைச்சர்கள், சீதையை இராமனிடம் சேர்க்கும்படிக் கூற, இராவ ணன் அவர்களைக் கடிந்து பேசி, அவர்களோடு பல பனை மரங்களின் உயரத்தோடிருந்த மாடியில் ஏறி, அவர்களுள் சாரணனைப் பார்த்து, வானரத் தலைவர்களைத் தனக்குக் காட்டும்படி கட்டளையிட்டான். சாரணன் அதோ நீலன், அங்கதன், நளன், குமுதன், சாம்பன் முதலிய வானரத் தலைவர்களைப் பாருங்கள். அவர்கள் தங்கள் வாலைச் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். அதோ நிற்பவன் சந்நாதன்; அவனை ஒரு கந்தர்வப் பெண்ணிடத்தில் அக்கினி பகவான் பெற்றான். அதோ நிற்கும் பிரமாதி என்பவன், ‘யானைகளுக்கும் குரங்குகளுக்கும் ஏற்பட்ட பகையை மனத்தில் வைத்துக்கொண்டு, கங்கைக் கரையிலுள்ள யானைகளை அடித்துத் துரத்துகிறான் என்று விவரமாகக் கூறினான். சுகன் இராவணனை நோக்கி, “வலிய இவர்கள் காமரூ பிகளாய்த் தேவர்களுக்கும் கந்தர்வர்களுக்கும் பிறந்தவர்கள். அதோ அனுமான் நிற்கிறான். அவன் கேசரியின் மூத்த மகன் காற்றின் மகன். அவன் சிறு பிள்ளையாயிருக்கும்போது, சூரியனைப் பழமென மயங்கி அவன் மேல் பாய்ந்தான். ஆனால், அவனு டைய வெப்பத்தால் களைத்து உதய கிரியில் விழுந் தான். அதனால் அவனுடைய தவடை ஒடிந்து அனுமான் எனப்பெயர் பெற்றான். அவனுடைய தோளில் இருப்பவனே இராமன். இராமன் அறத்தின் எல்லையைத் தாண்டாதவன். அதோ நிற்பவன் இலக்குவனும், வீடணனும், வீடணனை இலங்காதி பதியாய் இராமன் முடி சூட்டி இருக்கிறான். அவன் சுக்கிரீவன். அவன் கழுத்தில் விளங்கும் மாலை யையும், தாரையையும், அரசாட்சியையும் இராமன் வாலியைக் கொன்று அவனுக்குக் கொடுத்தான். நாம் இவர்களை வெல்வதற்குத் தகுந்த ஏற் பாடுகளைச் செய்ய வேண்டும் என்று கூறினான்.

அதனால் இராவணன் கொஞ்சம் மனம் கலங் கினான். இருந்தாலும் அவன், “நீங்கள் பகைவரை என் முன் புகழ்ந்தீர்கள். போர் தொடங்கும்போது, இது செய்வது தகாது என உணராத நீங்கள்,

அமைச்சராவதற்குத் தகாதவர்கள். ஆதலின் நீங்கள் செய்த உதவியை நினைத்து, உங்களைக் கொல்லாமல் வேலையிலிருந்துநீக்கியிருக்கிறேன்” என்று கூறினான். அவர்கள் உடனே அவனைப் பணிந்து சென்றார்கள். பின் இராவணன் பல ஒற் றரை வரவழைத்து, எல்லா விவரங்களும் தெரிந்து வருமாறு அனுப்பினான். அவர்கள் தமது தலை வனாகிய சார்த்துலனை முன்னிட்டுச் சென்றார்கள். அவர்களை வீடணன் கண்டுபிடித்து இராமனிடம் விட்டான். வானரரால் துன்புறுத்தப்பட்ட அவர் களை இராமன் விடுதலை செய்தான். அவர்கள் இராவணனிடம் வந்து நிகழ்ந்ததைக் கூறினர். இராவணன் வானரரைப்பற்றிய விவரம் கேட்டான். சார்த்தூலன் அவனை நோக்கி, “சுக்கிரீவன் ரிட்சரச் சின் மகன். நான்முகன் கொட்டாவி விடும்பொழுது, அவனுடைய முகத்திலிருந்து சாம்பன் பிறந்தான். அவனைக் கத்கதன் உயிர்த்தான், கேசரி தேவ குருவாகிய பிரகஸ்பதிக்குப் பிறந்தான். கேசரி மகன் அனுமான் சுடேணன் தருமதேவதையின் மகன், அங்கதன் இந்திரனுக்குப் பேரன், மைந்தனும் துவிதனும் அசுவினி தேவர்களுடைய பிள்ளைகள். கசன், கவாக்கன், சுயவன், சரமன், கந்தமாதனன் என்பவர் எமனுக்குப்பிறந்தவர்கள். தேவர்களுக்குப் பிறந்த வானரர் பத்துக்கோடி. சுவேதனும் சோதி முகனும் சூரியனுக்குப் பிறந்தவர்கள். எமகூடன் வருணனுக்கும், நவன் விகருமனுக்கும் பிறந்த வர்கள்” என்று கூறினான். அதனால் இராவணன் சற்றுப் பரபரப்படைந்து, அருகிருந்த அமைச்சரை நோக்கிப் பிறமதி எல்லாரையும் வரவழைத்து அவர்களோடு நன்றாக ஆராய்ந்து மேல் நடக்க வேண்டிய காரியங்களுக்கு அவர்களுக்கு ஆளைத் தந்தனுப்பித் தன் அரண்மனைக்குள் சென்றான். இவ்வரலாற்றை ஆராய்வோம்.

பிரமாதி என்ற வாணரன் யானைகளுக்கும் குரங்குகளுக்கும் உள்ள பகைமையால், யானை களை அடித்துத் துரத்தி வந்தானாம் இதைப்பற்றிச் சீனிவாசய்யங்கார் பக்கம் 11,12இல் முன்பு “சம்பசாத னன் என்ற அசுரன் யானையைப் போல் உருவம் தரித்துரிஷிகளையும் முனிகளையும் அதிகமாய் உபத்திரவித்தான். அவர்கள் கேசரி என்ற வானர வீரனைத் தங்களுக்கு ஒத்தாசை செய்யும்படி வேண்டினார்கள். அவனும் அப்படியே சம்பசாத னுடன் போர் செய்து அவனைக் கொன்றான். அது முதல் யானைகளுக்கும் குரங்குகளுக்கும் தீராப் பகை உண்டாயிற்று” என்று எழுதுகிறார். குரங்கு களுக்கும் யானைகளுக்கும் பகையுண்டாவதற்கு இதுவா காரணம்? மொட்டைத் தலைக்கும் முழங் காலுக்கும் முடிச்சுப் போட்ட கதை போலன்றோ இது உளது? எவனோ அசுரன் யானை போல வந்தானாம் அவனைக் கேசரி கொன்றானாம்! இதற்காக யானைகளுக்கும் குரங்குகளுக்கும் பகை. அதிலும் தீராப்பகை விளைந்ததென்றால் என்னென்பது அனுமான் பிறந்தவுடன், சூரியன் மேலே பாய்ந்து வெப்பத்தால் களைத்து உதயகிரி யில் விழ, அனுமானுடைய அலகு உடைந்ததாம். இதைப்பற்றிச் சீனிவாசய்யங்கார் பக்கம் 114 இல், “இந்திரனுடைய வச்சிராயுதத்தால் அடிபட்டு அனுமான் விழுந்தானென்று உத்தர காண்டத்தில் சொல்லப்படுகிறது” என எழுதுகிறார். இதுவும் வால்மீகி ராமாயணத்தைப் பலர் பல காலங்களில் தம் மனம் போல மாற்றினார்களென்பதற்குத் தகுந்த சான்றாகும். இதைப்பற்றிப் பின்னர் விவரிப்போம்.

இராமன் அனுமானுடைய தோளிலேயே இருந்தனனாம் அதாவது ஒருவன் தனக்குக் கொஞ்சம் பணிந்தால், அவனை விடாது ஏறி மிதித்துத் தலைதூக்க விடாத கொடிய தன்மையை உடையவன் என்பதையே இது விளக்குகிறது. அவன் சுக்கிரீவனுக்கு வாலியின் மாலையையும், மனைவியையும், ஆட்சியையும் தந்தவனாம்! அவனை அறத்தின் எல்லையைத் தாண்டாதவன் என்று வால்மீகி கூறுகிறார். ஒருவனுடைய மனை வியை அதிலும் அண்ணனுடைய மனைவியைத் தம்பிக்குப்பிடுங்கிக் கொடுப்பதுதான் அறத்தின் அறிகுறி போலும் இராமன் தன்னுடைய மனைவி யைத் தன் தம்பியார் பிடுங்கி வைப்பாட்டியாக வைத்துக் கொள்வதற்கு யாதொரு தடையும் சொல்லாமல் இணங்குவானா? இதனால் தாரை யைச் சுக்கிரீவனுக்குக் கொடுத்தது இராமனுக்குத் தகுந்த பெருமையே இந்த இடத்தில் சீனிவாசய் யங்கார் பக்கம் 15இல் “வாலியைக் கபடமாய்க் கொன்றது தர்ம விரோதமல்ல. தன்னை ஆச்சயித் தவனுக்குச் செய்த பிரதிக்ஞையை நிறை வேற்ற வேண்டியது அவசியம், அதற்கு வேறு வழியில்லை என்றும், பக்கம் 16 இல் “இந்த மாலையை அணிந்தவனைச் சத்துருக்கள் ஜெயிக்க முடியாது. ஆகையால், இராமன் வாலியை மறைந்து கொல் லும்படி நேர்ந்தது என்றும் எழுதுகிறார். இது இவர் கிட்கிந்தா காண்டத்தில் குறித்துள்ள நியாயமான குறிப்புகளுக்கு முற்றிலும் முரண்படுகின்றதல் லவா? இவ்வறிஞருடைய செயலே இவ்வாறு மாறுபடுமோ? இது பின் இவர் தம் நண்பர்களாகிய இனத்தவரால் தாக்கப்பட்டு இப்படி எழுதியிருப் பாரோ என அய்யுற இடமாகிறது! ஏனெனில், இத னால் நமது அய்யங்கார் தமது நண்பனொருவ னுக்கு ஒரு தவறான வாக்கைக் கொடுத்து விட்டுப் பின் அதனை நிறைவேற்றும் பொருட்டுப் பல சூது வஞ்சனைகளைச் செய்யத் தயாராகும் நிலை யினராவாரோ? என்ற வினாவை எழுப்புகின்றது. இராமன் தான் அறிவில்லாது கொடுத்த சபதத்தை நிறைவேற்றக் கள்ளத்தனம் செய்தனன். இதை எவரும் மறுக்க முடியாது. இதை நமது அய்யங் காரே முன் பல இடங்களில் குறித்திருக்கிறார். அவற்றை மறந்து இவர் இங்கே இப்படி எழுதியது வியப்பே!

இராவணன் சுகசாரணர்களை வேலையி லிருந்து நீக்கியவிதம் மிக வியப்பே இது அவனை இழிவுபடுத்த எழுதிய அறிவற்றார் கூற்றாகவே இருக்கிறது.

சுகசாரணரும், சார்த்துலனும் வானரரைப் பற்றிக் கூறிய வரலாறு கவனிக்கத் தகுந்தது. வரு ணனுக்கும், அக்கினிக்கும், காற்றுக் கும், எமனுக் கும், பிற தேவருக்கும் அவர்கள் பிறந்தனரெனக் கூறப்பெற்றனர். அக்கினி தீயாயிற்றே தீ ஒரு பெண்ணைக் கூடினால், அப்பெண் ணின் உடல் எரிந்து போகாதா? பின் அவள் பிள்ளை பெறுவது எங்ங்ணம்? தீ, காற்று, நீர் இவர் களுக்கு மக்கள் உருவம் உண்டோ? காற்றுப்படாத இடமும் உண்டோ? அப்படியாயின், உலகில் கற்புடைய மங்கையரே இலராவரே? காற்றுப் படாத உறுப்பும் நமது உடலில் உளதோ? நமது உடலின் உள்ளேயு மல்லவா காற்றுப் போய் வருகிறது? இச்செய்திக ளெல்லாம் ஒருபுறமிருக்க, மிக வியப்பான செய்தி எமனும் சில பெண்களைக் கலந்து பிள்ளை பெற்றான் என்பதே எமன் ஒருவரிடம் வருகிறான் என்றால், என்ன பொருள்? அவர் இறக்கிறார் என்பதல்லவா? எமன் வந்து சேர்ந்த பெண்கள் எத்தகையராவார்? அவர்கள் பிள்ளை பெறுவது எப்படி?

எல்லாம் அறிவுக்குக் கொஞ்சமும் பொருத்தமில்லாப் பொய்யுரைக ளாகவே இவை இருக்கின்றன. இதுகாறும் இப் பொய்யுரைகளை மக்கள் எங்ஙனம் நம்பி வந்தன ரென்பது வியப்பாகவே இருக்கிறது. அறியாமைக்கும் ஏமாற்றத்திற்கும் ஓர் எல்லையே கிடையாது போலும் இத்தனையும் ஆரியர் தமக்கு உதவி செய்த வானரரைப் பற்றிச் செய்ந்நன்றி மறந்து கூறுகின்றனரே, இவர்கள் உத்தமமான தமிழ் மக்களுக்குப் பிறந்தவராயிருந்தும், நமது இனத்தவரான இராவணாதியருடன் போர் செய்து, அந்நியனாகிய இராமன் அவர்களைக் கொல்வதற்கு, உதவி செய்தனரே! ஆதலின் இக்குலத்தைக் கெடுத்த கோடரிக் காம்புகளாகிய வானரரைப்பற்றி ஆரியர்கள்கூறும் இச்செய்திகள் உண்மையே போலும்

இருந்தாலும், எல்லாரையும் அவனுக்குப்பிறந்தவன் இவனுக்குப்பிறந்தவன் என்று கூறுவது வெறுக்கத்தகுந்த நன்றி கெட்ட செயலே இத்தனையும் இந்த வானரருக்கு வேண்டும் மக்களைக் குரங்காக்கினர் இவர்கள் தம் வாலைச் சுழற்றிக் கொண்டிருந்தனராம் ஆதலின் இவர்கள் தமக்குப்பின் புலிவேஷக்காரர்களைப்போலப் பொய்வாலை வைத்துக் கட்டிக் கொண்டிருந்தனரோ என அய்யுற வேண்டியதாயிருக்கிறது. இக்காலத்தில் பண்டிகைகளில் வீரர்கள் புலிபோல வேடம் கொண்டு வால்களை வைத்துக் கட்டிக்கொண்டு வருகிறதை நாம் கண்ணாரக் காண்கின்றோமல்லவா? நான்முகன் கொட்டாவி விடும்பொழுது, அவனுடைய முகத்திலிருந்து பிறந்தவன் சாம்பன் என்று வால்மீகி கூறுகிறார். கொட்டாவி விடுபவனுடைய முகத்திலிருந்து பிறந்தவன் சோம்பேறியாகத்தானே இருப்பான்? நான்முகன் முழுச் சோம்பேறி போலும் அதனாலல்லவா கொட்டாவி விட்டிருந்தான்! அவனுடைய முகத்தில் சாம்பன் பிறந்தானென்றால், அவ்விடத்தில் பிள்ளை பெறும் பெண்குறி இருத்தல் வேண்டும். நான்முகன் ஆணா பெண்ணா? பெண்ணேயாயினும் முகத்தில் குறியேது? இருந்தாலும் அதனில் பிள்ளையுண்டாக்கிய ஆண் யார்? திருமாலையாவது மோகினியாகிப் பெண்ணுருவந்தாங்கி சிவனால் சேரப்பட்டுப்பிள்ளையைப் பெற்றான் என்று கதைகள் புராணங்களில் உள. நான்முகன் பெண்ணுருவாகிப் பிள்ளையைப் பெற்ற கதை எங்கும் இல்லை. அப்படியிருக்க அவன் முகத்தின் வழியாகச் சாம்பனைப் பெற்றான் என்று இங்கே நாம் காண்பது வியப்பாகவே உள்ளது. மேலும், நான்முகன் முகத்திலுள்ள பெண் குறிகளிலிருந்துபார்ப்பனரையும், நெஞ்சிலுள்ள பெண் குறியிலிருந்து கூடித்திரியரையும், அரையிலுள்ள பெண் குறிகளிலிருந்து வைசியரையும், காலிலுள்ள பெண்குறிகளிலிருந்து சூத்திரரையும் பெற்றான் என்ற கதையைப் போலல்லவா இது இருக்கிறது? இத்தனை பிள்ளைகளையும் பெறுவதற்கு எத்தனை மாப்பிள்ளைகள் வேண்டும்? அவர்களுடைய குறிகள் எங்கெங்கு இருந்தனவோ இதற்கு விடையாகப் புராணக்காரர் இன்னும் கதைகட்டி விடவில்லை என்னே அறியாமை இக்கதைகளையும் உலகம் நம்பி மகிழ்கின்றதே அறியாமைக்கும் ஓர் அளவில்லை போலும் இதுபற்றிய கம்பர் போக்கைப்பின்னர் ஆராய்வோம். இனிமேற் செல்லுதும்.

- தொடரும்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner