எழுத்துரு அளவு Larger Font Smaller Font

யுத்த காண்டம்

பத்தாம் அத்தியாயம்

பின் தெரியும் என்று சொல்லிப்பறந்து போயினன். வானரர் களிப்புமிகுதியால் துள்ளிக் குதித்தனர். இதை அறிந்த இராவணன், தூமிராக்கனைப் போருக்கனுப்பினான். இவ்வரலாற்றை ஆராய் வோம்.

இது முதல்நாள் பகலும் இரவும் நடந்த சண்டை. இதில் அரக்கரால் வானரர் பட்டபாடு சொல்லும் தரமன்று. அவர்கள் புல் அசைந்தாலும் பகைவரென அஞ்சி நடுங்கினரெனவும், வீட ணன் வருவதுகண்டு இந்திரசித்தனோ எனப் பதறி ஓடிப் போக வேண்டு மெனத் தனியே பேசிக் கொண்டனரெனவும் வெட்ட வெளிச்சமாகத் தெரிய வருகிறது. இலக்கு வனும் இராமனும் ஒரு வரையொருவர் பார்த்துப் புலம்புகின்றனர். இராமன் பிழைக்க மாட்டானென இலக்குவன் துணிகிறான். இவ்வாறு படாதபாடு பட்டுப் பதறி நடுங்குகின்றவர்கள் தெய்வத்தின் தோற்றமாம்! இத்தகைய பக்தர்களைத் தெய்வமே எனச் சிலர் எண்ணுகின்றார்களே! என்னே அறி யாமை? கருடனாகிய அவர்களுடைய வாகனம் தோன்றி யவுடனே நாகங்கள் ஓடிவிட்டனவாம். கருடன் இராம இலக்குவரை மார்போடு தழுவிய உடனே அவர்களுடைய உடலில் இருந்த காயங்கள் மறைந்தனவாம். என்னே தெய்வத் தன்மை? கேவலம் ஒரு பறவை தன்னை வாகனமாக உடைய கடவுளாருக்கு ஏற்பட்ட துன்பங்களை நீக்கிக் காப்பாற்றியதாம் அப்போது தெய்வத் தன்மை யாரிடம் உள்ளது? கருடன் தெய்வமா? இராமன் தெய்வமா? கருடனே இராமனுக்குத் தெய்வம். அதனால் இராமன் அதன் காலில் விழுந்து அதைக் கும்பிட வேண்டியதுதான் அல்லவா? கருடன் இருமுறை இராமனை மார்போடு தழுவுகிறதாம். ஏன்? இராமன் தனது வாகனமாகிய ஒரு பறவைகூடத் தன்னைத் தழுவ இடங்கொடுக்கின்ற னன். என்னே! அவன் அருள்! தெய்வமாகிய இராமனால் முடியாதது கேவலம் ஒரு பறவையால் முடிந்ததென்பது எவ்வளவுதூரம் நம்பத்தக்கதாக உள்ளது? இராமன் தான் எடுத்த மனித உடலுக்கேற்ப அறியாதவன்போல் நடந் தான் என்றால், எப்படியும் அவனை அறியாமை பற்றி இருந்த தென்பதில் தடையில்லை. கருட னைக்கூட நீ யார் என வினவுகிறான். இவ்வளவு அறிவீனமா அவனிடம் குடி கொண்டிருந்தது? தெய்வ உருவுடன் அது தோன்றிய போதும், அவனால் அதை அறிய முடியவில்லை! இனி கம்பர் புரளியைக் காண்போம்.

இவ்வரலாற்றை முதலிலே கூறினால் இராம னாதியருக்கு மிகவும் குறைவு உண்டாகுமென எண்ணியே கம்பர் இக்கதையை முதலில் கூறாது மறைத்து விடுகின்றார். அவர் இராவணன் தோற் றத்தை முதலில் கூறி, இராமனுக்குப் பெருமை தேடுகிறார். இக்கதையைக் கும்பகர்ணனும் அதிகாயனும் இறந்தபின், நாகபாசப்படலம் எனத் தனியே கூறுகிறார் அவர்.

அதில் அவர் வால் மீகிக்கு மாறாக இராமன்மேல் நாகபாசம் பட வில்லை என்றும், இலக்குவனையே அது பிணித்ததென்றும் கூறி உலகை ஏமாற்றுகிறார். கருடன் தோன்றியவுடனே இராமன் மேலிருந்த பாசம் நீங்கிற்றெனக் கூறினர் வான்மீகர். கம்பரோ, கருடன் இராமனைத் துதித்துக் கொண்டே அங்கு வந்து தோன்றுகிறதெனக் கூறுகிறார். இவ்வாறு அவர் எங்கெங்கெல்லாம் இராமனாதியருக்கு இழுக்கு வருகிறதோ அங்கங்கெல்லாம் மறைத்துப் புதுக்கதைகளைக் கூறுகிறார். இராவணாதியருக்கோ இழுக்கு வராத இடங்களிலும் வந்ததாகப் புதுவது புனைகிறார்.

இறந்தவர் போலக் கிடந்த இராமனாதியரைச் சீதைக்கு இராவணன் பூ விமானத்தில் ஏற்றிக் காட்டுகிறானெனக் கூறிய கதையைக் கம்பர் முற்றிலும் மறைத்து விடுகிறார். ஆனால், அவர் புதிதாக நான்முகன் கணையால் அவர்கள் பிணிப்புண்டு கிடக்கும் இடத்தில் பிராட்டிகளின் காண்படலம் என ஒரு கதை கட்டிப் பாடுகிறார். என்னே! கம்பர் இராமனாதியரிடம் கொண்ட பற்று? தகாத இடத்துப் பற்று? உண்மை விளங்கும்போது, அறிஞரால் எள்ளி நகையாடற்பாற்று வானரர் வீடணனைக் கண்டு கலங்கியது முதலிய பல செய்திகளை அவர் மறைத்தனர்.

இராமனாதியர் எழுந்த செய்தியை அறிந்த இராவணன், இந்திர சித்தனை அணுகிப் போருக்குப் போகத் தூண்டியதாகவும், அதற்கு அவன் மறுத்து உடல் அலுப்பு நீக்கி மறுநாள் போவதாகக் கூறினன் எனவும் கம்பர் பொய் கூறுகிறார். ஏனெனில், இந்திரசித்தன் இராமனாதியரைப்படாதபாடு படுத்தினாலும், அவனுக்கு மிகுந்த அலுப்பு உண் டாயிருக்கிறது என்பதைக் காட்டி, இந்திரசித்த னைப் பேடியாக்க வேண்டுமாம். என்னே இவர் தம் வஞ்சநெஞ்சம்? இதனாலெல்லாம் உலகம் ஏமாந்துவிடுமா? உண்மை என்றாவது ஒரு நாள் வெளிப்படுமல்லவா? பொய் என்றைக்காவது வெளிப்பட்டு அழியும் இவ்வாறு கம்பர், போர் முறைமையிற்கூடப் பொய்ம்மையை அளவு கடந்து கலக்குகிறார். இனிமேற் செல்லுதும்.

பதினொன்றாம் அத்தியாயம் (சருக்கங்கள் 51 முதல் 58 முடிய)

தூமிராக்கன் படையோடு தோன்றிப் பெரும்போர் செய்து அனுமானால் மடிந்தான். அவனைப்போலவே வச்சிரதமிட்டிரன், அங்கத னோடு போர் செய்து இறந்தான். பின் அகம்பனன் தோன்றி, அனுமானால் கொல்லப்பட்டான். அதன்பின் இராவணனால் சேனைத் தலைவ னாகிய பிரகதத்தன் அனுப்பப்பட்டான். அரக்க வீரர் தீயில் ஒமம் செய்து, பிராமணர்களைப் பூவால் பூசித்து வணங்கி, இராவணனையும் கும்பிட்டு அவனை வந்து சூழ்ந்தார்கள். அரக்கர் சேனைத் தலைவனாகிய பிரகதத்தன் கடும்போர் புரிந்தான். அவனை வாணர சேனைத் தலைவனாகிய நீலன் எதிர்த்துக் கொன்றான்.

இச்செய்தி கேட்ட இராவணன், தானே போருக்குச் சென்றான். தன்னிடம் வினாவிய இராமனுக்கு வீடணன் இராவணாதியராகிய இந்திரசித்தன், ஆதிகாயன் முதலியோரையும் இராவணனையும் குறித்துக் காட்டினான். இராமன் இராவணனைப் பார்த்து, “என்ன காந்தி! இலங் கேசன் மிகப் புகழுடையவன் என்று தோன்று கிறது. நடுப்பகலில் விளங்கும் சூரியனைப் பார்ப் பது எப்படி அசாத்தியமோ, அப்படி இவனைப் பார்க்கக் கண் கூசுகிறது. இவனுடைய உடல் ஒளியால் சூழப்பட்டிருப்பது எனக்குத் தெரிகிறது. வேறு யாருக்கும் இவ்வொளி கிடையாது என்று புகழ்ந்தான்.

சுக்கிரீவன் இராவணனோடு எதிர்த்து அடி பட்டுக் கீழே விழுந்து மூச்சற்றான். நளன் முதலிய தலைவர்களும் அடிபட்டு விழுந்தார்கள். அது கண்டு இராமன் போரிடச் சென்றான். அவனை இலக்குவன் தடுத்துத் தானே சென்றான். அவ னுக்கு முன் அனுமான் சென்று இராவணனால் அடிபட்டுப்புத்திகலங்கிநின்றான். இராவணன் அம்பால் நீலனை அடித்துத் தள்ளி இலக்குவன் முன்வந்து போர் செய்து, சிறிது நேரத்தில் வில்லை யிழந்து ஒரு சக்தியை ஏவினான். அது இலக்கு வனுடைய மார்பில் ஊருடுவ, அவன் கீழே விழுந்தான். இராவணன் அவனைத் தாக்க முயன்றான். ஆனால் முடியவில்லை. அப்போது அனுமான் அவனை அடித்துத்தள்ளி இலக்கு வனைத் தூக்கிப் போய் இராமன் முன் சேர்த்தான். இலக்குவன், திருமாலின் அமிசமென நினைக்கப் புண் ஆறித் தெளிந்தான்.

இராமன் இலக்குவனை எதிர்த்து, அனுமான் மேல் ஏறி அம்பெய்து, அவனுடைய தேர், வில் முதலியவற்றைச் சிதைத்து, இராவணனுடைய முடியையும் நொறுக்கினான். இராமன், “இரா வணா! நீ களைத்துப் போனாய். நாளைக்கு வேறு தேர் தேடிச் சண்டைக்கு வா, இன்று போ என்றான். இராவணன் தோற்று இலங்கையுள் சென்றான். இவ்வரலாற்றை ஆராய்வோம்.

ஆரியப் பார்ப்பனருடைய சூழ்ச்சியைப் பாருங்கள்! அரக்கர் போருக்குப் புறப்படும்போது, பிராமணர்களைப் பூக்களால் பூசித்து வணங்கியே புறப்பட்டார்களாம்! பார்ப்பனரைக் கண்ட கண்ட இடங்களிலெல்லாம் அடித்துக் கொன்றவராகக் கூறப்படும் அரக்கர், அவர்களைப் பூசித்தனர் என்பது எங்ஙணம் பொருந்தும்? முன்னுக்குப்பின் முரணான இச்செய்தியை இக்கதையிடை நுழைத்து வைத்ததன் நோக்கம் என்ன? அரக் கரும்கூடச் சமயங்களில் தம்மைப் பூசித்து வந் தனர் என்பது கூறி, அவர்களிடையும் பொருள் பறித்துத் தின்று கொழுக்கும் நோக்கத்தோடு இங்ங்னம் எழுதினவராதல் வேண்டும்

இராமன் இராவணனைப் புகழ்ந்த செய்தி களைப் பாக்கும்போது, இராவணனுடைய அழகும் ஒளியும் சொல்லுந்தரமன்று எனத் தெரிகிறது. அவனோடு எதிர்த்தார் அனைவரும் கீழே விழுகின்றனர். (தொடரும்)

இவ்வாறு பகைவனாகிய இராமனாலேயே பெரிதும் புகழப் பெறும் இராவணனை அறிவில்லாமல் இகழ்வாரும் உளரே! இராவணனுடைய பேரழகை முன்னர் அனுமான் முதன்முதல் சீதைக்கு முன் அசோகவனத்தில் அவனைக் கண்டபோது விவரித்துக் கூறப் பெற்றது.

பெருந்தவம் செய்தவனாகிய இராவணனைச் சேர்ந்தவர்கள் அனைவரும் வானரத் தலைவர்களை எதிர்த்து மடிந்ததாகவும், ஆனால் இராமனுடைய வானரத் தலைவர்கள் அனைவரும் இராவணாதியரை எதிர்த்து அடிபட்டு விழும்போதெல்லாம் மூச்சற்று விழுந்து கொஞ்ச நேரம் கழித்துத் தெளிந்து எழுந்தார்கள் என்றும், அவர்களில் ஒருவராவது சாகவில்லையென்பதாகவும் கூறப்படுகிறார்கள். இதனால் இக்கூற்றுகள் அனைத்தும் நம்பமுடியாத பொய்யேயாக உள்ளன என அறியலாம். போரில்

(தொடரும்)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner