எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

யுத்த காண்டம்

இவ்வாறு பகைவனாகிய இராமனாலேயே பெரிதும் புகழப் பெறும் இராவணனை அறிவில்லா மல் இகழ்வாரும் உளரே! இராவணனுடைய பேர ழகை முன்னர் அனுமான் முதன்முதல் சீதைக்கு முன் அசோகவனத்தில் அவனைக் கண்டபோது விவரித்துக் கூறப் பெற்றது.

பெருந்தவம் செய்தவனாகிய இராவணனைச் சேர்ந்தவர்கள் அனைவரும் வானரத் தலைவர் களை எதிர்த்து மடிந்ததாகவும், ஆனால் இராமனு டைய வானரத் தலைவர்கள் அனைவரும் இரா வணாதியரை எதிர்த்து அடிபட்டு விழும்போதெல் லாம் மூச்சற்று விழுந்து கொஞ்ச நேரம் கழித்துத் தெளிந்து எழுந்தார்கள் என்றும், அவர்களில் ஒருவ ராவது சாகவில்லையென்பதாகவும் கூறப்படுகிறார் கள். இதனால் இக்கூற்றுகள் அனைத்தும் நம்ப முடியாத பொய்யேயாக உள்ளன என அறியலாம். போரில் இராவணாதியர் பலர் மடிந்திருக்கலாம். ஆனால், இராமனாதியரில் ஒருவரேனும் மடிய வில்லை. சாதாரணக் குரங்குகள்தாம் மடிந்தன எனச் சொல்லுவது எவ்வாறு அறிவிற்குப் பொருந் தும்? இராமனைச் சேர்ந்தார் எழுதிய இக்கதையில் உண்மை எங்ஙனம் சொல்லப்பெறும்? களைத் திருந்த இராவணனுடைய முடியை அடித்துத் தள்ளித் தேரையும் வில்லையும் நொறுக்கி, அவன் தனியே தரையில் நிற்பதை நோக்கி இராமன், இன்று போய், நாளைவா என்று கூறினனாம் என்னே இராமனுடைய கருணை? யாதொரு தீமையும் புரியாத கிழவியாகிய பெண்மணி தாடகையைக் கொன்று கிடத்திய இராமன், தன் மனைவியையே தூக்கிச் சென்று வைத்திருந்த வீரனாகிய இராவண னிடம் இங்ங்ணம் கூறினனென்பது நம்பும் தகை யதா? இராவணனைத் தூங்கும்போதுகூடக் கொலை புரியச் சித்தமான இராமன், இப்படி நடந்தான் என்பது முழுப் பொய்யேயாம். இதுஇராமனுடைய கொடுந்தன்மைகளை மறைக்க ஆரியர் செய்து வைத்த பொய்ம்மையே என்பது துணிவு. இராவ ணன் தோற்றுப் போயிருக்கலாம். தோல்வியும் வெற்றியும் ஒருவர் பங்கல்லவே இதற்காக இவ்வாறு அவனைப்பற்றிமானக்கேடாகவும், இராமனைப் பற்றி உயர்வாகவும் பொய் கூறுவதா? சத்திவேலால் தாக்குண்டு விழுந்த இலக்குவனை இராவணனால் தூக்க முடியவில்லையாம்! அனுமான் எளிதில் தூக்கி இராமன்முன் வைத்தானாம். ஏனெனில், இலக்குவன் தன்னைத்திருமாலே என எண்ணின னாம்! இது காரணமாயின் அவனை அவ்வேல் ஏன் தாக்கிற்று? அது தன்னை தாக்குவதன் முன் தடுத் துத் தன் தெய்வத் தன்மையை அவன் காட்டியி ருக்கக் கூடாதா? அதனால் அவ்வேல்பட்ட புண் கூட ஆறிவிட்டதாம் உலகை ஆரியர் ஏமாற்றுகின்ற வழிமிக அழகிது நிற்க, கம்பர் போக்கைக் காண் போம்.

தூமிராக்கன் முதலிய வீரரைத் தனித்தனி ஒருவர்பின் ஒருவராக ஏவி, அவர்கள் மடிந்தபின் சேனைத் தலைவனாகிய பிரகதத்தனை ஏவி, அவனும் இறந்தபின் இராவணன், போருக்குப் புறப்பட்டானென வால்மீகிக்கூற, கம்பர் அவர்கள் அனைவரையும் ஒரே காலத்தில் ஏவ, அவர்கள் பல திசைகளிலும் சென்று மடிந்தனர் என்றும், பின்னர் இராவணன் புறப்பட்டனனென்றும் கூறு கிறார். அவர் அவ்வீரர் பெயர் மாற்றமும் செய்தார். இராவணனை இராமன் புகழ்ந்த செய்திகளைக் கம்பர் மறைத்தார். இனிமேற் செல்லுதும்.

பன்னிரண்டாம் அத்தியாயம்

(சருக்கங்கள் 59 முதல் 63 முடிய)

இராவணன் அரண்மனையை அடைந்து கவ லைப்பட்டு, நாற்பது நாள்களுக்குமுன் தன்னுடன் மந்திராலோசனை செய்து தூங்கச் சென்ற தன் தம்பி கும்பகர்ணனை எழுப்பச் சொன்னான். சேவகர்கள் கும்பகர்ணன் விழித்தவுடன், உண்பதற்கு எருமை, பன்றி முதலிய மிருகங்களின் புலாலையும் உணவை யும் மிகுதியாகக் குவித்துவைத்துக் கொண்டு, அவனைப் பலவிதமாகத் தொந்தரவு செய்து எழுப்பினார்கள். ஒன்றாலும் முடியவில்லை. பின் பல ஆயிரம் யானைகளை அவன்மேல் செல்ல விட்டார்கள். அப்போது அவனுக்குக் கொஞ்சம் உணர்ச்சி உண்டாகி எழுந்தான். அவன் பலவற் றையும் உண்டு குடித்து நடந்த செய்தியை அறிந்து இராவணனைக் காண வந்தான்.

விண் அளாவிய உருவுடன் அவன் வருவ தைக் கண்ட குரங்குகள் அஞ்சி ஒட, இராமன் அவனை யார் என வினவினான். வீடணன், “இவனே கும்பகர்ணன். இவன் சிறுபிள்ளையா யிருக்கும்போது, பல ஆயிர உயிர்களை நாடோ றும் தின்று வந்தான். அதனால் நான்முகன் தன் பேரனாகிய இவனைப் பிணம்போலாகச் சபித் தான். பிறகு இராவணன் பணிந்து வேண்ட, நான் முகன் அவனைக் குறைந்தது ஆறுமாதத்திற்கொரு முறையாவது விழிக்கும்படி நெடுந்துக்கம் தந்தான். இவனை வெல்வார் யாரே? என்றனன்.

இராவணன் கும்பகர்ணனை நோக்கி, “எனக்கு ஒரு மனிதனால் துன்பம் வந்தது. நீ சென்று அவனைக் கொன்று வா. என்று பலவாறு வேண்டினான். கும்பகர்ணன், முன்னால் மந்திரி களோடு ஆலோசித்துச் சீதையை எடுத்து வந் திருக்க வேண்டும் அல்லது இராமனைக் கொன்று பின்னரே அவனை எடுத்து வர வேண்டும். இதற்கு மாறுதலாகச் செய்து சிந்திப்பதில் பயன் என்ன? ஏன்? வீடணன் சொன்னபடிச் செய்ய லாமே என்றான். இராவணன், எனக்கா ஆலோ சனை சொல்லுகிறாய்? அழகு இப்போது உனக் குப் போர் செய்வதற்கு விருப்பமிருந்தால் உடனே செய் என்று சொன்னான். இராவணனுடைய கோபத்தை அறிந்த கும்பகர்ணன்,

“அண்ணா! கவலைப்பட வேண்டாம். நான் உங்கள் உடன் பிறந்தவனல்லவா? உங்களுடைய இன்ப துன்பங்களுக்கு உரிமையுடையவனல் லவா? இதோ அந்த இராமனையும் பிறரையும் கொன்று வருகிறேன் எனப்புகன்றான். மகோ தரன், கும்பகர்ணா! என்ன வாய்மதம் பேசுகிறாய்? நாங்கள் சிந்தித்தே செய்தோம். அரசே நாங்கள் இராமனைக் கொல்லப் போவதாகப் பறை சாற்றுங் கள். நாங்கள் போரிட்டு அவனைக் கொல்கிறோம். தவறினால் அவனைக் கொன்றுவிட்டதாக இங்கே வருகிறோம். நீர் அதை விளம்பரம் செய்யும். சீதை இராமனை இறந்ததாக எண்ணி உம்மைச் சேர்வாள் என்றான். கும்பகர்ணன், அடே மகோதரா! உன்னைப் போன்ற அமைச்சரா லல்லவா அரசர் இக்கதியடைந்தார். அண்ணா கவலைப்பட வேண்டாம். நீங்கள் வரவழைத்துக் கொண்ட தீமையை நான் விலக்குகிறேன் என்ற னன். இராவணன், தம்பி இந்த மகோதரன் பயங் கொள்ளி, உன்னைப் போலும் வீரரும் சிறந்த குணத்தாரும் உளரோ? போருக்குப் புறப்படு என்றான். கும்பகர்ணன் தனியே போருக்குப் போக விரும்பினான். ஆனால், இராவணன் பெரும்படையைத் துணையாக அனுப்பினான்.

கும்பகர்ணன் போருக்குச் சென்று, வானரரை யெல்லாம் கொன்று தின்றான். அவர்கள் அவ னைக் கண்டு ஓடினார்கள். அவன் சுக்கிரீவனை ரிக்ஷரசசின் மகன் தானே என இகழ்ந்து அடித்துத் தூக்கிச் சென்றான். சுக்கிரீவன் ஊருக்குப் போன வுடன், தெருவின் குளிர்ச்சியால் மூர்ச்சை தெளிந்து, கும்பகர்ணனுடைய மூக்கின் நுனியைக் கடித்துக் காதைக் கிள்ளி ஓடிவிட்டான். ஓயாமல் கும்பகர்ணன் வானரரைத் தின்றான். அவர்களில் சிலர் அவன் மூக்காலும் காதாலும் வெளிவந்தனர்.

இராமனுக்கும் கும்பகர்ணனுக்கும் கடும்போர் நடந்தது. இராமன் அவனுடைய கையை இரும் புலக்கையுடன் அம்பால் வெட்டினான். அவன் மற்றொரு கையால் ஒரு மரத்தைப் பிடுங்க, இராமன் அக்கையையும் அறுத்தான்.

(தொடரும்)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner