எழுத்துரு அளவு Larger Font Smaller Font

யுத்த காண்டம்

பனிரெண்டாம் அத்தியாயம்

கை கால்கள் அற்றும் அவன் இராமனை விழுங்க ஓடி வந்தான். அவனுடைய வாயில் அம்புகள் வந்து, விழுந்து நிரம்பின. பின்னும் அவன் அறுந்த கால் முண்டங்களாய் வந்து வானரரைத் தின்றான். பின் இராமன் ஓர் அம்பை விடுத்து அவனுடைய கழுத்தை அறுத்தான். கும்பகர்ணன் மடிந்தான். அவனுடைய உடலில் ஒரு பகுதி கடலில் விழுந்தது. இராவணன் அச்செய்தியைக் கேட்டு, அளவற்ற துன்பத்தை அடைந்து அழுதான். இவ்வரலாற்றை ஆராய்வோம். கும்பகர்ணன் பல விலங்குகளைத் தின்றானென்றும், போரிலும் பல குரங்குகளை விழுங்கினானெனவும் சொல்லப்படுகிறான்.

மேலும், வீடணன் நாக்கால் அவன் சிறுவ னாயிருந்தபோது, பல உயிர்களை விழுங்கியமையினாலே நான்முகன் அவனுக்கு நெடுந் தூக்கத்தைக் கொடுத்தானென்றும் சொல்லப்படுகிறான். இதெல் லாம் பிற்கால ஆரியர் பொய்க் கதைகளே. குதிரைகளையும், பசுக்களையும், கழுதைகளையும், ஆடுகளையும், மனிதர்களையும் கொன்று,பின் வேள்விப்பேராலும் கொன்று தின்று வந்த ஆரியருக்குத் தாம் புலாலுண்ணுவது கேவலமெனத் தமிழ் மக்கள் கூட்டுறவால் தெரியவர, அதனால் பன்றிகளையும் எருமைகளையும் சுட்டுத் தின்ற வனாக வால்மீகியால் கூறப்படும் இராமனுக்கு முன் இராவணாதியரையும் புலாலுண்போரே எனக் காட்டுவான் துணிந்து, அவர்கள் வால்மீகி வாக்குகளையும் மாற்றி இடையிடையே தமது மனக்கோள் செருகி வைத்தனர். இராவணனாவது, இந்திரசித்தன் முதலிய பிற வானரராவது இவ்வாறு கூறப்படுகின்றனரா? இல்லை, இல்லை. இவன் ஒருவனை மட்டுமே முரடனென்று இத்தகைய பொய்யுரைகளைப் புனைந்து வைத்தனர்.

இவர்களுடய பொய்யுரைகளை இன்னும் விளக்குவோம். கும்பகர்ணன் வானரர்களை விழுங்க, அவர்களில் பலர் அவனுடைய மூக்காலும் காதாலும் வெளி வந்தனராம். மூக்கால் ஒருவேளை வெளி வரலாம்! காதால் வெளிவருவது எங்ங்ணம்? வானரர்களோ பெரிய உருவினராகக் கூறப்படுகிறார்கள். அவர்கள் கும்பகர்ணனுடைய வாயில் போடப் பெற்று, அவனுடைய மூக்கு வழியாக வரவேண்டுமானால், அவனுடைய உரு எவ்வளவு பெரிதாக இருந்திருக்க வேண்டும்? இவ்வாறு பொய்யுரைத்த ஆரிய மக்களுக்கு அவர்களுடைய அறிவு இறந்தபட்டது போலும் படைப்புக் கடவுள் நான்முகன், அவனுடைய மகன் பிள்ளை பேரனே வீடணன். அவன் பல்லாயிர உயிர்களைக் கொன்று தின்றதற்காக நான்முகன் அவனைப் பிணம்போல விழச் சபித்தான் என்பது எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது? பேரன் இத்தகையனாயின், பாட்டனாகிய நான்முகன் எத்தகையனாக இருக்கவேண்டும்? நான்முகன் கடவுளாதலின், பல கோடி உயிர்களைக் கொன்று தின்றிருப்பான் போலும்!

இவ்விதமாகத் தீவனத்திற்கும் கும்பகர்ணன் இடையூறு செய்ததனாலேயே நான்முகன் தன் பேரனைச் சபித்தான் போலும்! நான் முகன் தான் பெற்ற பிள்ளையையே பெண்டாட் டியாக்கிக்கொண்டவன்தானே!

நான்முகன் சாபத்தால் கும்பகர்ணன் குறைந்தது ஆறு மாதங்கள் வரை தூங்கினானாம் அவன் பெருந் தூக்கமுடையவனாக இருந்திருக் கலாம். அதற்காக ஆறு மாதம் பத்துமாதம் தூங்கினான் என்றும், அவன் மேல் பல்லாயிரம் யானைகளை மிதிக்கவிட்டு அவனை இரா வணன் எழுப்பினான் என்றும் கூறும் செய்திகள் அறிவிற்கு உடன்பாடாமா?

கும்பகர்ணன் செய்தியறிந்து இராமனைக் கொல்லத் துணிந்தான், வீரமும் முரட்டுத்தனமும் ஓர் உருவெடுத்து வந்ததுபோல் பவன் இரா வணனிடம் சீதையைக் கொண்டுபோய் விடும் படிச் சொன்னான் என்பது பொருந்தாதச் செய்தியே. மகோதரன் கும்பகர்ணனை இகழந்தன னென்பதும் பொருந்தா உரையே.

கும்பகர்ணன் சுக்கிரீவனை ரிகூடிரசசின் மகன்தானே என இகழ்ந்தனனாம். ரிகூடிரசசின் வரலாற்றை முன்னர் விரித்தோம். அதனை இங்கே மொழிபெயர்ப்பாளர் சீனிவாசய்யங்கார் கூற்றால் விளக்குவோம். அவர் பக்கம் 255 இல் “ஒரு சமயத்தில் பிரம்மா கொட்டாவி விடும்பொழுது, ரிகூடிரசனென்ற வானரசிரேட்டன் உண்டானான்; அவன் ஒரு நாள் பிரமலோகத்தில் திரிந்து கொண்டிருக்கையில், ஓர் ஏரியில் வேடிக்கையாய் ஸ்நானம் செய்ய அதன் மகிமையால் தன் ரூபம் மாறி, ஓர் அப்சரசானான். அவனைக் கண்டு இந்திரனும் சூரியனும் ஆசைகொண்டு கையைப் பிடித்து இழுத்தார்கள். அப்பொழுது அவர்களுடைய வீரியம் கலங்கி, ஒன்று ரிகூடிரசசின் வாலிலும் மற்றொன்று கழுத்திலும் விழுந்தது.

முறையே வாலி, சுக்கிரீவனென்ற இரண்டு புத்திரர்கள் உண்டானார்கள். அதைக் கண்டு பிரம்மா சிரித்து, “நீ இந்தக் குழந்தைகளுடன் இதோ இருக்கும் ஏரியில் முழுகி, உன் வானர ரூபத்தை அடையக் கடவாய்” என்றார். ஆகையால், வாலி சுக்கிரீவர்கள் பிரம்மாவின் பவுத்திரர்கள்; ரிசுஷரசசின் புத்திரர்கள். சிலர் காசியபருக்குச் சூரியனும், சூரியனுக்குச் சுக்கிரீவனும் பிறந் தார்கள் என்று சொல்லுகிறார்கள். இப்படிச் சுக்கிரீவனுடைய பிறப்பைப்பற்றிப் பரிகாசம் செய்து, அவன் வாலியால் அடிபட்டோடினதைக் கும்பகர்ணன் சொல்லிக் காட்டினான் என்று எழுதியிருக்கிறார். இதை ஆராய்வோம்.

(தொடரும்)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner