எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பன்னிரண்டாம் அத்தியாயம்

(சருக்கங்கள் 59 முதல் 63 முடிய)

நான்முகன் கொட்டாவியிலிருந்து வானரன் தோன்றினானென்றால், நான்முகனுடைய வாயிலும் கொட்டாவியிலுமா பிள்ளை பெறும் உறுப்பு இருக்கிறது? அப்படியிருக்கிறதென்று வைத்துக் கொண்டாலும், அதில் பிள்ளை உண்டாக்கியவர்கள் யார்? ரிக்ஷரசசு குளத்தில் குளித்தவுடன் பெண்ணு ருவானதெப்படி? அவன் பெண்ணுருவானதைவிட அவன்தன் வாயிலிருந்து வாலியையும், கழுத்திலி ருந்து சுக்கிரீவனையும் பெற்றெடுத்ததுதான் மிக வியப்பாகும். நான்முகனாவது படைப்புக் கடவுள். அதனால் வாயிலிருந்தும் முகத்திலிருந்தும் காலிலி ருந்தும் பிள்ளைகளைப் பெறுவான். ரிக்ஷரசசுக்கு என்ன தெய்வத் தன்மை வந்தது? வாலிலும் கழுத் திலும் பிள்ளை பெற? சூரியனும் இந்திரனும் மிக அறிவுடைய வீரர்களே! ஏனெனில், பெண்ணுருவா கிய குரங்குகளிடம் காமம் கொண்டு, அதன் கையைப் பிடித்தனர்! நல்ல வேளையாக அவர்கள் அதைக் கூடுமுன்னர் அவர்களுடைய வீரியம் கலங்கிவிட்டதாம் அது வாலிலும் கழுத்திலும் விழுந்து பிள்ளை பெற்றது! வாலில் என்றமையால் பெண்ணுருவிலும் அது வாலுடையதாகவே இருந் தது. ஆனால் நான்முகன் அதை ஒரு குளத்தில் மூழ்கிக் குரங்குருக்கொள்ளச் சொன்னான். இது பொருந்துமாறெங்ங்ணம்? அறிவற்ற கதைகள்!

கும்பகர்ணனை இராமன் துண்டுதுண்டாக வெட்டிக் கொன்றான் என்ற இடத்து,நம் அய்யங்கார் ஒரு குறிப்பு எழுதுகிறார். அது கவனிக்கத்தக்கது (பக்கம் 263-264). அது வருமாறு: “யுத்த நீதியைப் பற்றின ஒரு சந்தேகம் இங்கே ஏற்படுகிறது. தாடகை யென்ற பெண்ணைக் கொன்றதும், காக்கையின் மேல் பிரம்மாஸ்திரத்தை விட்டதும், சத்துருவுடன் யுத்தம் செய்துகொண்டிருந்து களைத்த வாலியை மறைந்து பாணத்தால் கொன்றதும், சூர்ப்பனகை யைச் சித்ரவதை செய்யச் சம்மதித்ததும், நெடுநேரம் மகா வீரர்களுடன் யுத்தம் செய்து களைத்த இரா வணன் மயங்கியிருக்கும்போது, கிரீடத்தை உடைத் ததும், அங்கதன், சுக்கிரீவன், மாருதி, லஷ்மணன் முதலியவர்களை முறியடித்துக் களைத்திருந்த கும் பகர்ணனை அவயவம் அவயவமாகச் சித்ரவதை செய்ததும் தர்ம யுத்தமன்று. அவமானப்படுத்து வதையும் சித்ரவதை செய்வதையும்விட உடனே கொல்வது கருணையாகும். இந்தக் குரூர ஸ்வபாவம் சுத்த வீரனுக்கு உரியதன்று. பாலகாண்டம் 5 ஆம் சர்க்கத்தில், அயோத்தியிலுள்ள க்ஷத்திரியர்கள் சகாயமில்லாதவனை அடிக்கிறதில்லை. மறைந்து அடிப்பதுமில்லை என்று வால்மீகி சொல்கிறார். அவர்களுக்கு அரசனான இராமனைப்பற்றி இவ் விதமான சந்தேகம் ஏற்படலாமா? என்பதாகும்.

மேலே கண்ட குறிப்பைப் பார்க்கும்போது, அதில் நமது சீனிவாசய்யங்கார் இராமனை முழு அயோக்கியன் என்றே கூறுகிறார். இத்தகைய அயோக்கியனான இராமனையும் சிலர் நல்லவ னெனவும், அதிலும் தெய்வமெனவும் நம்பி வணங் குகின்றனரே! என்னே அறிவீனம்? இராமன் செய்த அயோக்கியத்தனங்கள் அத்தனையும் மேலே அய்யங்காருடைய குறிப்பில் தொகுத்திருப்பது காண்க.

கும்பகர்ணன் தன் அண்ணனுக்காக உயிரைக் கொடுத்தான். அயோக்கியனாகிய, வீடணனோ தன் அண்ணனையே கொன்றவனானான். பெரும்பா லும் நடுநிலையினராகிய நம் அய்யங்கார் பக்கம் 266 இல் பின் வருமாறு இதுபற்றி எழுதுகிறார். அது வருமாறு:- (கும்பகர்ணன்) “தன் அண்ணன் செய்தது பிசகென்று தெரியும், அழுத்தமாய்க் கண்டித்தான். பயப்படவில்லை. விபீஷணனும் அப்படியே செய் தான்! இராவணன் தன் பிடிவாதத்தை விடமாட்டா னென்று கண்டு, அவனுடன் பிறந்ததற்கும், அவ னால் எல்லாச் சவுக்கியங்களையும், பெருமைகளை யும் அடைந்ததற்கும், தன் அரசனென்ற முறைக் கம் தகுந்தபடி தன்னை யுத்தமென்ற யாகத்தில் பலியாகக் கொடுத்தான். தலை வெட்டப்படும் வரையில், பிரக்ஞையுள்ள வரையில் யுத்தம் செய்து வீரச் செயல்களைச் செய்தான். வீரஸ் வர்க்கத்தில் விளங்கினான். இவனல்லவா தர் மாத்மா? இவனல்லவா சுத்த வீரன்? விபீஷ ணனோ அண்ணன் திட்டின சாக்குக்கொண்டு சத்துருவைச் சரணமடைந்தான். அண்ணனுடைய மர்மங்களைச் சத்துருவுக்கு வெளியிட்டான். ராக்ஷஸ வம்சத்தை வேரறுத்தவன் இவனே. இராவணனல்ல. இவனில்லாவிட்டால் இராம னுக்கு ஜயம் கிடைப்பது சந்தேகமே. ராஜ்யத்திற்கு ஆசைப்பட்டு அண்ணனுக்கும் அரசனுக்கும் துரோகம் செய்த சுக்கிரீவனும் விபீஷணனும் நமக்கு வழிகாட்டிகளாவார்களா? பீஷ்மதுரோணா தியர் துரியோதனனுடைய நடத்தையைக் கண் டித்தார்கள். ஆனாலும் அவனுக்காக உயிரைக் கொடுத்தார்கள். மேலும், இராவண கும்பகர் ணர்கள் ஜயவிஜயர்களின் அவதாரம். சீக்கிரத்தில் வைகுண்டத்திற்குத் திரும்பிப் போனார்கள். விபீஷணன் அப்படியல்ல. ஆசைவைத்த ராஜ் யத்தை ஆளும்படி பூமியில் சிரஞ்சீவியாய் வைக் கப்பட்டான்.

மேலேகண்ட அய்யங்காருடைய குறிப்பால், கும்பகர்ணனே நமக்கு வழிகாட்டியாக இருக் கிறான் என்றும், சண்டாளர்களாகிய சுக்கிரீவனும், வீடணனும் ஒப்புயர்வற்ற அயோக்கியர்களா கையால், நாம் அவர்களைப் பின்பற்றி நடத்தல் கூடாதென்றும் தெரிய வருகிறது. இதனால் சுக்கிரீவனையும் வீடணனையும் புகழும் கம்பர் முதலிய வஞ்சகர்கள் நாட்டிற்குத் தீமை பயந்த பாவிகள் என்பது வெட்ட வெளிச்சம். இன்னும், அவர்களைப் புகழ்பவர்களும், கும்பகர்ணனை இகழ்பவர்களும் அறிவற்ற கொடும்பாவிகளே ஆவார்கள். நமது மொழி பெயர்ப்பாளர் போன்ற அறிஞர்கள் இங்ஙணம் உண்மையை எழுதி வைத்திருந்ததும், வஞ்சகர்கள் தமது வயிற்றுப் பிழைப்புக்காகக் கம்ப ராமாயணத்தைப் படித்து உலகை ஏமாற்றுகிறார்களே! என்னே அநியாயம்! இனி கம்பர் புரளியைக் காண்போம்.

கும்பகர்ணனை எழுப்பஇராவணன் ஆணை தந்த முன்னைய நாள் வரை, பல திசைகளிலுமுள்ள அரக்க வீரரை அழைத்துவர ஏவினனென்றும், மாலியவான் அவன்முன் வர அவன் மாலிய வானிடம் இராமனைப் புகழ்ந்தனனென்றும், அவனிடம் சீதையை விட்டு விடும்படி மாலிய வான் அறிவுறுத்தினனென்றும் அதனால் மகோ தரன் மாலியவானைக் கண்டித்து இராவணனுக்குக் கும்பகர்ணனை எழுப்பும்படிக் கூறினனென்றும் கம்பர் கூறுகிறார். இவை அனைத்தும் ஆதாரமற்ற பொய்யுரைகளே! யானைகள் மிதித்தலால் கும்பகர்ணன் எழுந்தானென்று கூறுகிறார். இது கம்பருடைய இழிகுணத்தைக் காட்டுகிறது. அரக் கர், உலக்கையால் கும்பகர்ணனுடைய கன்னத் தில் குத்தினர் என்று அவர் கூறுகிறார்.

கும்பகர்ணனை மகோதரன் கண்டித்தமை யைக் கம்பர் கூறவில்லை. மேலும், வால்மீகிக்கு மாறாக வீடணன் கும்பகர்ணனிடம் இராமனு டைய தூண்டுதலால் வந்து தன் பக்கம் சேர வேண்டிக் கொண்டானென்றும், கும்பகர்ணன் அதை மறுத்தானென்றும் அவர் கூறுகிறார். சுக்கிரீவனுக்கும் கும்பகர்ணனுக்கும் போர் நடப்பதைக் காணும்போதே கம்பர் சீதையின் சித்திரவனமுலையை (பாடல் 260) நினைந்து புகழ்கிறார். இத்தகைய மனநிலையும் உளதே!

இராமனைப் புகழ்வதும் பிறரை இகழ்வது மேதான் கம்பர் மனக்கோள். அதனால் அவர் எத்தகைய பாதகமான பொய்யுரைக்கும் அஞ்சார்.

(தொடரும்)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner